Sunday, October 23, 2011

Fight Club (1999) விமர்சனம்.




எட்வர்ட் நார்டன், மற்றும் பிராட் பிட், இணைந்து நடித்த இத்திரைப்படம் 'பைட் கிளப்' டேவிட் பிஞ்சர் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளியானது. (Chuck Palahnuik) சக் பலஹ்னயுக் 1996ஆம் எழுதிய 'பைட் கிளப்' என்னும் நாவலின் கதையை வைத்து, அதன் பெயரிலே திரைப்படமாக எடுக்கபட்டது.



'பைட் கிளப்' திரைப்படம் டிராமா வகையை சார்ந்தது, ஆனால் நல்ல ஒரு மிஸ்டரி & திரில்லர் போல் கதைக்களம் அமைத்திருப்பார்கள். இது ஒரு 'Cult' திரைப்படம்.

''நம் ஒரு நாள் இரவு செரியாக தூங்கவில்லை என்றால், அடுத்த நாள் முழுவதும், எதுலிலும் நம் மனது செரியாக இடுபடாது அல்லது அந்த வேலையை செரியாக செய்து முடிக்கமுடியாது. (தனிமையாக உள்ளவர்கள் தான் தூக்கமின்மையால், அதிகம் பாதிக்கபடுபவர்கள்).''  
    
Directed By : David Fincher
Produced By : Rose Grayson Bell, Cean Chaffin, Art Linson
Written By : Chuck Palahnuik
Screenplay By : Jim Uhls
Cinematography : Jeff Cronenweth
Music By : Dust Brothers, John King, Michael Simpson
Edited By : James Haygood
Cast : Brad Pitt, Edward Norton, Helena Bonham Carter, Robert Paulson, Richard Chesler

(Insomnia) தூக்கமின்மையால் பாதிக்ப்படும் 'எட்வர்ட் நார்டன்' படத்தில் இவருக்கு பெயர் எதுவும் கிடையாது. (Narrator) கதை கூறுபவரும் இவரே. மருத்துவர் இவருக்கு தூக்கமாத்திரை தர மறுத்து, அவனை உடற்பயிற்சி செய்யுமாறும் மற்றும் 'Support Group' செல்லுமாறும் அறியுரை கூறுகிறார். 
(Support Group : உடல் பிரச்சனை அல்லது மன பிரச்சனை உள்ளவர்கள் மற்றவர்களிடம் கூறுவது மற்றும் கட்டி பிடுத்துக்கொண்டு அழுவதும்)

'Support Group'பினால் நல்ல பயன்கிட்ட, அதை தொடர்கிறார். அங்கு புதிதாக வரும் 'மார்லா சிங்கர்' என்னும் பெண், இடைஞ்சலாக இருக்க, இருவரும் வெவ்வேறு இடங்களுக்கு மாறிமாறி செல்வதாக முடிவு எடுக்கப்படுகிறது. (ஆனால் இருவரும் அடுத்தவர் தொலைபேசி என்னை வாங்கிகொள்கிறாகள்)  

வேலை விஷயமாக வெளியூர் சென்று திரும்பும் பொது, விமானத்தில் 'டைலர் டர்டுன்' (Brad Pitt) என்னும் சோப்பு விற்பவனை சந்திக்கிறான். 

அவனுடைய 'Appartment' திரும்புகிறான். சற்று முன்னால் தான் அந்த 'Appartment'ல் வெடிவிபத்து நடந்ததால், டைலர் டர்டுன்'க்கு தொலைபேசியில் இதை தெரிவித்து, ஒரு பாரில் சந்திக்கிறார்கள். 
இருவரும் குடித்து முடித்து, வெளியில் வருகிறார்கள். அப்போது  'டைலர் டர்டுன்'  எட்வர்ட் நார்டன்'யிடம் என்னை பலமாக தாக்கு என கூறுகிறான். டைலரை தாக்குகிறான், இருவரும் சண்டையிடுகிறார்கள். இதை அங்கு இருக்கும் மற்றவர்களும் பார்கிறார்கள். இது அங்கு இருக்கும் அனைவர்க்கும் பிடித்து போக. இந்த சண்டையை தினமும் தொடர்கிறார்கள்.  
இந்த சண்டை அணைத்து ஊர்களுக்கும் பரவுகிறது.  இது ஒரு அமைப்பாக இயங்குகிறது, இந்த அமைப்புக்கு 'Fight Club' என பெயர், அணைத்து இடத்திலும்  'டைலர் டர்டுன்'  தலைமையில் இயங்குகிறது.  'பைட் கிளப்' அமைப்பிற்கு 'Rules' உள்ளது.


