Monday, October 31, 2011

Collateral (2004) விமர்சனம்.


'Collateral' திரைப்படத்தின்  கதை ஒரு இரவில் நடக்கும், அதாவது மாலை 6.30 மணியில் இருந்து அடுத்த நாள் காலை 5.40 வரை நடைபெறும் சம்பவங்களாக காட்டப்படுகிறது.

இது ஒரு க்ரைம் த்ரில்லர் வகை சார்ந்த திரைப்படம். மைகேல் மேன் (Michael Mann) இயக்கத்தில் டாம் குருஸ், மற்றும் ஜெமி பாக்ஸ், நடிப்பில் 2004 ஆண்டு வெளிவந்த 'Film Noir' திரைப்படம்.

டாம் குருஸ், வின்சென்ட் என்னும் கொலைகார வில்லன் (Hitman) கதாபாத்திரத்திலும், ஜெமி பாக்ஸ்,  மேக்ஸ் என்னும் இரவு நேர டாக்ஸி ஓட்டுனர் (Cab Driver) கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள்.

Rating : R
Genres : Crime, Drama, Thriller

Producer : Michael Mann, Julie Richardson
Directed By : Michael Mann
Written By : Stuart Beattie
Music By : James Newton Howard
Cinematography : Dion Beebe, Paul Cameron
Edited By : Jim Miller, Paul Rubell
Cast : Tom Cruise, Jamie Foxx, Jada Pinkett Smith, Mark Ruffalo, Peter Berg, Bruce McGill, Irma P. Hall

Annie' (Jada Pinkett Smith) ஒரு வக்கீல். அடுத்த நாள் ஒரு முக்கியமான போதை வழக்கிற்கு தீர்ப்பு, அதற்காக விடு பட்ட அனைத்தையும் முடிபதற்கு ஆபீஸ் செல்கிறாள், மேக்ஸ் தான் டாக்ஸியில் இறக்கி விடுகிறான். இந்த பயணத்தில் Annie'க்கு மேக்ஸ் பழக்கமாக அல்லது பிடித்து போக , 'Annie' மேக்ஸ்'யிடம் தனது 'Business Card'ஐ கூடுக்கிறாள்.

அடுத்த காட்சியில், அங்கு வரும் வின்சென்ட் ஒரு ஐந்து இடங்களுக்கு போக வேண்டும் என்றும், 600$ கூடுப்பதாகவும் கூற, இதற்கு மாக்ஸ் சம்மதிக்கிறான்.

முதல் இடம், ஒரு அப்பார்ட்மென்ட் உள்ளே செல்கிறான் வின்சென்ட், சிறிது நேரத்தில் உள்ளே ஒருவன் சுடப்பட்டு, மேக்ஸ்'ன் டாக்ஸி மேல் வந்து விழுகிறான்.  


மேக்ஸ், வின்சென்ட் தான் கொலைகாரன் என அறிந்து, அங்கு இருந்து தப்பிக்க பார்க்கிறான். வின்சென்ட் துப்பாக்கி முனையில் மேக்ஸ்'ஐ பணியவைத்து, இறந்து போனவனின் சடலத்தை டிக்கியில் போட்டுகொண்டு அடுத்த இடத்திற்கு செல்கிறார்கள். மேக்ஸ் பெரிய ஆபத்தில் மாட்டிகொண்டு இருப்பதை  உணர்கிறான்.

அடுத்த இடம், மேக்ஸ்'ன் கைகளை ஸ்டேரிங் வீல்லில் கட்டிவிட்டு, வின்சென்ட் ஒரு பில்டிங் உள்ளே சென்று அங்கும் ஒருவனை கொலை செய்கிறான். அதே நேரத்தில் கைகள் கட்ட பட்டிருக்கும் மேக்ஸ், சாலையில் வரும் மூன்று பேரை உதவிக்கு அழைக்க, அவர்களோ, இவனுடைய வால்லெட் மற்றும் வின்சென்ட்'ன் லேப்டாப்'ஐ திருடிக்கொள்ள, அங்கு வரும் வின்சென்ட் அவர்கள் மூவரையும் துப்பாகியால் சுட்டு கொள்கிறான்.

