Friday, November 11, 2011

American Psycho (2000) விமர்சனம்.


கிறிஸ்டியன் பேல் நடிப்பில் அமெரிக்கன் சைகோ 2000'தில் வெளிவந்த சைகோ த்ரில்லர் வகையை சார்ந்த திரைப்படம். இந்த 'கல்ட் த்ரில்லர்' படத்தை மேரி ஹர்ரோன் இயக்கியுள்ளார். 

ப்ரெட் ஈஸ்டன் எல்லிஸ், எழுதி 1991'ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட நாவலை அதன் பெயரிலே முழு திரைப்படமாக எடுத்துள்ளனர்.


கிறிஸ்டியன் பேல், 'Patrick Bateman' என்னும் கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார் (நடித்துள்ளார் என்பதை விட வாழ்ந்துள்ளார் எனலாம்). சைகீக் கில்லர் பற்றிய படம். சில ஆபாச காட்சிகளும், பல கொடூரமான காட்சிகளும் நிறைந்த திரைப்படம்.

Rating : NC-17

Produced By : Christian halsey Solomon, Chris Hanley, Edward R. Pressman
Directed By : Mary Harron
Screenplay By : Mary Harron, Guinevere Turner
Written By : Bret Easton Ellis
Cinematography : Andrzej Sekula
Music By :John Cale
Edited By : Andrew Marcus
Cast : Christian Bale, Justin Theroux, Josh Lucas, Bill Sage, Chloe Sevigny, Reeth Witherspoon, Samantha Mathis

மனிதர்களுக்கு இருக்கும் பல கெட்ட எண்ணங்களில் சிலது பொறமை, தற்புகழ்ச்சி, தாம் தான் சிறந்தவன் போன்றவை. இது தவறானது என்றும் கூறிவிட முடியாது. இது போன்ற எண்ணங்கள் ஒருவனுக்கு இருப்பதினால் தான், எந்த ஒரு பக்கபலமும் இல்லாமல்  தனிப்பட்ட ஒருவன் சமுதாயத்தில் வெற்றியடைகிறான். ஆனால் இதுவே சமுதாயத்தில் வெற்றியடைந்த ஒருவனுக்கு, இந்த கெட்ட எண்ணங்கள் அளவுக்கு அதிகமாக இருந்தது என்றால். அவனுடைய கோவத்தின் வெளிப்பாடே வேறு மாதிரியாக இருக்கும்.

கதை :
Patrick Bateman, அமெரிக்க, நியூ யார்க் நகரின் வால் ஸ்ட்ரீட்டில் இருக்கும் ஒரு பெரிய நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் பணிபுரிகிறான். Bateman ஒரு அதிபுத்திசாலி, திறமைமிக்கவன் பல விஷயங்களில். அவனுடைய அபார்ட்மென்ட், உடைகள், மற்றும் அவனுடைய பொருட்கள் அனைத்தையும் அவனை சுற்றி இருப்பவர்கள் மற்றும் நண்பர்களை விட மிக விலையுர்ந்த சிறந்ததை உபயோகபடுத்துகிறான்.

அவனுடைய நண்பர்களும் அதே வால் ஸ்ட்ரீட்டில் இருக்கும் மற்ற சில நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் பணிபுரிகின்றனர்.

நண்பர்கள் இவரை சில விஷயங்களில் மிஞ்ச, அதனால் பதிக்கப்படும் இவர். மன பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்.


இந்த கோவத்தின் வெளிப்பாட்டினால். இரவினில் சம்மந்தம் இல்லாதவர்களை கொலை செய்ய ஆரம்பித்து, சில பெண்களையும் வீட்டிற்கு கூடிக்கொண்டு வந்து கொலைசெய்கிறான். இது தொடர்கிறது........

----------*****----------

படத்தின் சிறு ட்ரைலர் இங்கே, கிளிக் செய்து பார்க்கவும்.


கில்லர் திரைப்படங்களில் சிறந்த படம் இது.  கில்லர் படம் பார்ப்பவர்கள் என்றால், கண்டிப்பாக பார்க்கலாம். 

படத்தின் ஒளிப்பதிவு மிக அருமை.

இந்த படத்தின் அதிகப்படியான செலவு என்றால், அது ஒளிபரப்படும் சில பாடல்களின் Copy Right வாங்கிய செலவுதான். 

கிறிஸ்டியன் பேல் குளிப்பது போல் ஒரு காட்சி படத்தில் வரும். அந்த காட்சியில் செட்டில் உள்ள அணைத்து பெண்களும் அந்த காட்சியை நேரடியாக பார்த்தனர்.

பலர் கிறிஸ்டியன் பேல்'லை இந்த படத்தில், இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டாம் என கூற, இதற்காகவே இத்திரைப்படத்தில் விடாப்பிடியாக நடித்தார்.

முதலில் Bateman கதாபாத்திரத்தில் Leonardo Dicaprio  தான் நடிப்பதாக இருந்தது , பிறகு எட்வர்ட் நார்டன், மற்றும் சிலர் நடிப்பதாக பேசப்பட்டது. படத்தின் டைரக்டர், கிறிஸ்டியன் பேல் தான் நடிக்கவேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தார்.

இந்த கொடூரமான கில்லர் திரைபடத்தின் கிளைமாக்ஸ் பார்த்த பிறகு கண்டிப்பாக நமக்கு ஒரு சிறு சிரிப்பு வரும். கிளைமாக்ஸ் புரியவில்லை என்றாலும் பிரச்சனை இல்ல, தெரியாமல் இருபதே சிறந்தது. 

Bateman மற்றும் அவனது நண்பர்கள் அனைவரும், தங்களுடைய பிசினஸ் கார்டை பிறருக்கு காட்டும் காட்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் தனக்கு கிடைக்காத அந்த ஹோட்டலின் ரிசர்வேஷன், அவனுடைய நண்பன் ஒருவனுக்கு கிடைத்து சென்றுவந்துள்ளான் என தெரியவந்ததும். அவனை கொள்வதற்கு, அவனனிடம் பேசிக்கொண்டே, உடையை எல்லாம் மாற்றி அவனை கொள்வது மிக அருமை.  

4 comments:

 1. சிறப்பான விமர்சனம் நண்பரே..
  முன்பே கேள்விபட்ட படம்.ஏனோ
  எனக்கும் கில்லருங்க படத்துக்கும் ஒத்தே வரமாட்டுங்குது.கடைசியா பார்த்ததே
  செவென் படம்னா பார்த்துக்குங்க..
  (இப்பதான் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி)

  உங்கள் எழுத்துக்களை படித்த பிறகு
  என்னமோ, கண்டிப்பா பார்க்க
  வேண்டும் என்று தோன்றுகிறது..
  வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் பல..

  ReplyDelete
 2. நான் இது போன்ற கில்லர் படங்களை பார்ப்பதில்லை அருண். ஆனால் சீரியல் கில்லர் பற்றிய அறிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 3. kumaran @
  உங்களது பாராட்டுகளுக்கு என் நன்றிகள்.

  விமர்சனம் இன்னும் தெளிவாகவும் பெரியதாகவும் எழுதலாம் என்று நினைத்தேன், ஆனால் சில காரணங்களால் செரியாக எழுத முடியவில்லை.
  அனைவரும் நன்கு அறிந்த திரைப்படம்தான் இது. இருந்தாலும் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

  ReplyDelete
 4. N.H.பிரசாத் @
  நன்றி பிரசாத்.

  ReplyDelete