Rules :

  • 1.  You do not talk about FIGHT CLUB.
  • 2.  You DO NOT talk about FIGHT CLUB.
  • 3.  If someone says "stop" or goes limp, taps out the fight is over.
  • 4.  Only two guys to a fight.
  • 5.  One fight at a time.
  • 6.  No shirts, no shoes.
  • 7.  Fights will go on as long as they have to.
  • 8.  If this is your first night at FIGHT CLUB, you HAVE to fight.
(இந்த ரூல்ஸ்'னால் தான் எட்வர்ட் நார்டன்'க்கு படம் பார்பவருகும் (நமக்கும்) என்ன நடந்தது என்ன தெரியாமல் திரைக்கதை நகரும்).


'மார்லா சிங்கர்' போதையில் எட்வர்ட் நார்டன்'னுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருக்கும் பொது, நார்டன் ரிசிவரை அப்படியே வைத்து விட்டு போக, அதை எடுக்கிறான் டைலர் டர்டுன். பிறகு இவன் வீட்டில் இருவரும் உடலுறவு வைத்து கொள்கிறார்கள். ஆனால் தன்னை பற்றி எதுவும் 'மார்லா சிங்கர்'ரிடம் பேச வேண்டாம் என்று நார்டன்' னிடம் எச்சரிக்கிறான் அல்லது கூறுகிறான்.

பைட் கிளப், ''ப்ராஜெக்ட் மய்ஹெம்'' என்ற ஒன்றை ஆரம்பித்து, பல குற்றங்கள் புரிய ஆரம்பிகிறது. ஒரு நாள் திடிரென டைலர் டர்டுன், எட்வர்ட் நார்டன்'னிடம் கூட சொல்லாமல் சென்றுவிடுகிறான். 

எட்வர்ட் நார்டன்'னின் நண்பன் ஒருவனை போலீஸ் சுட்ற்றுக்கொன்றுவிடுகிறது. இதனால் அனைத்தையம் நிறுத்த வேண்டும் என்று நினைத்து, 'டைலர் டர்டுன்'னை தேடுகிறான்....... 
பிறகு என்ன நடந்தது என்பதை, படத்தில் பார்த்துக்கொள்ளவும். 

மிகவும் நேர்த்தியான ஒரு திரைக்கதை. 
Alien3, Seven, மற்றும் The Game, போன்ற திரைப்படங்களை இயக்கிய, அனைவரும் நன்கு அறிந்த டேவிட் பிஞ்சர் தான் இந்த திரைப்படத்தின் இயக்கனரும். இதற்கு பிறகும் பல நல்ல திரைப்படங்களையும் இயக்கியுள்ளர்.

இந்த படத்தின் ட்ரைலர் கிழே உள்ளது, கிளிக் செய்து பார்க்கவும்.


(இந்த திரைப்படத்தின் பாதிப்பால், U.Sல் நிறைய இடங்களில் இது போன்றே 'Illegal' பைட் கிளப் ஆரம்பிக்கப்பட்டன. ஒரு இரண்டு இடங்களில் வீட்டில் சுயமாக செய்த குண்டுகளும் வெடித்தன). 
  
இது மாதிரி திரைப்படங்கள் பார்க்கும்போது, சில விசயங்களை படத்தின் ஆரம்பத்திலேயே 'Guess' செய்துகொள்வோம். நானும் அப்படித்தான் ''Appartment வெடிவிபதிற்கு 'டைலர் டர்டுன்' தான் காரணம் என்று நினைத்தேன்!, படத்தின் ஒரு காட்சியிலும், 'டைலர் டர்டுன்' அதை நான் தான் செய்தேன் என்று கூறுவான். ஆனால்....... படத்தில் நிறைய காட்சிகளில் 'Clues' கொடுத்திருப்பார்கள். அதை இன்னும் செரியாக ஓர் அளவு கவனித்தால், நிங்களும் 'Guess' செய்துவிடலாம். 


3 comments:

  1. மனசை தொட்ட பதிவு..விமர்சனம்..தொடர்ந்து சிறந்த படங்களை எழுதுகிறீர்கள்..மனம் நிறைந்த் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. good review :)
    My tamil's a bit hazy, so took me a while to read it. I'm a huge fan of Fincher, and although opinions of critics are divided for this film, I'm a strong follower of this cult hit. If you're a true movie lover, watch a foreign language film by Alejandro Gonzales Innaritu, titled "Amores Perros". Not a single movie has kept me riveted to the seat each and every time I've seen it. Not even The Prestige :)


    If you can spare a few minutes, could you read a post of mine? And if you like it, give it a vote and leave a small feedback? I'd be much obliged, really :)


    http://www.indiblogger.in/indipost.php?post=90039

    ReplyDelete