Thursday, July 5, 2012

தி கான்வர்சேஷன் (1974) விமர்சனம்


   
த்ரில்லர் வகையை சார்ந்த இத்திரைப்படம் Frank Ford Coppola'வின் இயக்கத்தில் உருவானது. 1966'ஆம் ஆண்டு வெளிவந்த Blow up என்ற திரைப்படத்தின் கருவை மட்டும் வைத்து Frank Ford Coppola உருவாக்கியது தான் 'தி கான்வர்சேஷன்'.  Coppola'வின் இயக்கத்தில் வெளிவந்த 'தி காட்பாதர்' ஒன்றாம் பாகம் (1972) மற்றும் இரண்டாம் பாகம் (1974) இடையில் 1974'ஆம் ஆண்டு வெளிவந்த 'தி கான்வர்சேஷன்' திரைப்படம் அணைத்து தரப்பினராலும் பாராட்டுக்கள் பெற்றது. 


Rating : PG
Genre : Drama, Mystery, Thriller

Written, Directed and Produced By : Francis Ford Coppola
Music : David Shire
Cinematography : Bill Butler and Haskell Wexler
Edited By : Richard Chew
Cast : Gene Hackman, John Cazale, Allen garfield, Frederic Forrest, Cindy Williams and Harrison Ford


Gene Hackman மிகவும் நேர்த்தியான முறையில் ஒலியை பதிவு செய்யும் திறமையான சர்வைலன்ஸ் தொழில் நடத்திவரும் Hari Caul  என்ற கதாபத்திரத்தில் நடித்துள்ளார். சாதாரணமான நேரத்திலும் ரெயின் கோட் அணிந்தே வெளியில் செல்லும் பழக்கமுடையவர். யார் மேலும் அதிக நம்பிக்கை வைக்காமல், பிரம்மை பிடித்தவர் போல் எதிலும் ஒரு தனித்தன்மையோடு நடந்துக்கொள்ளும் Caul தனக்கென நிறைய விதிமுறைகளை வகுத்துக்கொண்டு அந்த வழியில் வாழ்பவர். அவருடைய விட்டில் இருக்கும் தொலைபேசியை உபயோகப்படுத்தாமல், பொது தொலைபேசியில் உபயோகப்படுத்தும் பழக்கம் உடையவர்.  


அதே போல் அவருடைய தொலைபேசி எண்ணை வாடிக்கையாளர் யாருக்கும் தராமல், இவரே அவர்களை பொது தொலைபேசியில் இருந்து அழைக்கும் பழக்கம் உடையவர். தனிமையாக வாழும் இவர், தானே தயாரித்த ஒலியை பதிவு செய்யும் கருவியை கண்டுபிடித்து அதேயே உபயோகப்படுத்துவார். படத்தின் கதை இவருடைய கோணத்தில் இருந்து சொல்லப்படுவது போல அமைத்திருப்பார்கள்.


படத்தின் ஆரம்பம் காட்சி, மதிய உணவு நேரத்தில் கூட்டம் மிகுந்த ஒரு சதுக்கத்தில் இருவர் (ஒரு ஆண் மற்றும் பெண்) பேசும்  அந்த உரையாடலை Caul அவருடைய பணியாட்களுடன் இணைந்து உரையாடலை பதிவுச் செய்கிறார். வெவ்வேறு கருவிகளில் பதிவு செய்த அந்த உரையாடலை இணைத்து, அந்த ஒலி நாடாவில் பதிந்து இருக்கும் மற்ற ஒலிகளை அகற்றி அந்த இருவரின் உரையாடலை மட்டும் மிகத் துல்லியமாக ஒரு ஒலி நாடாவில் பதிவுச் செய்கிறார் Caul. 

