Monday, November 21, 2011

Orphan (2009) விமர்சனம்.

ஒர்ப்ஹன் Jaume Collet Serra இயக்கத்தில் 2009'ஆம் ஆண்டு வெளிவந்த Psychological Thriller வகையை சார்ந்த திரைப்படம். 

எதிர்பார்ப்பே இல்லாமல் பார்த்த சில படங்கள் இதுவும் ஒன்று. ஹாரர் படம் தான் என்று நினைத்தேன், முதலில் பல காட்சிகளும் அப்படித்தான் நகர்ந்தது. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் தான் தெரிந்தது, இது ஒரு அழகான சஸ்பன்ஸ் திரைப்படம் என்று.

Rating : R
Genre : Mystery, Thriller

Produced By : Leonardo DiCaprio, Susan Downey, Jannifer Davisson Killoran, Joel Silver
Directed By : Jaume Collet Serra
Story : Alex Mace
Screenplay : David Johnson
Cinematography : Jeff Cutter
Music By : John Ottman
Editted By : Timothy Alverson

ஜான்'னுடைய மனைவி கேட், இவர்களுக்கு இரு குழந்தைகள் சிறுவன் டேனியல் மற்றும் சிறுமி மேக்ஸ். இவர்களுடைய மூன்றாம் குழந்தை இறந்து பிறக்கிறது. இந்த இழப்பினால் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகும் இருவரும் பேசி ஒரு குழந்தையை தத்து எடுப்பதாக முடிவு செய்கிறார்கள். தத்து எடுப்பதினால் இவர்களது கவலைகள் திரும் என்று நம்புகிறார்கள்.

இருவரும் ஒரு அனாதை இல்லத்தில், எஸ்தர் என்ற 9 வயது சிறுமியை தத்து எடுக்கிறார்கள்.

எஸ்தர்'ன் வரவு சிறுவன் டேனியல்'லுக்கு பிடிப்பதில்லை. சிறுமி மேக்ஸ்'ற்கு எஸ்தர்'ரை மிகவும் பிடித்து போகிறது. மேக்ஸ் எஸ்தர் சொல்லுவதை எல்லாம் கேட்டு அதன்படியே நடந்துக்கொள்கிறாள்.

சில பல விஷயங்களில் வித்தியாசமாக நடந்துக்கொள்ளும் எஸ்தர்'ஐ, கேட் சந்தேகிக்கிறாள்(அது என்ன சில பல விஷயமின்னு கேட்டா....அத நீங்க படத்துல பார்க்கும்போது உங்களுக்கு புரியும்). ஒரு நாள் சிறுமி ஒருவளை தாக்கிவிடுகிறாள் எஸ்தர், அனைவரையும் இது விபத்துதான் என நம்பவைக்கிறாள். இதனை எஸ்தர் தான் செய்திருப்பாள் என சந்தேகிக்கும் கேட், எஸ்தர் இருந்த அந்த அனாதை இல்லத்தின் தலைமை அதிகாரி Sister Abigail'லிடம் இதை பற்றி கூறுகிறாள்.

ஜான்'னையும் கேட்'ஐயும் அவர்கள் வீட்டில் சந்திக்கும் Sister Abigail, எஸ்தர் இருக்கும் இடங்களில் இது போன்ற (விபத்து) சம்பவங்கள் பல முறை நடந்திருப்பதாக கூறுகிறார். இவர்கள் பேசுவதை எஸ்தர் ஒட்டு கேட்டுவிடுகிறாள்.

அனாதை இல்லத்திற்கு திரும்பிச் சென்றுகொண்டிருக்கும் Sister Abigail'ன் கார் முன்னே மேக்ஸ்'ஐ தள்ளிவிடுகிறாள் எஸ்தர், விபத்தை தவிர்த்து மேக்ஸ்'ற்கு காயம் பட்டதா என அறிய காரிலிருந்து வெளியே வரும் Sister Abigail'ஐ எஸ்தர் சுத்தியலினால் அடித்தே கொள்கிறாள். மேக்ஸ்'ன் உதவியோடு பிணத்தை ஒரு இடத்தில புதைத்துவிட்டு, சுத்தியலை ஒரு மரவீட்டின் மேல் வைக்கிறாள் எஸ்தர். மேக்ஸ்'ஐ இதை யாரிடமும் கூற வேண்டாம் என்றும் அப்படி கூறினால் போலிஸ் அவளையும் கைது செய்வார்கள் என மிரட்டிவைகிறாள். 