வின்சென்ட் அடுத்து ஒரு Jazz Club'ற்கு கூட்டி செல்கிறான், Club' முடிந்த பிறகு Barry' என்பவனை சந்தித்து, சிறிது நேரம் உரையாடுகிறார்கள், அப்போது Barry'க்கு, இவன் தன்னை கொலை செய்யத்தான் இங்கு வந்திருக்கிறான் என்று தெரிந்துவிடுகிறது. வின்சென்ட், ஒரு கேள்வியை கேட்டு, இதற்கு செரியன பதில் கூறிவிட்டால் விட்டுவிடுவதாகவும் கூறுகிறான். Barry' வின்சென்ட் கேட்ட கேள்விக்கு செரியன விடை சொல்லியும், வின்சென்ட் Barry'ஐ கொன்றுவிடுகிறான்.


ஒரு சில காட்சிகளுக்கு பிறகு ஒரு கட்டத்தில், வின்சென்டின் லேப்டாப்'ஐ மேக்ஸ் உடைத்து அதன் Data'வை அளித்துவிடுகிறான். அந்த நேரத்திற்கு கோபப்படும் வின்சென்ட், பிறகு நிலைமையை உணர்ந்து, மேக்ஸ்'ஐ பயமுறுத்தி, போதை கடத்தல் தலைவனிடம் இருந்து 'Flash Drive' ஒன்றை வங்கி வந்து தர சொல்கிறான். மேக்ஸ் அதன் படி செய்கிறான். (அதில் தான் இன்னும் இரண்டு பேரின் டிடைல்ஸ் உள்ளது)

அடுத்து ஒரு நைட் கிளப்'ல் கொரியன் Gangster' ஒருவனை முடிக்கிறான். 

மேக்ஸ் எதேற்சியாக கணினியின் ஸ்க்ரீனை பார்க்க, வின்சென்டின் அடுத்த டார்கெட் Annie' தான் என தெரியவருகிறது.......

மேக்ஸ்'சினால் Annie'ஐ காப்பற்ற முடிந்ததா,....... என்பதை படத்தில் பார்க்கவும்.

----------*****----------


இத்திரைப்படத்தின் இயக்குனர்  மைகேல் மேன், Heat, Miami Vice போன்ற பல நல்ல படங்களையும் இயகயுள்ளர்.

ஒளிபதிவு மிக அழகாக இருக்கும், Location அனைத்தும் L.A. தான். 

Tom Cruise சம கலக்கு கலக்கி இருபாரு படத்துல. இவரு துப்பாக்கி கட்சிகள் எல்லாம் அற்புதம், Professional'ல இருக்கும். (சில ஆங்கில படத்திலும் செரி, பல தமிழ் படங்களிலும் செரி துப்பாக்கிய திருப்பி சுடறது, எகிறி சுடறது இது மாதிரி காமெடி எல்லாம் பண்ணாம, Proffesional'ல இருக்கு)  

Awards Won :

ASCAP Film and Television Music Award 2005,
Won ASCAP Award
Original Music : James Newton Howard
Additional Music : Antonia Pinto

BAFTA Awards 2005, 
Won BEFTA Film Award
Cinematography : Dion Beebe, Paul Cameron

BET Awards 2005, 
Won BET Award
Best Actor : Jamie Foxx

Black Reel Awards 2005, 
Won Black Reel
Best Supporting Actor : Jamie Foxx

Golden Trailer Awards 2005, 
Won Golden Trailer
Best Drama

Satellite Awards 2005,
Won Golden Satellite Award
Best Film Editing : Jim Miller, Paul Rubell

Venice Film Festival 2004,
Won Future Film festival Digital Award
Michael Mann

Washington DC Area Film Critics Association Awards 2004,
Won WAFCA Award
Best Supporting Actor : Jamie Foxx

Los Angeles Film Critics Association Awards 2004,
Won LAFCA Award
Cinematography : Dion Beebe, Paul Cameron

California on Location Awards 2004,
Won COLA
Location : Janice Polley

 National Board of  Review, USA 2004,
Won NBR  Award
Best Director : Michael Mann

Sunday, October 30, 2011

The Spanish Prisoner (1997) விமர்சனம்.


'தி ஸ்பானிஷ் ப்ரிசனர்' டேவிட் மமெட் எழுதி இயக்கிய இத்திரைப்படம் 1997'ஆம் ஆண்டு வெளியானது. காம்ப்பெல் ஸ்காட் மற்றும் ஸ்டீவ் மார்டின் நடித்த, நல்ல ஒரு அருமையான கிளாச்சிக் சஸ்பன்ஸ் திரைப்படம்.