Caul'லிற்கு இந்த பணியை கொடுத்த உரிமையாளரின் உதவியாளர்  Martin Stett'டிடம்  ஒலி நாடாவை ஒப்படைக்க மறுத்து அதனை திரும்பி எடுத்துக் கொண்டு வந்துவிடுகிறார். அதே கட்டிடத்தில், சதுக்கத்தில் உரையாடிய அந்த இரண்டு பேரையும் பார்க்கும் Caul'லிற்கு சந்தேகம் அதிகமாகிறது. அந்த ஒலி நாடாவை திரும்ப திரும்ப கேட்கும் Caul, எதோ விபரிதம் அந்த உரையாடலில் இருப்பதாய் உணர்கிறார்.  Caul'லிற்கு இந்த உரையாடலை முழுமையாக அறிந்துக்கொள்ளும் ஆவல் அதிகமாகிறது.

அந்த இருவரின் உரையாடலின் முடிவில் வரும் இந்த ''He'd kill us if he got the chance'' என்பதின் முழுமையான அர்த்தம் Caul'னால் யூகிக்க முடியவதில்லை. அதே சமயம் உதவியாளர்  Martin Stett அந்த ஒலி நாடாவை Caul'லிடம் இருந்து திருடிக் கொண்டு சென்று, அதை தனது முதலளியாடும் கொடுத்தும் விடுகிறார். Caul'லிற்கு வந்து சேரவேண்டிய பணமும் சரியாக கொடுத்துவிடுகிறார் Martin Stett'ன் முதலாளி. Caul'லிற்கு அந்த இருவருக்கும் என்ன நடக்கப்போகிறது என்ற கவலை அதிகமாகிறது.......படத்துல ஒரே ஒரு ட்விஸ்ட் தான், அது தான் படத்தோட கிளைமாக்ஸ். 

Coppola'வின் சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று. கதை நிதானமாக நகர்ந்தாலும் மிக சிறந்த 'மிஸ்ட்ரி' திரைப்படங்களின் மாஸ்டர்பிசாக இன்றளவிலும் உள்ளது. படத்தோட பின்னணி இசை படத்திற்கு மிகப் பெரிய பலம். Gene Hackman நடித்ததில் அவருக்கு பிடித்தது இந்த படம் தான். இந்த படத்துக்காக Gene Hackman உண்மையிலேயே saxophone வாசிக்க கற்றுக்கொண்டார். 1966'ஆம் ஆண்டே Coppola இந்த கதைய ரெடி பண்ணிட்டாரு, The Godfather வெற்றிக்கு பிறகுதான் இந்த படத்தை எடுத்தாரு. IMDB'யில் 8 மதிப்பெண்ணும் ரோட்டேன் டோமொட்டோ'வில் 98 சதவித  மதிப்பெண்ணும்  இந்த படத்துக்கு கிடைச்சி இருக்கு. 



Tuesday, February 7, 2012

IP Man (2008) விமர்சனம்.



Rating : R
Genre : Action, Biography, Drama

Producer : Bak-Ming Wong
Director : Wilson Yip
Writter : Edmond Wong
Music : Kenji Kawai
Cinematography : Sing-Pui O
Edited By :  Ka-Fai Cheung
Cast : Donnie Yen, Simon Yam, Siu-Wong Fan, Ka Tung Lam



டோனி யேன் நடிச்ச இந்த ஆக்சன் படம், YIP MAN என்பவருடைய வாழ்கையில் நடைப்பெற்ற சரித்திரத்தின் ஒரு பகுதியை வைத்து திரைப்படமாகி உள்ளனர். YIP MAN  தற்காப்பு கலையான WING CHUN என்ற ஸ்டைலில் மிகவும் தேர்சிப்பெற்றவர். புருஸ் லீ மற்றம் பல திறமையான மாஸ்டர்களின், கிரான்ட் மாஸ்டர் இவர் தான்.

கதை : 
சீன நாட்டின், FOSHAN என்ற நகரத்தில் வாழ்ந்து வரும் IP MAN தற்காப்பு கலையான WING CHUN'னில் சிறந்து விளங்குகிறான். தன் மனைவி மற்றும் மகனுடன் சந்தோஷமாக வாழ்கிறான். 