கேட்'னுடை சந்தேகம் எஸ்தர்'ரின் மேல் இன்னும் அதிகமாகிறது. எஸ்தர்'ரிடம் எதோ மர்மங்கள்/பிரச்சணைகள் உள்ளது என நம்புகிறாள். இந்த சந்தேகங்கள் பற்றி ஜான்'னிடம் கூற, ஜான் இதை அனைத்தையும் நம்ப மறுக்கிறான்.


கேட், எஸ்தர் மறைத்து வைத்திருக்கும் பைபிள் ஒன்றில் இருக்கும் சில குறிப்புக்கள் வைத்து எஸ்டோனியா நாட்டில் இருக்கும் மன நல காப்பகம் Saarne Institute'ற்கு எஸ்தர் என்பவளை பற்றிய விபரங்கள் வேண்டும் என ஈமெயில் மூலம் அவள் படத்தையும் சேர்த்து அனுப்பிவைக்கிறாள்.

மேக்ஸ் மூலம் டேனியல்'லிற்கு எஸ்தர் செய்த கொலை தெரியவர, எஸ்தர் தான் கொலையாளி என நிருபிப்பதற்கு அந்த சுத்தியலை எடுத்துக்கொண்டு வர போகிறான் டேனியல். அதே நேரத்தில் அங்கு வரும் எஸ்தர், டேனியல்'ஐ மரவீட்டின் உள்ளே பூட்டி அதை கொளுத்திவிடுகிறாள்.

சிறுவன் டேனியல் தப்பித்தானா, யார் இந்த எஸ்தர், அவளின் மர்மங்கள் என்ன, இவை அனைத்திற்கும் விடையை படத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

----------**********----------



மேக்ஸ்'ஆக நடித்த சிறுமி நன்றாக நடித்திருப்பாள்.

கிளைமாக்ஸ் ட்விஸ்ட் ஒன்று இருக்கும். அது தான் படத்தையே தூக்கி நிறுத்தும்.

நல்ல ஒரு த்ரில்லர் திரைப்படம், சிலருக்கு பிடிக்காமலும் போகலாம். எதற்கும் கிழே உள்ள லிங்கை கிளிக் செய்து ட்ரைலர் பார்க்கவும்.

Award Won
Brussels International Festival of Fantasy Film 2010
Category : International Feature length Competition
Won : Golden Raven 


Wednesday, November 16, 2011

M (1931) விமர்சனம்.


'M' இது ஒரு ஜெர்மனி திரைப்படம். 1931'ஆம் ஆண்டு வெளிவந்த த்ரில்லர் வகையை சார்ந்த திரைப்படம்.  பிரிட்ஸ் லேங் (Firtz Lang) இயக்கத்தில் பீட்டர் லோரி (Peter Lorre) நடிப்பில் வெளிவந்த சிரியல் கில்லர்' பற்றிய திரைப்படம்.

Genre : Thriller


Produced By : Seymour Nebenzal
Directed By : Fritz Lang
Story By : Egon Jacobson
Script : Fritz Lang, Thea Von Harbou
Cinematography : Fritz Arno Wagner
Edited By : Paul Falkenberg
Music By : Adolf Jansen
Cast : Peter Lorre, Ellen Widmann, Inge Landgut, Otto Wernicke

சிறுவர், சிறுமிகளை  குறிவைத்து எந்த ஒரு தடயமும் இல்லாமல் தொடர்ந்து நடக்கும் கொலைகள். 


தடயமே இல்லாமல் நடக்கும் இக்குற்றங்களினால் கொலைகாரனை, போலீசாரால் கண்டுப்பிடிக்க முடியாமல் போகிறது. மக்கள் இதனால் நிறைய பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்கள். ஒருவரை மாற்றி ஒருவர்  சந்தேகப்பட்டு குற்றவாளி எனக்கருதி சிறு கைகலப்பு மற்றும் மக்கள் சம்மந்தமே இல்லாத நபர்களையும் அடித்து காவல்நிலையத்தில் ஒப்படைகிறார்கள். இதே நேரத்தில் கொலைகாரன், தினமும் வெளிவரும் நாளிதழுக்கு ஒரு கடிதமும் எழுதி அனுப்புகிறான்.

