Monday, December 12, 2011

The Island (2005) விமர்சனம்.


மைக்கல் பே இயக்கத்தில் தி ஐலேண்ட் 2005'ல் வெளிவந்த ஆக்சன் த்ரில்லர் திரைப்படம். Ewan McGregor மற்றும் Scarlett Johansson நடித்துள்ளனர்.

சென்ற காலகட்டத்தில் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டால் அல்லது விபத்தில் சேதமடைந்தால், இழந்த உறுப்பை பெறுவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது இதை பற்றி விழிப்புணர்வு ஓரளவு மக்கள் அடைந்துள்ளனர். அறிவியலும் ஓரளவு வளர்ச்சியடைந்துள்ளது இந்தகாலகட்டத்தில் சிலர் இறந்த பின்பு தங்களது உறுப்புகளை தானமாக கொடுக்க முன்வருகின்றனர். இதனால் சிலர் பயனடைகிறார்கள், ஆனால் சதவிதம் மிகவும் குறைவு. இந்த பற்றாக்குறையினால் உடல் உறுப்பு திருட்டுகள் மற்றும் சம்மந்தப்பட்டவரே அவரது ஏழ்மை காரணமாக விலைக்கு உறுப்புகளை விற்கின்ற சம்பவங்கள் நடைப்பெறுகின்றது. வருங்காலத்தில் இந்த விஷயத்தில் எது போன்ற மாற்றங்கள் வரும் என்பதை நம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 

குளோனிங் என்ற முறையில் ஒரு நகல் மனிதனையே உருவாக்கி அவனிடம் இருந்து உடல் உறுப்புகளை பெறுவதே இப்படத்தின் கரு. இதை ஒருமணி நேரம் முப்பத்தி ஆறு நிமிடம் ஓடக்கூடிய சைன்ஸ் பிக்சன்/ஆக்சன் த்ரில்லர் திரைப்படமாக வழங்கயுள்ளனர்.

Rating : PG-13
Genre : Action Sci-Fi, Thriller

Produced By : Michael Bay, Ian Bryce, Walter F. Parkes
Directed By : Michael Bay
Written By : Caspian Tredwell-Owen
Screenplay : Caspian Tredwell-Owen, Alex Kurtzman, Roberto Orci
Music By : Steve Jablonsky
Cinematography : Mauro Fiore
Edited By : Paul Rubell, Christian Wagner
Cast : Ewan McGregor, Scarlett Johansson, Djimon Hounsou, Sean Bean, Steve Buscemi, Michael Clarke Duncan.


கதை :
ஒரு பெரிய ஸ்டெரைல் செய்யப்பட்ட கட்டிடம், இதற்கும் வெளி உலகுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அங்கு இருக்கும் அனைவரும் வெள்ளை நிற உடையை அணிந்துள்ளனர். இந்த உலகம் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறிவிட்டதாகவும் அங்கு உயிர்கள் வாழ தகுதியற்றதாக பூமி உள்ளதாக நம்பப்படுகிறது இவர்களால் (நம்பவைக்கபடுகிறது). 

அந்த பூமியில் மனிதன் வாழ தகுந்த இடமாக தி ஐலேண்ட் என்ற ஒரே இடம் உள்ளது எனவும், அங்கு வாழ்வதற்கு இந்த வெள்ளை உடை அணிந்தவர்களை லாட்டரி மூலம் தேர்ந்து எடுக்கின்றார்கள்.


இவர்களுக்கு நிறைய கட்டுப்பாடு, எந்த அளவு மற்றும் எந்த வகை உணவை உண்ண வேண்டும், பெண்களும் ஆண்களும் பழகும் முறை, உடல்பயற்சி போன்றவை. 

படத்தின் நாயகன் லின்கோல்ன் ஸிக்ஸ் எக்கோ'விற்கு சிறு சிறு சந்தேகங்களும் கேள்விகளும் தோன்றுகிறது. லின்கோல்ன் ஸிக்ஸ்'ன் நாயகி  ஜோர்டான் டூ டெல்டா சில விஷயங்களில் நாயகனுக்கு உதவிப்புரிகிறாள். ஒரு முறை ஒரு காரியமாக பவர் பிளான்ட் இருக்கும் இடத்திற்கு செல்கிறான், அங்கு ஒரு பட்டம் பூச்சியை காண்கிறான். இன்னும் அவனுடைய சந்தேகங்கள் அதிகமாகிறது. 

அடுத்த நாளுக்கான பயணியாக நமது நாயகி ஜோர்டான் டூ டெல்டா தேர்வாகிறாள். அன்று இரவு லின்கோல்ன் ஸிக்ஸ் அவனது தேடலை தொடங்குகிறான், அப்போது அன்று லாட்டரி விழுந்த பெண்ணின் குழந்தையை (அப்பொழுது தான் பிறந்த குழந்தையை) யாரிடமோ ஒப்படைத்து விட்டு, அந்த பெண்ணை கொன்று விடுகிறார்கள். முன்பே லாட்டரி விழுந்து சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருப்பவனாக திரையில் காட்டப்படும் இன்னொருவனுக்கு அறுவை சிகிச்சை செய்வதையும் லின்கோல்ன் ஸிக்ஸ் பார்த்து விடுகிறான்.