ஜின் ஷன்ஷோ என்பவன் போஷன் நகரத்தில் இருக்கும் தற்காப்பு பள்ளிகளின் அணைத்து மாஸ்டர்களிடம் பந்தயமிட்டு சண்டையில் வெற்றிப் பெறுகிறான். IP MAN பற்றி தெரிந்துக் கொண்டு, IP MAN'னின் விட்டிற்கு சென்று சவால் விடுகிறான். IP MAN முதலில் சண்டையிடுவதற்கு மறுத்தாலும் பிறகு சண்டையிட்டு அவனை வெல்கிறான். (அதே நம்ம ஜாக்கி படமா இருந்தா அடிபட்டு, அசிங்கப்பட்டு ஓடிபோய்.....கத்துகுனு வந்து கடைசி காட்சியில எதிராளியிடம் சண்டையிட்டு ஜெயித்து இருப்பர். ஆனா இது ஒரு மனிதனுடைய வாழ்க்கை சரிதரப் படம் என்றதாலும், ஜாக்கி நடிகல என்றதாலும் இங்கயே ஹீரோ வெற்றிப் பெறுகிறார்) இதற்கு பிறகு அனைவராலும் அதிகமா மதிக்கப்படுகிறார்.

இதன் பிறகுதான் படம் கதைக்கு வருது, 1937'ஆம் ஆண்டு நடைபெறும் போரில் ஜப்பான், சீனா மிது படையெடுத்து வெற்றிபெற்று போஷன் நகரத்தை தனது தலைமையகமாக வைத்துக்கொள்கிறது. IP MAN தனது சொத்துக்களை எல்லாம் இழந்து ஜப்பானியர்களின் நிலகரி சுரங்க குடோனில் கூலியாக வேலைசெய்கிறான்.


ஜப்பானிஸ் ஜெனரல் MIURA, தற்காப்பு கலையான KARATE'வில் மாஸ்டர். ஜெனரல் MIURA ஜப்பானியர்களுக்கும், சீனர்களுக்கும் சண்டை போட்டிகள் நடத்துகிறார் அதில் வெற்றி பெரும் சீனர்களுக்கு ஒரு சிறிய பையளவு அரிசி பரிசாக வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் போட்டிகளில் கலந்துக்கொள்ளலாம். இந்த போட்டியில் கலந்துக்கொள்ளும் IP Man'னின் நண்பன் திரும்பி வராததினால் அடுத்த நாள் போட்டி நடைபெறும் இடத்திருக்கு IP Man செல்கிறார்.............. இதற்கு மேல் அதிரடி ஆக்சன் தான். (வாட்ச் & என்ஜாய்)
 
சமோ ஹங் பற்றி கண்டிப்பா எல்லோருக்கும் நல்ல தெரிஞ்சி இருக்கும், இவர் தான் இந்த படத்தின் பைட் கோரியோக்ராபர் (Fight/Action Master). வித்யாசமான ஸ்டைல்'லில் சிறந்த சண்டை காட்சிகளை அமைத்து இருக்கிறார் (கவலை பட தேவ இல்லை...இந்த படத்துல கயிறு கட்டி பறந்து பறந்து சண்டை போடும் காட்சிகள் எதுவும் இல்ல). டோனி யேன் பாடி  ஸ்டைல் ஏற்றவாறு பக்காவா இருக்கு சண்டை காட்சிகள். முக பாவனைகளும் நல்ல பண்ணி இருக்காரு. படத்தின் டைரக்டர் வில்சன் யிப், பல நல்ல ஆக்சன் படங்களை தந்துள்ளார். அதில் Bullets Over Summer, Kill Zone, Flash Point போன்றவை சில.

சண்டை காட்சிகளுக்கு பின்னணி இசை கன கட்சிதமாக பொருந்தி உள்ளது. காமெராவும் அழகு,  நல்ல ஆக்சன் படத்துக்கு ஏற்றவாறு படம் பிடித்து இருகாங்க. ஆக்சன் படம் விம்புபவர்கள் மட்டும் இன்றி அனைவரும் பார்க்கவேண்டிய ஒரு சிறந்த திரைப்படம். இந்த படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகமும் வெளிவந்தது. நீங்க ஆக்சன் படம் பார்பவர்கள் என்றால் இதன் தொடர்ச்சி பாகங்களையும் பார்க்கலாம், ஆனால் ஒன்றாம் பாகம் போல நல்ல கதை அம்சத்துடன் சேர்ந்த படம் அல்ல மற்றவை.