கொலைகாரன், இக்கொலைகள் தொடரும் என்பதை போல் அக்கடிதத்தில் எழுதி இருப்பதினால். இன்னும் மும்முரமாக போலிஸ் அணைத்து விதங்களிலும் கொலைகாரனை தேடுகிறது. நகரத்தில் இருக்கும் பழைய மற்றும் புதிய குற்றவாளிகள், திருடர்கள், கொள்ளைக்காரர்கள் போன்றவர்களை முதன்மை குற்றவளியாக விசாரிக்கப்படுகிறார்கள். போலிஸ் அணைத்து இடங்களையும் சோதனை நடத்துகிறது.

இந்த சோதனைகளால் பாதிக்கப்படும் திருடர்கள் மற்றும் கொள்ளைக்காரர்கள் (தொழில் முடக்கத்தினால்.... ஹா ஹா), ஒரு மீட்டிங் நடத்தி அவர்களே அந்த கொலைகாரனை கண்டுப்பிடித்து அவன் கதையை முடிப்பதாக முடிவெடுக்கப்படுகிறது. இவர்களுக்கு உதவியாக பிச்சைக்காரர்களை வைத்துகொண்டு, சேர்ந்து கொலைகாரனை தேடுகிறார்கள்.

காவல்துறை அவர்களது விசாரணையை வேறுகோணத்தில் நடத்துகிறது. மன சம்மந்த பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று சமிப காலத்தில் குணமடைந்து வந்தவர்களின் கைரேகை மற்றும் அக்கடிதத்தின் கையெழுத்து போன்றவை ஒத்துப்போகிறதா என்று பார்க்கையில், குறிப்பிட்ட Hans Beckert என்பவனின் கையெழுத்து மற்றும் அவன் உபயோகித்த பென்சில் ஒத்துப்போக, Hans Beckert என்பவன்தான் கொலைக்காரன் என்று உறுதிசெய்யப்படுகிறது.

அதே நேரத்தில் வெளியே சிறுமி ஒருத்தியை கூடிக்கொண்டு, அவளை கொள்வதற்கு கொலைவெறியில் அழைந்து கொண்டிருக்கும் Hans Beckert'ஐ  சந்தேகப்படும் ஒரு குருடன் (குருடனுக்கு தான் கண் இல்லையே அவன் எப்படி Beckert மேல் சந்தேகப்படுவான்!... டைரக்டர் திறமைய இங்க கொஞ்சம் காட்டி இருப்பாரு), தனது அருகாமையில் இருப்பவனிடம் கூற, அவன் Beckert'க்கு தெரியாமல் பின்தொடர்கிறான்.


இந்த செய்தியை திருடர்களின் தலைவர்களுக்கு தொலைபேசியில் தெரியப்படுத்த, M'என்ற எழுத்தை அடயாளமாக தனது கையில் எழுதி அதை Beckert அணிந்திருக்கும் கோட் சட்டையின் பின்புறத்தில்  பதியவைத்து செல்கிறான்......
Hans Beckert'ஐ முதலில் போலிஸ் பிடித்தார்களா அல்லது கொள்ளையர் கூட்டம் பிடித்தார்களா, Hans Beckert'க்கு கடைசியில் என்ன ஆனது, இது போன்ற கேள்விகளுக்கு விடைகளை திரைப்படத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

----------**********----------



மிகவும் பழைய திரைப்படம். மிக சில காட்சிகளில் ஒலி இல்லாமல் இருக்கும். திரைக்கதை மிகவும் மெல்லமாக நகரும். ஆனால் காட்சிகள் எல்லாம் மிக அருமையாக இருக்கும். ஆரம்பத்தில் திரையில் ஈர்ப்பு இல்லாமல் ஆரம்பமாகும்  இத்திரைப்படம் சற்று நேரத்திலே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடும். கண்டிப்பாக பார்க்கலாம், இது நல்ல திரைப்படம்.