இத்திரைப்படதிற்கும் ஸ்பெயின் நாட்டிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை,இது ஒரு அமெரிக்க திரைப்படம். எந்த கைதியையும் திரைப்படத்தில் காட்டுவதும் இல்லை, கைதியை பற்றிய படமும் இல்லை. (ஸ்பானிஷ் ப்ரிசனர் என்பது பழைய Con Game, இதன் அர்த்தம் நம்ப வைத்து கழுத்தை அறுபது அல்லது fraud தனம் செய்வது)


Rating : PG
Genre : Drama, Mystery, Thriller


Produced By : Jean Doumanian 
Written & Directed By : David Mamet 
Cinematography : Gabriel Beristain
Edited By : Barbara Tulliver
Music By : Carter Burwell
Cast : Campbell Scott, Steve Martin, Rebecca Pidgeon, Ben Gazzara, Ricky Jay

ஜோ ஒரு நல்ல மனிதன், திறமைசாலி (அவன் துறையில் மட்டும்), அனைவரையும் எளிதில் நம்புபவன் (இதெல்லாம் இருந்தால் கண்டிப்பா அவன் பேக்க தான் இருப்பான், படத்திலும் அப்படிதான்). ஜோ ஒரு ஸ்டாக் மார்கட்டிற்கான 'process' ஒன்றை உருவாக்குகிறான் வேலை செய்து கொண்டு இருக்கும் கம்பெனிகாக. ஜோ'வின் முதலாளி, அவனை ஒரு பிசினஸ் மீட்டிங்'கிற்கு ஒரு தீவிற்கு அழைத்து செல்கிறார், ஜோ கம்பெனி லாயரும் உடன் வருகிறார், இருவருக்கும் நல்ல நட்பும் உண்டு. அந்த மீடிங்கில் அவன் இந்த 'process' பற்றி குறிப்பிட்டு இதன் லாபத்தை அவர்களுக்கு காட்டுகிறான். (அது ஒரு பெரும் தொகை, ஆனால் நமக்கு அதை காட்டுவதில்லை).


அந்த தீவிற்கு புதிதாக வரும் ஜிம்மி என்பவனுக்கும் ஜோவிற்கும் நட்பு ஏற்படுகிறது. ஜோவிடம் புத்தகத்தை காகிதத்தில் மடித்து அதை குடுத்து நியூயார்க்கில் உள்ள தாம் தங்கையிடம் குடுத்துவிடுமாறும், பிறகு தன் நியூயார்க் வரும் பொது, ஒன்றாக டின்னெர் சாப்பிடலாம் என்று கூறுகிறான் ஜிம்மி. 


ஜோவின் பாஸ், புதிய செகரெட்டரி சுசன் ரிசி என்பவளையும், ஜோ உடன் நியூயார்க்கிற்கு அனுப்புகிறார்.



சுசன் விமானநிலையத்தில் ஒரு பெண்மணியை சந்திக்க, அவள் தன்னை FBI Agent என்று கூறி, சுசனிடம் அவளது பிசினஸ் கார்டையும் கூடுகிறாள்.


சுசன், விமான பயணத்தின் பொது ஜோவிடம், யாரையும் உலகத்தில் நம்ப முடிவதில்லை என்றும் நன்கு பழக்கமில்லாதவர் குடுத்து அனுப்பும் பொருளை விமானத்தில் கொண்டு செல்லகூடாது என்றும் ஒரு வேலை அதில் போதை பொருள் இருக்கலாம் என்று கூற, ஜிம்மி குடுக்க சொன்ன பொட்டலத்தை பிரித்து பார்க்கிறான், உள்ளே புத்தகம் தான் இருக்கிறது. 


ஜோ, அந்த புத்தகத்தை ஜிம்மியின் தங்கையிடம் கொடுத்துவிடுமாறு, அந்த கட்டிடத்தின் பணிபுரிபவரிடம் கொடுக்கிறான். 



ஜிம்மி, ஜோவிற்கு ஒரே நிமிடத்தில் 'Swiss bank Account' ஓபன் செய்து தருகிறான். பெரிய உணவகத்துக்கும் கூட்டி செல்கிறான், அன்று சனி கிழமை என்பதால் மெம்பெர்ஸ் மட்டும். அதன் உள்ள விட மறுக்கபடுவதினால், ஜிம்மி உடனே அதன் மெம்பெர் கார்டில் கையெழுத்திட்டு மெம்பெர் ஆகிறார், இதனால் கவுருவமாக உள்ளே  விடப்படுகிறார்கள். இதை போல் சிறு சிறு செயல்களால் ஜோவிற்கு, ஜிம்மியின் மேல் நம்பிக்கை உண்டாகிறது. சில நேரங்களில் 'Process' பற்றியும் இருவரும் பேசிக்கொள்கிறார்கள். ஜிம்மி, 'Process' சம்மந்த பட்ட எதற்கும் தன் உதவுவதாக ஜோவிடம் கூறுகிறான்.