லின்கோல்ன் ஸிக்ஸ் நாயகி ஜோர்டான் டூ டெல்டாவை கூடிக்கொன்று அந்த இடத்தை விட்டு தப்பிக்கப்பார்க்கிறான். இதை தெரிந்து கொள்ளும் வில்லன் தனது ஆட்களை அனுப்பி பயனில்லாமல் போக, ப்ரோபாசனால் கில்லர் டீமை அனுப்பி வைக்கிறான்.

லின்கோல்ன் ஸிக்ஸ் நாயகி ஜோர்டான் டூ டெல்டா இருவரும் எஸ்கேப் ஆகும் இந்த காட்சியில் தொடங்கும் ஆக்சன், பார்பவரின் கண் இமை கூட மூட முடியாத அளவு அதிரடி காட்சிகள் நிறைந்தாக செல்லும் படம் முடியும் வரை.

படத்தில் பிடித்தது:

Lincoln Six-Echo: Who is God ?
McCord: You know when you really want something, you close your eyes and wish for it really hard? God is the guy that ignores you.

McCord: ...but there's one universal truth, never trust a women with your credit card..

படத்தோட இயக்குனர் மைக்கல் பே அனைவரும் நன்கு அறிந்து இருபிங்க Bad Boys, The Rock, Armageddon, Pearl Harbor போன்ற ஆக்சன் திரைப்படங்களை இயக்கியவர். இந்த படங்களின் வரிசையில் தி ஐலேண்ட் ஒப்பிட முடியவில்லை என்றாலும், ஒரு முறை பார்த்து என்ஜாய் செய்யகூடிய பக்கா ஆக்சன் திரைப்படம்.  

ஸ்டீவ் ஜப்லோன்ச்கி பின்னணி இசை மற்றும் மாரோ பியோர் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பக்க பலம்.


Wednesday, December 7, 2011

Them (2006) விமர்சனம்.


'Them' திரைப்படம் David Morea மற்றும் Xavier Palud இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு வெளிவந்த பிரெஞ்சு திரைப்படம். ஹாரர் வகையை சார்ந்த இத்திரைப்டத்தில் Olivia Bonamy மற்றும் Michael Cohen முறையே க்ளமன்டைன் மற்றும் லூகஸ் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரோமானியா நாட்டில், ஒரு ஆஸ்திரேலியா தம்பதியருக்கு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுத்த சஸ்பன்ஸ் ஹாரர் திரைப்படம்.

Rating : R
Genre : Horror, Thriller

Written and Directed By : David Morea, Xavier Palud
Produced By : Richard Grandpierre
Cinematography : Axel Cosnefroy
Music By : Rene-Marc Bini
Edited By : Nicolas Sarkissian
Cast : Olivia Bonamy, Michael Cohen

படத்தின் முதல் காட்சியிலேயே பார்வையாளர்களை பயம்கொல்லச் செய்து எதிர்பார்ப்பை அதிகப்படுத்திவிடுகின்றனர். இந்த முதல் காட்சியை பின் வரும் இரண்டு பத்தியில் எழுதி இருக்கிறேன். காட்சியின் சுவாரசியம் குறையாமல் படம் பார்க்க வேண்டும் என்றால், அடுத்து வரும் இந்த  இரண்டு பத்தியை படிக்காமல், அதற்கு அடுத்து வரும் பத்தியில் இருந்து தொடருங்கள்.

ஒரு பெண்ணும் அவளுடைய தாயும், மரங்கள் அடர்ந்த சாலையில் காரினில் பயணித்து கொண்டு இருக்கும் பொது ஏதொ ஒரு உருவம் நாடு சாலையில் எதிரில் திடீர் என்று வர, அந்த விபத்தை தவிர்க்க அந்த பெண்ணின் தாய் முற்பட அந்த கார் சாலையின் ஓரத்தில் இருக்கும் மரக்கம்பத்தில் மோதி நிற்கிறது. 

அப்பெண்ணின் தாய் வெளியே சென்று சோதிக்கிறாள், அங்கு யாரும் இருப்பதில்லை. மீண்டும் காருக்கு திரும்பும் அவள் வண்டியின் என்ஜின் ஸ்டார்ட் செய்ய, அது இயங்க மறுக்கிறது. வெளியே சென்று Bonnet'ஐ திறந்து என்ஜின்'ஐ சரி செய்துக்கொண்டு இருக்க, உள்ளே இருக்கும் மகள் குரல் கொடுக்கிறாள் எந்தவித மறுகுரலும் வராததினால் காரை விட்டு வெளியே சென்று பார்க்கிறாள் அங்கு அவள் தாய் இருப்பதில்லை. தேடி பார்க்கிறாள் அங்கு எங்கும் அவள் தாய் இருப்பதில்லை. திடீர் என்று அடர்த்தியான மரங்களுக்கு நடுவில் இருந்து ஒரு வித்தியாசமான ஒலி அதிகமாகிக்கொண்டே வருகிறது. பயந்து காரினுள் ஏறி கதவை மூடிக்கொள்கிறாள். கைபேசி மூலம் போலிஸ்'க்கு தொடர்புக்கொள்கிறாள் ஆனால் அதற்குள் காரினுள் இருக்கும் ஒரு உருவத்தால் கழுத்து நெரித்து கொலைசெய்யப்படுகிறாள்.
இந்த காட்சி முடிந்து டைட்டில் கார்டில் படம் தொடங்குகிறது.