இந்த ஜெர்மனிய மொழி திரைப்படத்தின் ட்ரைலர் கிழே உள்ளது. கிளிக் செய்து பார்க்கவும்.



இந்த M' திரைப்படம் அணைத்து வகை கில்லர் திரைப்படங்களின் முன்னோடி எனலாம்.

Fritz Lang இதற்கு முன்பே நிறைய திரைப்படங்களை இயக்கி இருந்தாலும், இத்திரைப்படம் தான் ஒலியுடன் கலந்து வெளிவந்த அவருடைய முதல் திரைப்படம். 

Petter Lorre நிறைவாக, கதாபாத்திரத்திற்கு தேவையான இயல்பான நடிப்பில் கலக்கியுள்ளார்.

1920'இல் வாழ்ந்த பீட்டர் குர்டேன் (The Vampire of Dusseldorf) சீரியல் கொலைகாரனுடைய வாழ்கையின் இன்ஸ்பிரேஷன் தான் இத்திரைப்படம் என அனைவரும் கூறுகிறார்கள். ஆனால் Fritz Lang இதனை மறுத்துள்ளார்.


1931'ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தை, 1934'ஆம் ஆண்டு நாசி இயக்கம் திரையிட தடைசெய்தது. முப்பத்தி இரண்டு ஆண்டுகள் கழித்து 1966'ஆம் ஆண்டு DVD'யாக வெளியானது.


இத்திரைப்படத்தை, யு டுப்பில் online'ல் காண இங்கே M 1931 ஜெர்மனி கிளிக் செய்யவும். (பிரிண்ட் நன்றாகவே உள்ளது)
   
       

Friday, November 11, 2011

American Psycho (2000) விமர்சனம்.


கிறிஸ்டியன் பேல் நடிப்பில் அமெரிக்கன் சைகோ 2000'தில் வெளிவந்த சைகோ த்ரில்லர் வகையை சார்ந்த திரைப்படம். இந்த 'கல்ட் த்ரில்லர்' படத்தை மேரி ஹர்ரோன் இயக்கியுள்ளார். 

ப்ரெட் ஈஸ்டன் எல்லிஸ், எழுதி 1991'ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட நாவலை அதன் பெயரிலே முழு திரைப்படமாக எடுத்துள்ளனர்.


கிறிஸ்டியன் பேல், 'Patrick Bateman' என்னும் கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார் (நடித்துள்ளார் என்பதை விட வாழ்ந்துள்ளார் எனலாம்). சைகீக் கில்லர் பற்றிய படம். சில ஆபாச காட்சிகளும், பல கொடூரமான காட்சிகளும் நிறைந்த திரைப்படம்.

Rating : NC-17

Produced By : Christian halsey Solomon, Chris Hanley, Edward R. Pressman
Directed By : Mary Harron
Screenplay By : Mary Harron, Guinevere Turner
Written By : Bret Easton Ellis
Cinematography : Andrzej Sekula
Music By :John Cale
Edited By : Andrew Marcus
Cast : Christian Bale, Justin Theroux, Josh Lucas, Bill Sage, Chloe Sevigny, Reeth Witherspoon, Samantha Mathis

மனிதர்களுக்கு இருக்கும் பல கெட்ட எண்ணங்களில் சிலது பொறமை, தற்புகழ்ச்சி, தாம் தான் சிறந்தவன் போன்றவை. இது தவறானது என்றும் கூறிவிட முடியாது. இது போன்ற எண்ணங்கள் ஒருவனுக்கு இருப்பதினால் தான், எந்த ஒரு பக்கபலமும் இல்லாமல்  தனிப்பட்ட ஒருவன் சமுதாயத்தில் வெற்றியடைகிறான். ஆனால் இதுவே சமுதாயத்தில் வெற்றியடைந்த ஒருவனுக்கு, இந்த கெட்ட எண்ணங்கள் அளவுக்கு அதிகமாக இருந்தது என்றால். அவனுடைய கோவத்தின் வெளிப்பாடே வேறு மாதிரியாக இருக்கும்.