இதற்கிடையிலே ஜிம்மி, ஜோவிடம் உன்னுடைய முதலாளி உன்னக்கு எந்த நன்மையும் செய்ய போவதில்லை, உன்னை எமற்றிவிடுவர் பார் என்றே கூறிக்கொண்டே இருக்கிறார். சுசனும் ஜோவிடம் யாரையும் நம்பாதே என்பதையே கூறிக்கொண்டு இருக்கிறாள்.






ஜோவிற்கு நாயமாக தரவேண்டிய லாபங்களை, அவருடைய முதலாளி தர மறுக்க. இதை ஜிம்மியிடம் கூறுகிறார் .  ஜிம்மி தனது பர்சனல் லாயர்'ரிடம் நாளை இதை பற்றி பேசலாம், வரும் பொழுது 'Process copy'யையும் எடுத்து கொண்டு வரச்சொல்கிறார்.

முன்பு நிறைய முறை ஜிம்மியின் தங்கையை சந்திக்கலாம் போகவே, இந்த முறை சந்திபதற்கு ஒரு சிறிய பரிசு ஒன்றை வங்கி கொன்று செல்கிறான். அந்த கட்டிடத்தில் அது போன்ற ஒரு பெண்ணே இல்லையென தெரியவர, 
முன்பு சுசன் பிசினஸ் கார்டு வாங்கிய, அந்த FBI Agent Pat McCune'ற்கு போன் செய்து பிறகு சந்தித்து, இந்த விஷயங்களை அனைத்தையும் கூற, நாளை அவனை கையும், காலுமாக பிடிக்க பிளான் செய்யபடுகிறது.

அடுத்த நாள், ஒரு  இடத்தில் ஜிம்மியை சந்திபதற்கு முன்பு 'Process Copy'யுடன் FBI Agent'sயை சந்திக்கிறான். அவர்கள் ஜோவின் சட்டையில் 'Mic' வைக்கிறார்கள், சாட்சியத்துடன் பிடிபதற்காக.

ஜோவும், ஜிம்மிக்காக காத்திருக்க, நிண்ட நேரம் கடந்தும் ஜிம்மி வராததினால். FBI Agent கைபேசிக்கு கால் செய்ய, அதுபோல் ஒரு என்னே இல்லை என்று தெரியவருகிறது. FBI Office'க்கு  போன் செய்ய அங்கும் இது போல் எவரும் இல்லை என தெரியவருகிறது. 'Process Copy'யை பார்க்க அதனுள்ளும் எழுத்துகள் இல்லாமல் அனைத்தும் வெற்றாக இருக்கிறது. 

இதை காவல் துறையில் புகார் செய்ய, ஜோ சொன்ன விஷயங்களுக்கு, அனைத்தும் மாறுபட்டு இருக்க, காவல் துறை ஜோவையே கைதி செய்கிறது.

ஜிம்மி யாரு, FBI Agents யாரு, Process Copy என்ன ஆனது, என்ன நடந்தது என்று ஜோவிற்கு சுத்தமாக புரிவதில்லை...... படம் பார்க்கும் நமக்கும் தான். So படத்த பார்த்து முடிவ தெரிஞ்சிகோங்க.

----------*****----------


மிக அருமையான, மற்றும் ஆமை வேகத்தில் நகரும் திரைக்கதை கொண்ட இத்திரைப்படம், கணிக்க முடியாத பல விஷயங்களை காட்சிகளில் மறைக்கப்பட்டு இருக்கும். 

இந்த படம் 'அல்பிரேட் ஹிட்ச்காக்' ஸ்டைல் என பலரால் பாராட்டுகளை பெற்றது.

டேவிட் மமெட் எழுதி இயக்கிய இத்திரைப்படத்தில், அவருடைய மனைவி 'Rebecca Pidgeon' தான் சுசன் என்னும் கதாபத்திரத்தில் நடித்தது.



ஸ்டீவ் மார்டின், சிரிப்பு நடிகரான இவர், வில்லன் கதாபத்திரத்தை செய்திருப்பர். 


