Wednesday, October 19, 2011

The Shining (1980) விமர்சனம்.

   

ஸ்டான்லி குப்ரிக்கின் இயக்கத்தில் வந்த இத்திரைப்படம், தி ஷைனிங் (The Shining) என்னும் ஸ்டீபன் கிங்கின் நாவலில் இருந்து திரைப்படமாக எடுக்கப்பட்டது. இப்படம் Psychological Horror வகை சார்ந்தது. ஜாக் நிகல்சன் நடிப்பில் தி ஷைனிங் 1980ஆம் வருடம் வெளியானது.

Genre : Drama, Horror.
Produced By & Directed By : Stanley Kubrick
Written By : Stephen King (novel)
Screen Play : Stanley Kubrick, Diane Johnson
Original Music By : Wendy Carlos, Rachel Elkind
Cinematography By : John Alcott
Editing By : Ray Lovejoy
Cast: Jack Nicholson, Shelley Duvall, Danny Lloyd, Scatman Crothers

மே 15லிருந்து அக்டோபர் 30௦வரையும் பனியின் காரணமாக முழுமையாக மூடப்படும் ஓவர்லுக் ஓட்டலுக்கு, பனிகாலத்தில் கேர் டேகராக வேளைக்கு வருகிறார் ஜாக் டோர்ரன்ஸ் (Jack Nicholson). இவருடன் இவரின் மனைவி வென்டி டோர்ரன்ஸ் (Shelley Duvall) மற்றும் இவர்களின் ஐந்து வயது மகன் டானி டோர்ரன்ஸ் (Danny Lloyd) வருகிறார்கள். ஒதுக்குபுறமான இந்த ஓட்டலுக்கு அந்த ஆறு மதத்திற்கு எந்த போக்குவரத்தும் இருக்காது. (சாலைகள் மற்றும் அந்த இடமே பனியினால் நிரம்பிவிடும்) இவர்கள் மூவர் மட்டும் தான் அந்த ஓட்டலில் தனிமையாக ஆறு மாதம் இருக்க வேண்டும்.

ஜாக் டோர்ரன்ஸ், பகுதி நேர எழுத்தாளரும் கூட.

சிறுவன் டானி டோர்ரன்சிடம் இயற்கையாகவே சில அபூர்வ சக்தி உள்ளது ,ESP என்னும் பிற்காலத்தில் நடக்கவிருக்கும் சில விஷயங்களை, நிகழ்காலத்தில் உணர்கிறான், தன் கற்பனை கதாபத்திரமான டோனி என்னும் அவனின் வெளிப்பாடுமுலமாகவே.

ஓட்டல் மூடப்படும் அன்று, ஓட்டலின் Chef டிக் ஹல்லோரண், சிறுவன் டானி டோர்ரன்சிடம் 237 எண் அறை பக்கம் மட்டும் செல்லாதே என்று கூறிவிட்டு செல்கிறார். (Chef டிக் ஹல்லோரண், இவருக்கும் ஓர் அபூர்வ சக்தி உண்டு, Telephathy, தொலைதுரத்தில் இருக்கும் ஒருவருடன் எந்த கருவியும் இல்லாமல் பேசிக்கொள்வது அல்லது அவர்கள் நினைக்கும் வார்த்தைகளை கேட்பது).

ஒரு மாதம் முடிந்த நிலையில், ஜாக் டோர்ரன்ஸ் தனிமை காரணத்தால் மனபாதிப்பு அடைகிறார், வித்தியாசமாக நடந்துகொள்கிறார் அதிக கோபமும் படுகிறார்.


சிறுவன் டானி டோர்ரன்ஸ், ஒரு நாள் விளையாடி கொண்டு இருக்கும் பொது, 237 எண் அறை கதவு திறந்திருப்பதை கண்டு, அறை உள்ளே செல்கிறான்.... அடுத்த காட்சியில், வென்டி டோர்ரன்ஸ், பயந்து போய் வரும்  டானி டோர்ரன்ஸ் கழுத்து நேருக்க பட்டுருக்கும் குறிகளை பார்த்து  இதற்கும் காரணம், தன் கணவர் ஜாக் டோர்ரன்ஸ் தான் என நினைத்து கொள்ளும் வென்டி, ஜாக்கை திட்டிவிடுகிறாள்.