படத்தில் ஒரு காட்சியில் IP Man, பத்து Black Belt நபருடன் சண்டையிடுவது போல் ஒரு காட்சி, பார்க்கிற நம்மக்கு கண்டிப்பா ஹைபர் டென்ஷன் ஆகும். அதே காட்சியில் நான்கு பேரிடம் சண்டையிடுவது போல் வரும் அந்த சில நிமிடங்கள் கலக்கல்.


Thursday, January 12, 2012

Cell 211 (2009) விமர்சனம்.


Cell 211 என்ற இந்த ஸ்பெயின் நாட்டு திரைப்படம் டேனியல் மோன்சான் என்பவரது இயக்கத்தில் 2009'ஆம் ஆண்டு வெளிவந்தது. 


கதை :
ஜுஹன் ஒலிவர், என்பவன் சிறை காப்பாளன் பணியில் இணைவதற்கு ஒரு நாள் இருக்க, அதற்கு முன்பு நாளே அவன் வேலைசெய்யப் போகும் சிறைச்சாலைக்கு பார்வையிடுவதற்கு செல்கிறான் . எதிர்பாராது நடக்கும் ஒரு சிறு விபத்தினால் தலையில் காயமுற்று சுயநினைவை இழக்கிறான். அவனுடன் சென்றவர்கள் அவனை காலியாக இருக்கும் Cell 211 என்ற சிறை எண்ணில் படுக்க வைத்துவிட்டு மருத்துவரை அழைத்துக்கொண்டு வருவதற்கு செல்கிறார்கள்.

இதே நேரத்தில் சிறையில் இருக்கும் குற்றவாளிகள் அனைவரும் அந்த முழு சிறைச்லையையும் தங்கள் வசப்படுத்திகொள்கிறார்கள். இது எல்லாம் 'Malamadre' என்னும் ஒருவனது தலைமையில் நடைப்பெருகிறது. ஆனால் இவர்களால் வெளியே தப்பித்து செல்லமுடியாது, சிறைச்சாலையின் அணைத்து கதவுகளும் மூடப்பட்டு இருக்கும். ஒரு சிறை காப்பாளனும் இவர்களிடம் மாட்டிக் கொள்கிறான்.

சுயநினைவு அடைந்து கண் முழித்து பார்க்கும் ஜுஹன் ஒலிவர் சிறைச்சாலையில் நடந்தேறிய  மாற்றத்தைக் கண்டு நடந்ததை ஊகித்துக்கொள்கிறான். Malamadre' மற்றும் அனைவரிடமும் தன்னை அவர்களுள் ஒருவனாய் காட்டிக்கொள்கிறான் (ஒரு கொலைக் குற்றவாளியாக). குற்றவாளிகள் அனைவைரும் இதனை நம்பிவிடுகிறார்கள்.

அதே சிறையில் இருக்கும் மூன்று தீவிரவாதிகளை பிணை கைதிகளாக வைத்துகொண்டு, சில கோரிக்கைகளை முன்வைகிறார்கள். இந்த விஷயம் எப்படியோ மீடியாவிற்கு கசிந்துவிடுகிறது. நாட்டில் உள்ள மற்றச் சிறைச்சாலைகளிலும் கலகம் ஏற்படுகிறது. 

ஜுஹன் ஒலிவர் மனைவி ஹெலின கர்பமாக இருக்கிறாள், இந்த ஒரு காட்சி முதலே காட்டப்படுகிறது (படத்த பார்க்குற நமக்கு ஹீரோ மேல பரிதாபம் வரவேனாவா.. அதுக்கு).

இவர்களது கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுகொண்டதா, ஜுஹன் ஒலிவர் சிறைச்சலையில் இருந்து தப்பித்தானா, போன்ற விடைகளை அறிய படத்தை பார்க்கவும்.