படத்தில் மேலே பார்த்த சஸ்பன்ஸ் குறைவுதான், இன்னும் ஏகப்பட்ட வினாக்கள், இவை அனைத்துக்கும் படத்தின் முடிவில் ஒரே வரியில் விடை அறியப்படும். (சம காண்டு ஐடேன்)


படத்தின் ஆரம்ப காட்சியில் இருந்து முடிவு வரையிலும், ஹீரோ'வை வைத்தே கட்சிகள் நகூர்தப்படுகிது. (ஹீரோ இல்லாத சினே இல்ல, அவரையே மையமாக வைத்தே கட்சிகள் அனைத்தும் உள்ளது)


இந்த மாதிரி த்ரில்லர் படங்களில், ஹீரோ தான் எல்லாமே, ஆன இந்த படத்துல இவர், படம் முழுவதும் ஜீரோ. எல்லா பிரச்சனைகளும் நடந்துட்டே இருக்கு. ''எதோ நடக்குது'' என்ற கதாபத்திரம் இவருக்கு. 





Thursday, October 27, 2011

Triangle (2009) விமர்சனம்.



'Triangle' திரைப்படம் பிரிட்டன் இயக்குனர் 'கிறிஸ்டோபர் ஸ்மித்' இயக்கத்தில் 2009 ஆம் வெளியானது. இது ஒரு 'Psychological Horror' வகையை சார்ந்த திரைப்படம். 'The Amityville Horror', 'Derailed' மற்றும் '30 Days of Night' போன்ற திரைப்படங்களில் நடித்த 'Melissa George' இத்திரைப்படத்தில் 'Jess' என்னும் கதாபதரத்தில் நடித்துள்ளார்.

இந்த ஹாரர் திரைப்படம் 'Mind Twister' அல்லது 'Mind Bending' எனப்படும் கதைக்களத்தில் அமைந்த மிகவும் அற்புதமான திரைக்கதையை கொண்டது. சில கொடூர கட்சிகள் உள்ள இத்திரைப்படம், த்ரில்லர், சஸ்பன்ஸ் விரும்புபவர்களுக்கு, நல்ல ஒரு ஹாரர் (Favourite) திரைப்படமாக  அமையும்.


Genre : Mystery, Thriller, Drama
Written & Directed By : Christopher Smith
Produced By : jason Newmark, julie Baines, Chris Brown
Cinematography : Robert Humphreys
Music By : Christian  Henson
Edited By : Stuart Gazzard
Cast : melissa George, Joshua Mclvor, Jack Taylor, Michael Dorman, Henry Nixon, Rachael Carpani, Liam Hemsworth, Bryan Probets

கதை : 

Jess, என்பவள் சில நபர்களுடன் சேர்ந்து, ஒரு சிறு படகில் ஒரு நாள் கடல் பயணம் (Trip) செய்கிறாள். அப்பொழுது ஏற்படும் காந்த புயலால், கடல் கொந்தளிப்பில் படகு சிக்கிகொள்கிறது. ஒருவரை தவிர மற்றவர்கள் எல்லாம் பிழைத்து கொண்டு, அந்த இடத்திற்கு அருகில் வரும் கப்பலுக்குள் செல்கிறார்கள். முகமூடி அணிந்த ஒரு உருவத்தால், கப்பலில் ஒவ் ஒருவராக கொல்லப்படுகிறார்கள்.....
சில காட்சிகளுக்கு பிறகு,
ஒரு சிறிய படகு மறுபடியும் கப்பலை நோக்கி வருகிறது.....



அந்த முகமூடி அணிந்த உருவம் யார், எதற்காக இவர்களை கொலை செய்கிறது, அந்த சிறு படகில் வந்தவர்கள் யார். வந்தவர்களுக்கு என்ன ஆனது, Jess பிழைத்து கொண்டாலா, இது போன்ற நிறைய கேள்விகளுக்கு படத்தை பார்த்து விடை தெரிந்து கொள்ளவும்.

படத்தோட முடிவு தான், படத்தோட ஆரம்பம். 

ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பிக்கும் திரைக்கதை, காட்சிகள் செல்ல செல்ல மிகவும் வேகம் பிடித்துவிடும். படத்தில் நிறைய 'Clues' உள்ளது, டயலாக்'கை கவனிக்கவும். இந்த படத்திற்கு கதை விமர்சனமே படிக்க வேண்டியது இல்லை. ஏன் என்றால் அதுவே நிறைய சஸ்பன்ஸ்'ஐ உடைத்துவிடும். ட்ரைலர் கூட பார்க்கதேவை இல்லை, அதிலும் சில சஸ்பன்ஸ் உடைத்துவிடுகிறார்கள். அதனால் தான் நான் எவ்வளவு சிறிதாக முடியுமோ அவ்வளவு சிறிதாக எழுதி உள்ளேன்.