ஜாக், அதே கோவத்திலே கோல்ட் ரூம் (Gold Room) செல்கிறார். பார்டெண்டர் Lloyd என்னும் ஒருவனிடம் பேசுகிறார்.(Lloyd oru ஆவி)

பிறகு 237 எண் அறையில் நடந்தவற்றை டானி கூற, வென்டி, ஜாக்கிடம் அங்கு ஒரு மூர்க்கமான பெண் இருக்கிறாள் என கூற, அங்கே செல்லும் ஜாக். அந்த ஆவி பெண்ணை சந்திக்கிறான்.

ஜாக் தன் மனைவியிடம் அங்கு யாரும் இல்லை என கூறுகிறான். ஆனால் அவள் இங்கு இருப்பது டானிக்கு நல்லது இல்லை, உடனே புறப்படவேண்டும் என்கிறாள்.

Chef டிக் ஹல்லோரண், ஏதோ தவறு நடக்க இருக்கிறது ஓட்டலில் என்று அறிந்து (Telephathy). ஓட்டல் செல்ல முற்படுகிறான்.


ஜாக் திரும்பியும் கோல்ட் ரூம் செல்கிறான், அங்கு முன்னால் கேர் டேகர் Delbert Grady ஆவியை சந்திக்கிறான். இந்த Delbert Grady தான், முன்பு தன் சொந்த இரட்டையர் பெண் குழந்தையை கோடலியால் வெட்டி கொன்றான், மற்றும் மனைவியையும் துப்பகியினால் சுட்டு கொன்றவன். 
Delbert Grady, ஜாக்கிடம் உன் மனைவி மற்றும் குழந்தையை நீ தான் திருத்த வேண்டும் என்கிறான்.

வென்டி, ஜாக்கை தேடி செல்கிறாள், அங்கு எதர்ச்சியாக ஜாக் Type செய்ததை பார்க்க, அதில் அனைத்தும் இவ்வாறே ''all work and no play makes jack a dull boy'' Type செய்யப்பட்டு இருப்பதாய் பார்த்து, பயம் கொள்கிறாள். அங்கு வரும் ஜாக், வென்டியை மிரட்டி பயமுறுத்துகிறான். வென்டி, baseball bat'னால் தாக்க ஜாக் சுயநினைவை இழக்கிறான். சுயநினைவு இல்லாத ஜாக்கை, சமையல் அறையில் வைத்து, அறையை மூடி, தாழ்பாள் இடுகிறாள்.

ரேடியோ, தொடர்புகளும் துண்டித்து இருப்பதை பார்க்கிறாள் வென்டி.

ஜாக் அறையை விட்டு வெளியே வருவதற்கு உதவுகிறது Grady யின் ஆவி. அதே நேரத்தில் Tony (டானியின் கற்பனை கதாபத்திரம், ESP யின் வெளிப்பாடு) 'REDRUM' என கதவில் எழுதி வைத்துவிட்டு, 'REDRUM''REDRUM' என கத்திகொண்டே இருக்கிறான்.
வென்டி படுகையில் இருந்து எழ, ஒரு கோடாலி கதவை உடைகிறது.........

வென்டியும், டானியும் தப்பிதர்களா, Chef டிக் ஹல்லோரண், அவர்களை கபாற்றினார, ஜாக்கிற்கு என்ன ஆனது....... திரையுல பாருங்க.

கடைசி காட்சியில் காடப்படும், அந்த Photo'விற்கு எந்த விளக்கமும் கிடையாது. குப்ரிக் அதை நம்ம கிட்டவே விட்டுடறாரு. so நமக்கு என்ன தோணுதோ அது தான் அந்த Photo'வின் அர்த்தம். 

-----*****-----

முதல் கட்சியே அவ்வளவு அழகாக படம் பிடித்திருப்பார்கள்.

Lift Blood சீன், அருவறுப்பு இல்லாமல் அழகாய் இருக்கும்.