நல்ல ஒரு த்ரில்லர் திரைப்படம், மாஸ்டர் பீஸ். படம் ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்தில் படத்தில் ஒன்றிவிடுவோம் இருக்கையின் நுனிக்கே வந்துவிடுவோம். இந்த திரைப்படத்தில் நடித்த அணைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக  நடித்துள்ளனர். முக்கியமாக ஹீரோவாக வரும் ஜுஹன் ஒலிவர் மற்றும் சிறைச்சாலையின் தலைவனாக வரும் Malamadre'.

டைரக்சன், மற்றும் எடிட்டிங் மிக அருமை. படத்தின் ட்ரைலர் கிழே உள்ளது.


Produced By : Alvaro Augustin, Juan Gordan, Emma Lustres, Borja pena.
Directed By : Daniel Monzon
Written By : Francisco Perez Gandul (Novel)
Music By : Roque Banos
Cinematography : Carles Gusi
Editing : Cristina Pastor
Cast : Luis Tosar, Alberto Ammann, Antonio Resines, Manuel Moron. 




Thursday, January 5, 2012

Mystic River (2003) விமர்சனம்.



கிளின்ட் ஈஸ்ட் வூட் இயக்கத்தில் மிஸ்டிக் ரிவர் திரைப்படம் 2003'ஆம் ஆண்டு வெளிவந்தது. டென்னிஸ் லேஹன் எழுதிய மிஸ்டிக் ரிவர் என்ற நாவலை அதன் பெயரிலேயே திரைப்படமாக்கியுள்ளனர் .  ஸீன் பென், டிம் ராப்பின்ஸ் மற்றும் கெவின் பேகன் நடித்துள்ளனர். 


சிறு வயதில் நடக்கும் சில தவறான விஷயங்களினால் பெரியவர்கள் ஆன பிறகு நிறைய பேர் பாதிப்பு அடைகின்றனர், அந்த ஒரு விஷயத்தை பற்றிய படம். க்ளின்ட் ஈஸ்ட்வூட் பற்றி சொல்லவே தேவையில்லை சம கலக்கல் ஆன ஒரு நடிகர். பல நல்ல திரைப்படங்களையும் தயாரித்து இயக்கியும் இருக்கிறார்,  இசை அமைப்பாளரும் கூட. இந்த திரைப்படத்திற்கும் இவரே இசை அமைத்துள்ளார் . 

Rating : R
Genre : Crime, Drama, Mystery

Produced By : Clint Eastwood, Judie Hoyt, Robert Lorenz
Directed By : Clint Eastwood
Written By : Dennis Lehane (Novel), Brian Helgeland (Screenplay)
Cinematography : Tom Stern
Original Music : Clint Eastwood
Cast : Sean Penn, Tim Robbins, Kevin Bacon, Laurence Fishburne, Marcia Gay Harden

ஜிம்மி, டேவ் மற்றும் ஸீன் மூவரும் சிறுவயது நண்பர்கள்.  ஒரு நாள் இவர்கள் மூவரும் தெருவினில் விளையாடிக்கொண்டிருகும்  பொது காரினில் வரும் இருவர், தங்களை போலீஸ் என்று கூறி டேவ்'வை மட்டும் அவர்களின் காரினில் ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள்.  சிறுவன் டேவ்'வை இவர்கள் தொடர்ந்து நான்கு நாட்கள்  பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். சிறுவன் டேவ் அங்கிருந்து தப்பித்துவிடுகிறான்.  இந்த காட்சியில் ஆரம்பமாகும் திரைப்படம் இருவத்தி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு என தொடர்கிறது.

இப்போ அந்த மூன்று பெரும் அதே நகரத்தில் வெவ்வேறு வாழ்கை திசையின் பாதையில், ஜிம்மி முன்னால் தாதா இன்று அங்காடிக் கடை நடத்தி வருகிறான்.  ஜிம்மி மற்றும் இவனுடைய மனைவிக்கு ஒரு பத்தொன்பது வயது மகள், பெயர் ''கேத்தி''. டேவ் சாதாரண ஒரு வேலை செய்து  தனது குடும்பத்துடன் வசித்து வருகிறான் ஆனால் அந்த பழைய நிகழ்வுகளின் பாதிப்புகளில் இருந்து மீளாமல். ஸீன் காவல் துறையில் துப்பறியும் இலாகாவில் பணிபுரிகிறான்.