Melissa George உடைய நடிப்பு மிகவும் அருமை. 

Creep, Severance போன்ற ஹாரர் திரைபடங்களி இயக்கிய கிறிஸ்டோபர் ஸ்மித், தான் இந்த கதையையும் எழுதி இயக்கியது.


Sunday, October 23, 2011

Fight Club (1999) விமர்சனம்.




எட்வர்ட் நார்டன், மற்றும் பிராட் பிட், இணைந்து நடித்த இத்திரைப்படம் 'பைட் கிளப்' டேவிட் பிஞ்சர் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளியானது. (Chuck Palahnuik) சக் பலஹ்னயுக் 1996ஆம் எழுதிய 'பைட் கிளப்' என்னும் நாவலின் கதையை வைத்து, அதன் பெயரிலே திரைப்படமாக எடுக்கபட்டது.



'பைட் கிளப்' திரைப்படம் டிராமா வகையை சார்ந்தது, ஆனால் நல்ல ஒரு மிஸ்டரி & திரில்லர் போல் கதைக்களம் அமைத்திருப்பார்கள். இது ஒரு 'Cult' திரைப்படம்.

''நம் ஒரு நாள் இரவு செரியாக தூங்கவில்லை என்றால், அடுத்த நாள் முழுவதும், எதுலிலும் நம் மனது செரியாக இடுபடாது அல்லது அந்த வேலையை செரியாக செய்து முடிக்கமுடியாது. (தனிமையாக உள்ளவர்கள் தான் தூக்கமின்மையால், அதிகம் பாதிக்கபடுபவர்கள்).''  
    
Directed By : David Fincher
Produced By : Rose Grayson Bell, Cean Chaffin, Art Linson
Written By : Chuck Palahnuik
Screenplay By : Jim Uhls
Cinematography : Jeff Cronenweth
Music By : Dust Brothers, John King, Michael Simpson
Edited By : James Haygood
Cast : Brad Pitt, Edward Norton, Helena Bonham Carter, Robert Paulson, Richard Chesler

(Insomnia) தூக்கமின்மையால் பாதிக்ப்படும் 'எட்வர்ட் நார்டன்' படத்தில் இவருக்கு பெயர் எதுவும் கிடையாது. (Narrator) கதை கூறுபவரும் இவரே. மருத்துவர் இவருக்கு தூக்கமாத்திரை தர மறுத்து, அவனை உடற்பயிற்சி செய்யுமாறும் மற்றும் 'Support Group' செல்லுமாறும் அறியுரை கூறுகிறார். 
(Support Group : உடல் பிரச்சனை அல்லது மன பிரச்சனை உள்ளவர்கள் மற்றவர்களிடம் கூறுவது மற்றும் கட்டி பிடுத்துக்கொண்டு அழுவதும்)

'Support Group'பினால் நல்ல பயன்கிட்ட, அதை தொடர்கிறார். அங்கு புதிதாக வரும் 'மார்லா சிங்கர்' என்னும் பெண், இடைஞ்சலாக இருக்க, இருவரும் வெவ்வேறு இடங்களுக்கு மாறிமாறி செல்வதாக முடிவு எடுக்கப்படுகிறது. (ஆனால் இருவரும் அடுத்தவர் தொலைபேசி என்னை வாங்கிகொள்கிறாகள்)  

வேலை விஷயமாக வெளியூர் சென்று திரும்பும் பொது, விமானத்தில் 'டைலர் டர்டுன்' (Brad Pitt) என்னும் சோப்பு விற்பவனை சந்திக்கிறான். 

அவனுடைய 'Appartment' திரும்புகிறான். சற்று முன்னால் தான் அந்த 'Appartment'ல் வெடிவிபத்து நடந்ததால், டைலர் டர்டுன்'க்கு தொலைபேசியில் இதை தெரிவித்து, ஒரு பாரில் சந்திக்கிறார்கள். 
இருவரும் குடித்து முடித்து, வெளியில் வருகிறார்கள். அப்போது  'டைலர் டர்டுன்'  எட்வர்ட் நார்டன்'யிடம் என்னை பலமாக தாக்கு என கூறுகிறான். டைலரை தாக்குகிறான், இருவரும் சண்டையிடுகிறார்கள். இதை அங்கு இருக்கும் மற்றவர்களும் பார்கிறார்கள். இது அங்கு இருக்கும் அனைவர்க்கும் பிடித்து போக. இந்த சண்டையை தினமும் தொடர்கிறார்கள்.  
இந்த சண்டை அணைத்து ஊர்களுக்கும் பரவுகிறது.  இது ஒரு அமைப்பாக இயங்குகிறது, இந்த அமைப்புக்கு 'Fight Club' என பெயர், அணைத்து இடத்திலும்  'டைலர் டர்டுன்'  தலைமையில் இயங்குகிறது.  'பைட் கிளப்' அமைப்பிற்கு 'Rules' உள்ளது.