மூன்று சக்கர Cycle'ல் ஷாட்டில், ஜாக் பந்து விளையாடும் காட்சியில், மற்றும் 'TYPEWRITTER' Type செய்யும் கட்சிகளில் இசை மற்றும் ஒளிபதிவு அருமை. 

படத்த பார்த்த பின்பு தான் தெரியும், குப்ரிக் படத்தை திரையில ஒட்ல, நம்ம Brain'ல தான் என்று.

ஸ்டான்லி குப்ரிக்கின் அற்புதமான படைப்பு இது, (குப்ரிக் படங்களிலே மற்றும் ஹரார் வகையிலே என்னக்கு மிகவும் பிடித்தது தி ஷைனிங்)




6 comments:

  1. கிட்டத்தட்ட பத்து வருடத்திற்கு முன் படம் பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட ரெண்டு சந்தேகங்கள்..
    நீங்களாவது கொஞ்சம் விளக்குங்கள்..
    - தனிமையின் கொடுமை ஜாக்கை மாட்டும் பாதிப்பதேன்? வெண்டியை ஏன் பாதிக்கவில்லை?
    என் நண்பனது பதில், அவள் தன் குழந்தையுடன் அதிக நேரம் செலவழிப்பதால், தனிமை அவளை பாதிக்கவில்லை..
    - ஸ்டோர் ர்ரோமில் அடைக்கப்பட்ட ஜாக் எப்படி வெளியே வந்தான்?
    //ஜாக் அறையை விட்டு வெளியே வருவதற்கு உதவுகிறது Grady யின் ஆவி -> என்னுடைய புரிதலின்படி, ஆவி என்று ஒன்றுமே இல்லை படத்தில்.. அவை யாவும், ஜாக்கின் கற்பனைகள் மட்டுமே..

    //குப்ரிக் படங்களிலே மற்றும் ஹரார் வகையிலே என்னக்கு மிகவும் பிடித்தது தி ஷைனிங்
    எனக்கு தெரிஞ்ச வரையில், குப்ரிக் எடுத்த ஒரே ஹாரர் படம் தி ஷைனிங் மட்டும் தான் .. :-)

    ReplyDelete
  2. ஏறக்குறைய ஒரு வருடத்துக்கு முன்பே பார்த்த படம்..குப்ரிக்கின் மாஸ்டர்பீஸ்..இந்த படத்தை பற்றி பெரியளவில் விமர்சனங்களை நான் தமிழ்ப்பதிவுலகத்தினில் படித்ததில்லை.உங்களது முயற்சிக்கு முதலில் நன்றி..மேலும் பல திரைப்படங்களை பற்றி எழுத என்னுடைய வாழ்த்துக்கள்..

    உங்களது பிற பதிவுகளை போல இதுவும் நல்ல பதிவே..நல்ல விமர்சனம்.

    ReplyDelete
  3. @பிரசன்னா கண்ணன் - ''தனிமையின் கொடுமை ஜாக்கை மாட்டும் பாதிப்பதேன்? வெண்டியை ஏன் பாதிக்கவில்லை?''............உங்கள் நண்பர் சொன்னது செரிதான். (படத்தின் ஒரு காட்சியிலேயே இதை காட்டிருப்பர்கள். வென்டி, ஜாக்கை வெளியில் போலாம் என கூப்பிட, அதற்கு ஜாக் வெளியில் வர மறுப்பார். பிறகு வென்டி, தன் குழந்தை டானியுடன் வெளியே இருப்பதாய் காட்சி இருக்கும். அதே போல் ஜாக்கின், ஆரம்ப கட்சியை தவிர, அனைத்தும் கட்சிகளும் Hall'ன் 'TYPEWRITTER' காட்சிகளாகவே அமைத்து இருப்பார்கள்).