கதை :
Patrick Bateman, அமெரிக்க, நியூ யார்க் நகரின் வால் ஸ்ட்ரீட்டில் இருக்கும் ஒரு பெரிய நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் பணிபுரிகிறான். Bateman ஒரு அதிபுத்திசாலி, திறமைமிக்கவன் பல விஷயங்களில். அவனுடைய அபார்ட்மென்ட், உடைகள், மற்றும் அவனுடைய பொருட்கள் அனைத்தையும் அவனை சுற்றி இருப்பவர்கள் மற்றும் நண்பர்களை விட மிக விலையுர்ந்த சிறந்ததை உபயோகபடுத்துகிறான்.

அவனுடைய நண்பர்களும் அதே வால் ஸ்ட்ரீட்டில் இருக்கும் மற்ற சில நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் பணிபுரிகின்றனர்.

நண்பர்கள் இவரை சில விஷயங்களில் மிஞ்ச, அதனால் பதிக்கப்படும் இவர். மன பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்.


இந்த கோவத்தின் வெளிப்பாட்டினால். இரவினில் சம்மந்தம் இல்லாதவர்களை கொலை செய்ய ஆரம்பித்து, சில பெண்களையும் வீட்டிற்கு கூடிக்கொண்டு வந்து கொலைசெய்கிறான். இது தொடர்கிறது........

----------*****----------

படத்தின் சிறு ட்ரைலர் இங்கே, கிளிக் செய்து பார்க்கவும்.


கில்லர் திரைப்படங்களில் சிறந்த படம் இது.  கில்லர் படம் பார்ப்பவர்கள் என்றால், கண்டிப்பாக பார்க்கலாம். 

படத்தின் ஒளிப்பதிவு மிக அருமை.

இந்த படத்தின் அதிகப்படியான செலவு என்றால், அது ஒளிபரப்படும் சில பாடல்களின் Copy Right வாங்கிய செலவுதான். 

கிறிஸ்டியன் பேல் குளிப்பது போல் ஒரு காட்சி படத்தில் வரும். அந்த காட்சியில் செட்டில் உள்ள அணைத்து பெண்களும் அந்த காட்சியை நேரடியாக பார்த்தனர்.

பலர் கிறிஸ்டியன் பேல்'லை இந்த படத்தில், இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டாம் என கூற, இதற்காகவே இத்திரைப்படத்தில் விடாப்பிடியாக நடித்தார்.

முதலில் Bateman கதாபாத்திரத்தில் Leonardo Dicaprio  தான் நடிப்பதாக இருந்தது , பிறகு எட்வர்ட் நார்டன், மற்றும் சிலர் நடிப்பதாக பேசப்பட்டது. படத்தின் டைரக்டர், கிறிஸ்டியன் பேல் தான் நடிக்கவேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தார்.

இந்த கொடூரமான கில்லர் திரைபடத்தின் கிளைமாக்ஸ் பார்த்த பிறகு கண்டிப்பாக நமக்கு ஒரு சிறு சிரிப்பு வரும். கிளைமாக்ஸ் புரியவில்லை என்றாலும் பிரச்சனை இல்ல, தெரியாமல் இருபதே சிறந்தது. 

Bateman மற்றும் அவனது நண்பர்கள் அனைவரும், தங்களுடைய பிசினஸ் கார்டை பிறருக்கு காட்டும் காட்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் தனக்கு கிடைக்காத அந்த ஹோட்டலின் ரிசர்வேஷன், அவனுடைய நண்பன் ஒருவனுக்கு கிடைத்து சென்றுவந்துள்ளான் என தெரியவந்ததும். அவனை கொள்வதற்கு, அவனனிடம் பேசிக்கொண்டே, உடையை எல்லாம் மாற்றி அவனை கொள்வது மிக அருமை.  

Sunday, November 6, 2011

Shutter (2004) விமர்சனம்.


'ஷட்டர்' 2004'ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தாய்லாந்து நாட்டு திகில் திரைப்படம். ஹாரர் வகையை சார்ந்த இத்திரைப்படத்தை  'Banjong Pisanthanakun' மற்றும் 'Parkpoom Wongpoom' இணைந்து இயக்கியது.

