Thursday, January 12, 2012

Cell 211 (2009) விமர்சனம்.


Cell 211 என்ற இந்த ஸ்பெயின் நாட்டு திரைப்படம் டேனியல் மோன்சான் என்பவரது இயக்கத்தில் 2009'ஆம் ஆண்டு வெளிவந்தது. 


கதை :
ஜுஹன் ஒலிவர், என்பவன் சிறை காப்பாளன் பணியில் இணைவதற்கு ஒரு நாள் இருக்க, அதற்கு முன்பு நாளே அவன் வேலைசெய்யப் போகும் சிறைச்சாலைக்கு பார்வையிடுவதற்கு செல்கிறான் . எதிர்பாராது நடக்கும் ஒரு சிறு விபத்தினால் தலையில் காயமுற்று சுயநினைவை இழக்கிறான். அவனுடன் சென்றவர்கள் அவனை காலியாக இருக்கும் Cell 211 என்ற சிறை எண்ணில் படுக்க வைத்துவிட்டு மருத்துவரை அழைத்துக்கொண்டு வருவதற்கு செல்கிறார்கள்.

இதே நேரத்தில் சிறையில் இருக்கும் குற்றவாளிகள் அனைவரும் அந்த முழு சிறைச்லையையும் தங்கள் வசப்படுத்திகொள்கிறார்கள். இது எல்லாம் 'Malamadre' என்னும் ஒருவனது தலைமையில் நடைப்பெருகிறது. ஆனால் இவர்களால் வெளியே தப்பித்து செல்லமுடியாது, சிறைச்சாலையின் அணைத்து கதவுகளும் மூடப்பட்டு இருக்கும். ஒரு சிறை காப்பாளனும் இவர்களிடம் மாட்டிக் கொள்கிறான்.

சுயநினைவு அடைந்து கண் முழித்து பார்க்கும் ஜுஹன் ஒலிவர் சிறைச்சாலையில் நடந்தேறிய  மாற்றத்தைக் கண்டு நடந்ததை ஊகித்துக்கொள்கிறான். Malamadre' மற்றும் அனைவரிடமும் தன்னை அவர்களுள் ஒருவனாய் காட்டிக்கொள்கிறான் (ஒரு கொலைக் குற்றவாளியாக). குற்றவாளிகள் அனைவைரும் இதனை நம்பிவிடுகிறார்கள்.

அதே சிறையில் இருக்கும் மூன்று தீவிரவாதிகளை பிணை கைதிகளாக வைத்துகொண்டு, சில கோரிக்கைகளை முன்வைகிறார்கள். இந்த விஷயம் எப்படியோ மீடியாவிற்கு கசிந்துவிடுகிறது. நாட்டில் உள்ள மற்றச் சிறைச்சாலைகளிலும் கலகம் ஏற்படுகிறது. 

ஜுஹன் ஒலிவர் மனைவி ஹெலின கர்பமாக இருக்கிறாள், இந்த ஒரு காட்சி முதலே காட்டப்படுகிறது (படத்த பார்க்குற நமக்கு ஹீரோ மேல பரிதாபம் வரவேனாவா.. அதுக்கு).

இவர்களது கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுகொண்டதா, ஜுஹன் ஒலிவர் சிறைச்சலையில் இருந்து தப்பித்தானா, போன்ற விடைகளை அறிய படத்தை பார்க்கவும்.

நல்ல ஒரு த்ரில்லர் திரைப்படம், மாஸ்டர் பீஸ். படம் ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்தில் படத்தில் ஒன்றிவிடுவோம் இருக்கையின் நுனிக்கே வந்துவிடுவோம். இந்த திரைப்படத்தில் நடித்த அணைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக  நடித்துள்ளனர். முக்கியமாக ஹீரோவாக வரும் ஜுஹன் ஒலிவர் மற்றும் சிறைச்சாலையின் தலைவனாக வரும் Malamadre'.

டைரக்சன், மற்றும் எடிட்டிங் மிக அருமை. படத்தின் ட்ரைலர் கிழே உள்ளது.


Produced By : Alvaro Augustin, Juan Gordan, Emma Lustres, Borja pena.
Directed By : Daniel Monzon
Written By : Francisco Perez Gandul (Novel)
Music By : Roque Banos
Cinematography : Carles Gusi
Editing : Cristina Pastor
Cast : Luis Tosar, Alberto Ammann, Antonio Resines, Manuel Moron. 




8 comments:

  1. நல்லாயிருக்கு விமர்சனம். டவுன்லோட் பண்ண ட்ரை பண்ணுறேன்.

    இன்னும் நல்ல வித்தியாசமான படங்களை அறிமுகப்படுத்துங்கள்.

    ReplyDelete
  2. ஹாலிவுட்ரசிகன் said...@
    நன்றி, படம் பாருங்க உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.

    ReplyDelete
  3. Well reviewed. A great Spanish thriller.

    ReplyDelete
  4. தாமதமான பின்னூட்டத்துக்கு முதலில் மன்னிக்கவும்..சில வேலை அதனால்தான் நண்பரே.

    இப்பொழுதுதான் விமர்சனம் படித்தேன்.மிக்க நன்று..சுருக்கமாக சிறப்பான முறையில் தாங்கள் ரசித்தவைகளை எழுதி இருக்கிறீர்கள்.ஒவ்வொரு படத்திலும் தாங்கள் கதை சொல்லும் விதம் அருமை..நான் உங்ககிட்ட நிறைய கத்துக்கனும்.நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. மிக தாமதமான வருகைக்கு என் வருத்தங்கள்...சிறிது நாட்கள் இணைய இணைப்பு இல்லாமல் ஊரில் இருந்தேன்...
    Cell 211 படம் நல்ல ஸ்பானிஷ் மொழி படம்....போன வருடம் பார்த்தது......மிக நன்றாக படத்தை பற்றி எழுதி உள்ளேர்கள்....நல்ல விமர்சனம்....

    ReplyDelete
  6. இதுவரை பார்க்காத, கேள்விப்படாத ஒரு படம். அறிமுகத்திற்கு நன்றி.


    சாவி
    யின் தமிழ் சினிமா உலகம்.

    மெரினா: 03.02.2012 - திரைவிமர்சனம்!

    ReplyDelete
  7. ஹாய் முரட்டுசிங்கம் நண்பா.. எனக்கு சமீபத்துல லீப்ஸ்டர் ப்ளாக் அவார்டுன்னு ஒரு விருது கிடைத்தது. இந்த விருதின் விதிமுறைப்படி எனக்கு பிடித்த 5 இளம்பதிவர்களுக்கு விருது அளிக்கனுமாம்..

    அந்த வரிசையில உங்களுக்கும் இந்த விருதை அளிக்கின்றேன். மேலதிக விவரங்களுக்கு -http://www.cinemajz.blogspot.com/2012/02/blog-post.html

    ReplyDelete