Rules :

  • 1.  You do not talk about FIGHT CLUB.
  • 2.  You DO NOT talk about FIGHT CLUB.
  • 3.  If someone says "stop" or goes limp, taps out the fight is over.
  • 4.  Only two guys to a fight.
  • 5.  One fight at a time.
  • 6.  No shirts, no shoes.
  • 7.  Fights will go on as long as they have to.
  • 8.  If this is your first night at FIGHT CLUB, you HAVE to fight.
(இந்த ரூல்ஸ்'னால் தான் எட்வர்ட் நார்டன்'க்கு படம் பார்பவருகும் (நமக்கும்) என்ன நடந்தது என்ன தெரியாமல் திரைக்கதை நகரும்).


'மார்லா சிங்கர்' போதையில் எட்வர்ட் நார்டன்'னுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருக்கும் பொது, நார்டன் ரிசிவரை அப்படியே வைத்து விட்டு போக, அதை எடுக்கிறான் டைலர் டர்டுன். பிறகு இவன் வீட்டில் இருவரும் உடலுறவு வைத்து கொள்கிறார்கள். ஆனால் தன்னை பற்றி எதுவும் 'மார்லா சிங்கர்'ரிடம் பேச வேண்டாம் என்று நார்டன்' னிடம் எச்சரிக்கிறான் அல்லது கூறுகிறான்.

பைட் கிளப், ''ப்ராஜெக்ட் மய்ஹெம்'' என்ற ஒன்றை ஆரம்பித்து, பல குற்றங்கள் புரிய ஆரம்பிகிறது. ஒரு நாள் திடிரென டைலர் டர்டுன், எட்வர்ட் நார்டன்'னிடம் கூட சொல்லாமல் சென்றுவிடுகிறான். 

எட்வர்ட் நார்டன்'னின் நண்பன் ஒருவனை போலீஸ் சுட்ற்றுக்கொன்றுவிடுகிறது. இதனால் அனைத்தையம் நிறுத்த வேண்டும் என்று நினைத்து, 'டைலர் டர்டுன்'னை தேடுகிறான்....... 
பிறகு என்ன நடந்தது என்பதை, படத்தில் பார்த்துக்கொள்ளவும். 

மிகவும் நேர்த்தியான ஒரு திரைக்கதை. 
Alien3, Seven, மற்றும் The Game, போன்ற திரைப்படங்களை இயக்கிய, அனைவரும் நன்கு அறிந்த டேவிட் பிஞ்சர் தான் இந்த திரைப்படத்தின் இயக்கனரும். இதற்கு பிறகும் பல நல்ல திரைப்படங்களையும் இயக்கியுள்ளர்.

இந்த படத்தின் ட்ரைலர் கிழே உள்ளது, கிளிக் செய்து பார்க்கவும்.


(இந்த திரைப்படத்தின் பாதிப்பால், U.Sல் நிறைய இடங்களில் இது போன்றே 'Illegal' பைட் கிளப் ஆரம்பிக்கப்பட்டன. ஒரு இரண்டு இடங்களில் வீட்டில் சுயமாக செய்த குண்டுகளும் வெடித்தன). 
  
இது மாதிரி திரைப்படங்கள் பார்க்கும்போது, சில விசயங்களை படத்தின் ஆரம்பத்திலேயே 'Guess' செய்துகொள்வோம். நானும் அப்படித்தான் ''Appartment வெடிவிபதிற்கு 'டைலர் டர்டுன்' தான் காரணம் என்று நினைத்தேன்!, படத்தின் ஒரு காட்சியிலும், 'டைலர் டர்டுன்' அதை நான் தான் செய்தேன் என்று கூறுவான். ஆனால்....... படத்தில் நிறைய காட்சிகளில் 'Clues' கொடுத்திருப்பார்கள். அதை இன்னும் செரியாக ஓர் அளவு கவனித்தால், நிங்களும் 'Guess' செய்துவிடலாம். 


Wednesday, October 19, 2011

The Shining (1980) விமர்சனம்.