Genres : Horror, Mystery, Thriller


Produced By : Yodhpet Sudsawad
Directed By : Banjong Pisanthanakun, Parkpoom Wongpoom
Written By : Sopon Sukdapisit, Banjong Pisanthanakun, Parkpoom Wongpoom
Cinematography : Niramon Rose
Music By : Chatchai Pongprapaphan
Cast : Ananda Everingham, Natthaweeranuch Thongmee, Unnop Chanpaibool

துன் ஒரு போடோக்ராபர், அவன் காதலி ஜென் இருவரும் நண்பர்களுடன் பார்ட்டி'யை முடித்துக்கொண்டு காரில் வரும்போது ஆட்கள் யாரும் இல்லாத சாலை ஒன்றில் ஒரு பெண்ணை மோதிவிடுகிறார்கள் (ஜென் தான் காரை ஒடிகொண்டுவருவது). விபத்துக்குள்ளான பெண் சாலையில் விழுந்து கிடக்க, ஜென் அந்த பெண் உயுரோடு இருந்தால் உதவி செய்ய நினைக்கிறாள், ஆனால் துன் அசைவில்லாமல் இருக்கும் அந்த உடலை பார்த்து பயந்து அவன் காதலி ஜென்'னை வண்டியை விட்டு கிழே இறங்கவிடாமல், வண்டியை எடுக்க சொல்கிறான். இருவரும் அந்த இடத்தை விட்டு காரில் மிக வேகமாக மறைகிறார்கள்.

துன் மற்றும் ஜென்'னிற்கு ஒரு ஆவியின் உருவம் தென்படுகிறது, சில விபரிதமான விஷயங்களும் நடைபெற ஆரம்பிக்கிறது. துன் எடுக்கும் படங்கள் அனைத்திலும் ஒரு ஒளி போன்றதொரு பிம்பம் தெரிய, ஜென் அது தான் மோதிய பெண்ணின் ஆவி தான் என சந்தேகிக்கிறாள்.

துன் கடுமையான கழுத்து வலியால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு போகிறான், அங்கு இவனை பரிசோதிக்கும் மருத்துவர் துன்'னிற்கு எந்த பிராக்செர் அல்லது பிரச்னை இல்ல என கூறுகிறார்.


ஜென், இந்த ஆவிகளை பற்றி விசாரிக்க, ஆவிகள் இருப்பது உண்மைதான் என தெரிய வருகிறது, இதற்கு உதாரணமாக சில படங்களின் பிம்பமும் பார்க்கிறாள். துன் படம் பிடித்த அந்த பிம்பங்கள் விழுந்த, குறிப்பிட்ட இடத்திருக்கு செல்கிறாள், (அது துன் படித்த கல்லூரியின், உயிரியல் லேப்). அங்கு தான் காரில் மோதிய பெண்ணின் படங்களை காணுகிறாள்.

ஜென், துன்'னிடம் இதை பற்றி கேட்க, அந்த பெண்ணின் பெயர் நற்றே' எனவும், இருவருக்கும் கல்லூரியில் படிக்கும் பொது நல்ல பழக்கம் இருந்தது எனவும், திடீர் என வேரிபிடிதவள் போல் நடந்துகொண்டால் என்றும், இதனால் அவன் அவளிடம் இருந்து விலக ஆரம்பிக்க மற்றும் துன்'னின் நண்பர்களும் அவளை மிரட்ட, திடிரென ஒரு நாள் அவள் யாரிடமும் எதுவும் கூறாமல், எங்கோ சென்று விட்டாள் என கூறுகிறான்.

துன்'னின் நண்பன், இவன் கண் முன்பே பெரிய கட்டிடத்தின் மேல் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்கிறான். பிறகு தான் இவனுக்கு தெரிய வருகிறது, இதற்கு முன்பே இன்னும் இரு நண்பர்களும் இதே போல் பெரிய கட்டிடத்தின் மேல் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள் என.


இதற்கெல்லாம் நற்றேவின் ஆவி தான் காரணம் என, அடுத்தது அந்த ஆவி தன்னை தான் கொள்ள போகிறது என நினைத்து புலம்புகிறான்.


இதை தடுத்து நிறுத்த, துன் மற்றும் ஜென், இருவரும் வெகுதொலைவில் இருக்கும்  நற்றேவின் விட்டை தேடி செல்கிறார்கள்...........