க்ளமன்டைன் ஒரு பள்ளியின் ஆசிரியை, வகுப்பை முடித்து விட்டு காரினில் வீடு திரும்புகிறாள். வரும் வழியில் முன்னால் இரவு நடந்த ஒரு கார் விபத்தை கடக்கிறாள். அதை பற்றிய விபரம் ஏதும் அவளுக்கு தெரிவதில்லை.

க்ளமண்டைனுடைய காதலன் லூகஸ் இருவரும் அந்த பொழுதினை மிகவும் சந்தோசமாக கழிக்கிறார்கள், தங்களுடைய தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில். இரவு உணவை முடித்துவிட்டு, சிறிது நேரம் தொலைக்காட்சியை பார்த்துவிட்டு இருவரும் தங்களது படுக்கைக்கு செல்கிறார்கள்.

சிறிது நேரத்தில் ஏதோ சதம் கேட்க க்ளமன்டைன், தூங்கிக்கொண்டு இருக்கும் லூகஸ் இடம் இதை கூறுகிறாள். இருவரும் கிழே சென்று பார்கிறார்கள். க்ளமண்டைனின் கார் நிறுத்தி இருந்த இடத்தில் இல்லாமல் சற்று தொலைவினில் நிறுத்தி இருப்பதாய் கண்டு வியப்படைகிறார்கள். லூகஸ், க்ளமண்டினை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு கார் இருக்கும் இடத்திற்கு செல்கிறான், ஆனால் அந்த காரை மர்ம உருவம் ஒன்று ஒட்டி சென்றுவிடுகிறது.


பிறகு இருவரும் விட்டினுள் செல்கின்றனர், தொலைபேசி மூலம் போலீஸில் புகார் தெரிவிக்கின்றனர். படுக்கைக்கு செல்லும் இவர்களுக்கு சிறிது நேரத்தில் மறுபடியும் கிழே இருந்து ஒலி கேட்கிறது. க்ளமண்டினை அந்த அறையிலே இருக்க சொல்லிவிட்டு லூகஸ் கிழே செல்கிறான்.
கிழே அணைத்து வைக்கப்பட்டு இருந்த தொலைக்காட்சி ஓடிக்கிண்டிருப்பதை கண்டு அதை நிறுத்துகிறான்....

அடுத்த காட்சியில், லூகஸ்'ஐ அந்த மர்ம உருவம் கண்ணாடி கதவினால் தாக்க, அந்த கண்ணாடி அவன் தொடை பகுதியில் ஏறி பலத்த காயம் அடைகிறான். லூகஸ் ஓட முடியாமல் ஓட அந்த மர்ம உருவம் இன்னும் பலமாக அவனை துரத்துகிறது....

அந்த மர்ம உருவம் யார்,
இவர்களை எதற்கு வேட்டையாடுகிறது,
க்ளமன்டைன், லூகஸ் இருவருக்கும் என்ன ஆனது,
போன்ற விடைகளுக்கு படத்தை பார்த்து பதில் தெரிந்துக்கொள்ளவும்.

இத்திரைப்படத்தின் ட்ரைலர் கிழே உள்ளது. கிளிக் செய்து பார்க்கவும்.


நல்ல ஒரு ஹரார் திரைப்படம் பார்க்கவேண்டும் என்றால் கண்டிப்பாக இந்த திரைப்படத்தை பார்த்து என்ஜாய் செய்யலாம். க்ளமன்டைன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் Olivia Bonamy அற்புதமாக நடித்திருக்கிறார். நல்ல ஒரு ஹரார் திரைப்படத்தின் வெற்றியின் முக்கிய பங்கே இசை தான், இத்திரைப்படத்தில் இயல்பான இசை கனகட்சிதமாக காட்சிகளுக்கு ஏற்றவாறு பொருந்தி இருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவும் மிக அருமை.

அதிகப்படியான நல்ல விமர்சனங்களை பெற்ற இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தெரியவரும் விஷயம் ஏற்றுகொள்ள முடியாத ஒன்று. ஆனால் அது தான் உண்மை, நிஜத்தில் நடந்த சம்பவம் கூட.

இதே போல் ஹாலிவுட் திரைப்படம் ஒன்று உள்ளது The Strangers. 2008'ல் வெளியானது, கதைக்களம் ஒன்றாக இருந்தாலும் படம் முற்றிலும் மாறுபட்டது.