ஜிம்மியின் மகள் கேத்தி, ப்ரெண்டன் என்பவனை காதலிக்கிறாள். ஜிம்மிக்கு பயந்து இருவரும் வேறு நகரத்திற்கு ஓடிப்போவதாக முடிவு செய்கிறார்கள். கேத்தி அவள் தோழியுடன் அதே இரவு ஒரு பாரில் மது அருந்திக்கொண்டிருக்கும் பொது அங்கு டேவ்'வை சந்திக்கிறாள். இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு அந்த இடத்தை விட்டு இருவேறு திசையில் செல்கிறார்கள்......

வீடு திரும்பும் டேவ்'வின் கையினில் காயம் பட்டுப் இருப்பதை கண்டு அவன் மனைவி அவனிடம் விசாரிக்க, டேவ் ஒரு வழிப்பறி திருடனுடன் நடந்த சண்டையில் அவனை பலமாக தாக்கியதில் உண்டான காயம் என கூறுகிறான். அது மட்டும் இன்றி அவன் இறந்து இருக்ககூடும் எனவும் கூறுகிறான். மறுநாள் செய்தியில் இது போல எந்த நிகழ்வும் நடந்தாக செய்தி வராததினால் அவன் மனைவி டேவ்'வின் மேல் சிறிது சந்தேகிக்கிறாள்.


முன்னால் இரவு கேத்தி கொலை செய்யப்பட்ட விவரம் அடுத்த நாள் அனைவருக்கும் தெரியவருகிறது. கேத்தியின் கொலை வழக்கை விசாரிக்க ஜிம்மியின் பழைய நண்பனான ஸீன் வருகிறார். இவர் ஒரு கோணத்தில் விசாரணை நடத்த, ஜிம்மி அவனுடைய பழைய கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு கேத்தியை கொலை செய்தவனை தேடுகிறான் பழிவாங்க.

ஒரு கட்டத்தில் ஸீன், டேவ்'வை விசாரிக்க முற்றும் மாறுபட்ட பதில்களை சொல்லவே சந்தேகம் எல்லாம் டேவ்'வின் மேல் திரும்புகிறது. டேவ்'விடம் அந்த இரவு நடந்த சம்பவத்திற்கு பிறகு நிறைய மாறுதல்களை காணும் அவன் மனைவியும், கேத்தி'யை ஒரு வேளை டேவ் கொன்றிருக்ககூடும் என சந்தேகிக்கிறாள் இதை ஜிம்மியிடமும் கூறுகிறாள். முன்பே இந்த சந்தேககங்களை இவனது கூட்டாளிகளும் கூறி இருக்க ஜிம்மியும் இதை நம்பிவிடுகிறான்.......

(மேலே இருபது கிளைமாக்ஸ் கட்சியோட ஸ்டில், இந்த இடத்தில்தான்..... )

யார் கேத்தியை கொலை செய்தது.......
டேவ் தான் உண்மையில் கேத்தியை கொலைச் செய்தானா, ஜிம்மி டேவ்'வை என்ன செய்தான், போன்ற கேள்விகளுக்கு விடையை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

படத்தின் கதைக்கு ஏற்றார் போல் மிக சிறப்பாக அமைத்திருக்கும் திரைக்கதை. இந்த திரைப்படத்தில் அனைவரும் அவர்களது கதாபத்திரத்தை உணர்ந்து மிக சிறப்பாக நடித்துள்ளனர். முக்கியமாக மிக சிறப்பாகவும், இயல்பாகவும் நடித்துள்ளனர் ஸீன் பென் மற்றும் டிம் ராப்பின்ஸ்.