நற்றேவின் ஆவி துன்'னை கொன்றதா, எதற்காக துன்'னின் நண்பர்களை கொன்றது, காரை ஏற்றி கொன்ற ஜென்'னை என் கொள்ளவில்லை.... இது அனைத்துக்கும் பதில்களை படத்தை பார்த்து தெரிஞ்சிகோங்க.

----------*****----------


ஹாரர் படங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்றால், இந்த திரைப்படத்தை நீங்கள் நம்பி பார்க்கலாம். கொஞ்சம் பயம் அதிக த்ரில்லர் மற்றும் சஸ்பன்ஸ். அடுத்த காட்சிகள் சிலதை கணிக்க முடிந்தாலும் கூட, படத்தோட திரைக்கதையும், அந்த கிளைமாக்ஸ் காட்சியும் படத்தை துக்கி நிறுத்தி இருக்கும்.


படிக்கட்டில் துன் இறங்கும் காட்சி மிக அருமையான ஒரு ஹாரர் திரைப்படத்தில் ரசிக்கும் படியான காட்சி. (இதை நிறைய திரைப்படங்களில் பார்த்திருப்போம்)


ஜென், அவர்கள் வீட்டில் பிடித்த போடோஸ் அனைத்தையும் வைத்துகொண்டு நற்றேவின் ஆவி கூற விரும்புவதை அறியும் காட்சி டைரக்டரின் திறமையை காட்டுகிறது.


கிளைமாக்ஸ் மிக அருமை, அப்போது தான் நமக்கு விடுபட்ட சில காட்சிகள்  தெரியவரும். முக்கியமாக மருத்துவமனையில் என்ன நடந்தது என்று. 


இத்திரைப்படம் தமிழில் சுடப்பட்டு சிவி என்ற பெயரில் 2007'ஆம் ஆண்டு வெளிவந்தது. ஹிந்தியில் ''கிளிக்'' என்ற பெயரில் 2010'ஆம் ஆண்டு வெளிவந்தது. ஆங்கிலத்தில் ''Shutter'' என்ற பெயரிலேயே 2008'ஆம் ஆண்டு வெளிவந்தது.


இந்த படத்தை மற்ற மொழியில் பார்ப்பதை விட அதுனுடைய உண்மையான  உருவாக்கம் 'Thai' மொழியில் பார்பதே சிறந்தது. தமிழிலும் சுமாராக எடுத்து இருப்பார்கள்.


Award Won
Gerardmer Film Festival - 2006 Won Audience Award - Banjong Pisanthanakun, Parkpoom Wongpoom


Wednesday, November 2, 2011

ஹாலிவுட் திரைப்படங்களின் சிறந்த பைக் சேஸ் காட்சிகள் சில.


ஹாலிவுட் திரைப்படங்களின் வரும் இந்த பைக் காட்சிகள் அனைவரும் நிறைய முறை பார்த்தும் இருப்பிர்கள். 

அதிகம் பேருக்கு பைக் இன்னா ரொம்ப பிடிக்கும், இப்ப இருக்கற ஸ்கூல் பசங்க, கல்லூரி பசங்க சாதாரணமா பைக் வைத்துக்கொண்டு இருகிறாங்க, ஆன ஒரு பத்து பன்னண்டு வருசத்துக்கு முன்பு யாருனா ஒருத்தர் இல்ல, ரெண்டு பேரு தான் வெச்சினு இருபாங்க. அப்போ எல்லாருக்கும் ஆசை இருக்கும் பைக் வாங்கணும் என்று, அப்போ அது சாத்தியம் இல்லாமல் இருக்கலாம், அதன் பிறகு சம்பாதிக்கும் பொது வங்கியும் இருக்கலாம். ஆன ஒரு உறுத்தல் இருக்கும், இருந்து இருந்த நம்முடை கிளாஸ் பிகருங்க முன்னாடி சீன் காட்டி இருக்கலாம் என்று.