    ''//ஜாக் அறையை விட்டு வெளியே வருவதற்கு உதவுகிறது Grady யின் ஆவி -> என்னுடைய புரிதலின்படி, ஆவி என்று ஒன்றுமே இல்லை படத்தில்.. அவை யாவும், ஜாக்கின் கற்பனைகள் மட்டுமே..''...............நானும் அனைத்தும் ஜாக்கின் கற்பனை தான் என்று நினைத்தேன். (ஒரு வேளை நிங்களும் என்னை மாதிரி ஆவியை நம்பாதவர அல்லது பயபடதவர இருக்கலாம்...ஹஹா அஹா.......... அதனால் நம் எண்ணத்திலேயே படத்தை பார்த்து இருக்கலாம். - இந்த VIEW'ல் ஆவி இல்லை என்று நினைத்து.)
    பார்வையாளர்களுக்கும் இருப்பதாய் தான் காட்டுகிறார்கள். உதாரணம், கடைசி காட்சியில் ஜாக், டானியை கொள்ள துரத்திக்கொண்டு ஓடும் பொது, டானியை தேடி வரும் வென்டி கண்ணில் படும் ஆவிகள்.

    ''//குப்ரிக் படங்களிலே மற்றும் ஹரார் வகையிலே என்னக்கு மிகவும் பிடித்தது தி ஷைனிங்
    எனக்கு தெரிஞ்ச வரையில், குப்ரிக் எடுத்த ஒரே ஹாரர் படம் தி ஷைனிங் மட்டும் தான் .. :-)''................
    1. குப்ரிக் திரைப்படங்களிலே எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்.
    2. Horror (Genre) வகையிலும் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்.

    ReplyDelete
  4. @Kumaran
    மிக்க நன்றி குமரன்.

    படம் வெளியிட பட்ட நேரத்தில், படத்துக்கு அந்த அளவு 'Talk' கிடையாது. வந்தது எல்லாம் Minus Reviews தான். ஆனால் இன்று எல்லாராலும் பாரட்டப்படுகின்ற ஒரு திரைப்படம். உண்மையாகவே இது குப்ரிக்கின் மாஸ்டர்பீஸ் தாங்க.

    ReplyDelete
  5. அருண்,
    பதில்களுக்கு என் நன்றிகள்!
    //டானியை தேடி வரும் வென்டி கண்ணில் படும் ஆவிகள் >> நல்ல பாயிண்ட்..
    என்ன, ஆவி/பூதம்-னு எதையும் காட்டாம, முழுசா ஒரு Psychiatric Thriller ஆகவே இந்த படத்த எடுத்துருக்கலாம்.. :-)
    சந்திரமுகி எனக்கு பிடிக்காம போனதுக்கும் இது தான் காரணம்.. படத்த நல்லபடியா முடிச்சிட்டு, முப்பது அடி பாம்பு வீட்ட விட்ட போறமாதிரி காண்பித்திருப்பார்கள்..

    ReplyDelete
  6. @பிரசன்னா கண்ணன்
    ''முழுசா ஒரு Psychiatric Thriller ஆகவே இந்த படத்த எடுத்துருக்கலாம்.. :-)
    சந்திரமுகி எனக்கு பிடிக்காம போனதுக்கும் இது தான் காரணம்.. படத்த நல்லபடியா முடிச்சிட்டு, முப்பது அடி பாம்பு வீட்ட விட்ட போறமாதிரி காண்பித்திருப்பார்கள்..''

    30 அடியில பாம்பு இருக்குனு சொல்றாங்க.......... இது இல்லாம இடை,இடையே பாம்பையும் கட்டுவார்கள் சம்மந்தமே இல்லாமல்........

    Shining திரைப்படத்திலும், அப்படிப்பட்ட கட்சிகள் நிறைய இருக்கு....... Typewritter'ன் Colour, White, Black & Blue என்று சில காட்சிகளில் வித்யாசப்படும்.

    கடைசி காட்சியில் காடப்படும், Photo'விற்கு (சம்மந்தம் இல்லை) ஆனால் சம்மந்தம் உள்ளது போல் முதலே ஒரு காட்சி காடப்படும்....
    ஜாக், வென்டியிடம் பேசும் ஒரு டயலாக்,
    Jack: I fell in love with it right away. When I came up here for my interview, it was as though I had been here before. I mean, we all have moments of déjà vu, but this was ridiculous. It was almost as though I knew what was going to be around every corner.

    இது போல் தவறுகள் தெரிந்தே செய்யப்படுவதாக கூட இருக்கலாம். (Maybe for Luck)

    ReplyDelete