படம் பார்க்கும் பொது அந்த முதல் காட்சி சம்மந்தமே இல்லாமல் இருக்கிறதே என நினைத்தேன், ஆனால் படம் நிறைவடையும் பொது இயக்குனர் அந்த  காட்சியை முதலில் காட்டியது எதற்கு என புரிந்தது. படத்தோட கடைசி டைலாக் மன நிறைவுனு சொல்லலாம். மிக சிறந்த நல்ல திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

Awards Won :
  • Academy Awards, USA 2004 - Oscar Award - Best Actor Sean Penn / Best Supporting Actor Tim Robbins
  • Art Directors Guild, 2004 - Excellence in Production Design Award - Production Designer Henry Bumstead /Art Director Jack G. Taylor Jr.
  • Blue Ribbon Awards, 2005 - Blue Ribbon Award - Best Foreign Language Film
  • Boston Society of Film Critics Awards, 2003 - BSFC Award - Best Ensemble Cast  / Best Picture
  • Broadcast Film Critics Association Awards, 2004 - Critics Choice Award - Best Actor Sean Penn / Best Supporting Actor Tim Robbins
  • Cannes Film Festival, 2003 - Golden Coach Award / Palme d'Or Award - Clint Eastwood
  • Casting Society of America, USA 2004 - Artios Award - Best Casting Phyllis Huffman / Best Location Casting Carolyn Pickman
  • Central Ohio Film Critics Association, 2004 - COFCA Award - Best Actor Sean Penn / Best Supporting Actor Tim Robbins / Best Supporting Actress Marcia Gay Harden.
  • Chicago Film Critics Association Awards, 2004 - CFCA Award - Best Supporting Actor Tim Robbins
  • Cesar Awards, France 2004 - Cesar Award - Best Foreign Film
  • Dallas-Fort Worth Film Critics Association Awards, 2004 - DFWFCA Award - Best Actor Sean Penn
  • Florida Film Critics Circle Awards, 2004 - FFCA Award - Best Actor Sean Penn / Best Supporting Actor Tim Robbins 
  • Fotogramas de Plata, 2004 - Fotogramas de Plata Award - Best Foreign Film
  • Golden Globes, USA 2004 - Golden Globe Award - Best Actor Sean Penn / Best Supporting Actor Tim Robbins
  • Kanas City Film Critics Awards, 2004 - KCFCC Award - Best Actor Sean Penn
  • Kinema Junpo Awards, 2005 - Kinema Junpo Award / Readers Choice Award - Best Foreign Film
  • Las Vegas Film Critics Society Awards, 2004 - Sierra Award - Best Actor Sean Penn
  • London Critics Circle Film Awards, 2004 - ALFS Award - Actor of the Year Sean Penn / Director of the Year Clint Eastwood
  • Mainichi Film Concours, 2005 - Mainichi Film Concours Award - Best Foreign Language Film
  • National Board of Review, USA 2003 - NBR Award - Best Actor Sean Penn / Best Film
  • National Society of Film Critics Awards, USA 2004 - NSFC Award - Best Director Clint Eastwood
  • PEN Center USA West Literary Awards, 2004 Literary Award - Best Screenpaly Brian Helgeland
  • Sant Jordi Awards, 2004 - Santa Jordi Award - Best Foreign Language Film
  • Satellite Awards,2004 - Golden Satellite Award - Best Actor Sean Penn / Best Screenpaly Brian Helgeland
  • Screen Actors Guild Awards, 2004 - Actor Award - Best Supporting Actor Tim Robbins
  • Seattle Film Critics Awards, 2003 - Seattle Film Critics Award - Best Supporting Actress Marcia Gay Harden
  • Southeastern Film Critics Association Awards, 2003 SEFCA Award - Best Supporting Actor Tim Robbins / Best Screenpaly Brian Helgeland
  • USC Scripter Award, 2004 - USC Scripter Award - Best Screenpaly Brian Helgeland / Author Dennis Lehane
  • URUGUAYAN Film Critics Association, 2003 - UFCA Award - Best Film
  • Vancouver Film Critics Circle,2004 - VFCC Award - Sean Penn
  • Washington DC Area Film Critics Association Awards, 2003 - WAFCA Award - Best Screenpaly Brian Helgeland