என் நம்ம ஆளுங்க ஒரு படமே எடுத்து இருக்காங்க பொல்லாதவன். முழுக்க முழுக்க பைக் பதியே ஒரு படம். அந்த பைக் வந்ததால எப்படி பிகரு பிக்கப் ஆச்சு, வேலை கிடைச்சது என்று... இது போல சொந்தமா பைக் இல்ல இன்னாலும், பிரெண்ட் கிட்ட கேட்டு வாங்கினு போயி சீன் காட்டி இருப்போம் சிலபேரு.(நான் பள்ளியில் படிக்கும் பொது என் பிரெண்ட் ஒருத்தன் பைக் கடன் வங்கி வந்து அவன் ஆளு முன்னாடி வேகமா ஓட்டி Boys படத்துல வர மாதிரி ஸ்கிட் ஆயி விழுந்தான், பிறகு ஒரு வாரத்துக்கு மேல் ஹாஸ்பத்திரியில இருந்தான், இன்னொரு பிரெண்ட், முன்னாடி நம்ம ஊருல கரண்ட் கம்பம் ரோட்டுலயே இருக்குமே, அதுல மோதி 'Headlight' ஒடச்சி கொண்டுவந்து குடுத்து, கடன் குடுத்த நண்பனிடம் சம பல்பு வாங்கனான்).         


1. Mission: Impossible II(2000)



டாம் குருஸ், நடிப்பில் ஜான் வூ இயக்கத்தில் வந்த ''மிஷன் இம்பாசிபிள் இரண்டாம்'' பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சி இது.(ஜான் வூ, ஆக்சன் படங்கள் எடுப்பதில் இவரை மிஞ்ச வேறு ஒருவரும் இல்லை எனலாம், இதை அனைவரும் அறிந்து இருபீர்) டாம் குருஸ் சம ஸ்டைலிஷ் பட்டய கிழப்பி இருபாரு. ஹான்ஸ் சிம்மர் இசை கன கட்சிதமாக இந்த காட்சிக்கு பொருந்தி இருக்கும். Bike : Triumph Speed Triple, Triumph Daytona.



2. The Matrix Reloaded (2003)


ஆண்டி மற்றும் லான வாகொவ்ஸ்கி சகோதரர்களின் இயக்கத்தில் The Matrix Reloaded'ல் வரும் ஒரு காட்சி. Bike : Ducati 996/998


3. Terminator 2: Judgment Day (1991)


ஜெம்ஸ் கமேரோன் இயக்கத்தில் அர்னால்ட் நடித்த திரைப்படம். இந்த காட்சியில் அர்னால்டின் ஸ்டைல் மிக அற்புதமா இருக்கும், அதும் இந்த காட்சி முடிஞ்ச பிறகு அந்த துப்பாக்கிய சுழற்றுவார் பாருங்க....
சம த்ரில்லர்'ர இருக்கும். Bike : harley davidson FLSTF
ஆனா இந்த காட்சில ரெண்டு தவறு இருக்கு, முடிஞ்ச கண்டு பிடிச்சு கமெண்ட்'ல சொல்லுங்க பார்க்கலாம்.


4. Tomorrow Never Dies(1997)


இது ஜெம்ஸ் பாண்டு படம், பாண்டா நம்ம பியர்ஸ் பிராஸ்னன் பண்ணி இருபாரு, இயக்கம் Roger Spottiwoode. (பாண்டு இன்னலே என்னக்கு டக்கு ஞாபத்துக்கு வர முதல் ஆளு பியர்ஸ் பிராஸ்னன் தான், இவரோட இந்த ஸ்டைல் வேற எந்த பாண்டு கிட்டையும் பார்த்தது இல்ல, என் தனி பட்ட கருத்து) இந்த காட்சியில இவரோட Michelle Yeoh'வும் பட்டய கலப்பி இருப்பார். Bike : BMW Cruiser R1200C 
    

5. Torque (2004)


மார்டின் ஹென்டர்சன் மற்றும் ஐஸ் கியூப் நடித்த திரைபடத்தை ஜோசப் கான் இயக்கியுள்ளார். (சமையான மொக்க படம் தப்பி தவறி கூட பாத்துடாதிங்க) ரொம்ப ஓவரா இருக்கும், இருந்தாலும் இந்த காட்சி பிடித்திருந்தது. Bike : Aprilia RSV Mille and Honda CBR 954 RR 

இதும் இல்லாம இன்னும் சில காட்சிகள் உள்ளன. Knight & Day படத்தில் வரும் மற்றும் The Bourne Ultimatum ஒரு சிறு காட்சி.