   

ஸ்டான்லி குப்ரிக்கின் இயக்கத்தில் வந்த இத்திரைப்படம், தி ஷைனிங் (The Shining) என்னும் ஸ்டீபன் கிங்கின் நாவலில் இருந்து திரைப்படமாக எடுக்கப்பட்டது. இப்படம் Psychological Horror வகை சார்ந்தது. ஜாக் நிகல்சன் நடிப்பில் தி ஷைனிங் 1980ஆம் வருடம் வெளியானது.

Genre : Drama, Horror.
Produced By & Directed By : Stanley Kubrick
Written By : Stephen King (novel)
Screen Play : Stanley Kubrick, Diane Johnson
Original Music By : Wendy Carlos, Rachel Elkind
Cinematography By : John Alcott
Editing By : Ray Lovejoy
Cast: Jack Nicholson, Shelley Duvall, Danny Lloyd, Scatman Crothers

மே 15லிருந்து அக்டோபர் 30௦வரையும் பனியின் காரணமாக முழுமையாக மூடப்படும் ஓவர்லுக் ஓட்டலுக்கு, பனிகாலத்தில் கேர் டேகராக வேளைக்கு வருகிறார் ஜாக் டோர்ரன்ஸ் (Jack Nicholson). இவருடன் இவரின் மனைவி வென்டி டோர்ரன்ஸ் (Shelley Duvall) மற்றும் இவர்களின் ஐந்து வயது மகன் டானி டோர்ரன்ஸ் (Danny Lloyd) வருகிறார்கள். ஒதுக்குபுறமான இந்த ஓட்டலுக்கு அந்த ஆறு மதத்திற்கு எந்த போக்குவரத்தும் இருக்காது. (சாலைகள் மற்றும் அந்த இடமே பனியினால் நிரம்பிவிடும்) இவர்கள் மூவர் மட்டும் தான் அந்த ஓட்டலில் தனிமையாக ஆறு மாதம் இருக்க வேண்டும்.

ஜாக் டோர்ரன்ஸ், பகுதி நேர எழுத்தாளரும் கூட.

சிறுவன் டானி டோர்ரன்சிடம் இயற்கையாகவே சில அபூர்வ சக்தி உள்ளது ,ESP என்னும் பிற்காலத்தில் நடக்கவிருக்கும் சில விஷயங்களை, நிகழ்காலத்தில் உணர்கிறான், தன் கற்பனை கதாபத்திரமான டோனி என்னும் அவனின் வெளிப்பாடுமுலமாகவே.

ஓட்டல் மூடப்படும் அன்று, ஓட்டலின் Chef டிக் ஹல்லோரண், சிறுவன் டானி டோர்ரன்சிடம் 237 எண் அறை பக்கம் மட்டும் செல்லாதே என்று கூறிவிட்டு செல்கிறார். (Chef டிக் ஹல்லோரண், இவருக்கும் ஓர் அபூர்வ சக்தி உண்டு, Telephathy, தொலைதுரத்தில் இருக்கும் ஒருவருடன் எந்த கருவியும் இல்லாமல் பேசிக்கொள்வது அல்லது அவர்கள் நினைக்கும் வார்த்தைகளை கேட்பது).

ஒரு மாதம் முடிந்த நிலையில், ஜாக் டோர்ரன்ஸ் தனிமை காரணத்தால் மனபாதிப்பு அடைகிறார், வித்தியாசமாக நடந்துகொள்கிறார் அதிக கோபமும் படுகிறார்.


சிறுவன் டானி டோர்ரன்ஸ், ஒரு நாள் விளையாடி கொண்டு இருக்கும் பொது, 237 எண் அறை கதவு திறந்திருப்பதை கண்டு, அறை உள்ளே செல்கிறான்.... அடுத்த காட்சியில், வென்டி டோர்ரன்ஸ், பயந்து போய் வரும்  டானி டோர்ரன்ஸ் கழுத்து நேருக்க பட்டுருக்கும் குறிகளை பார்த்து  இதற்கும் காரணம், தன் கணவர் ஜாக் டோர்ரன்ஸ் தான் என நினைத்து கொள்ளும் வென்டி, ஜாக்கை திட்டிவிடுகிறாள்.

ஜாக், அதே கோவத்திலே கோல்ட் ரூம் (Gold Room) செல்கிறார். பார்டெண்டர் Lloyd என்னும் ஒருவனிடம் பேசுகிறார்.(Lloyd oru ஆவி)

பிறகு 237 எண் அறையில் நடந்தவற்றை டானி கூற, வென்டி, ஜாக்கிடம் அங்கு ஒரு மூர்க்கமான பெண் இருக்கிறாள் என கூற, அங்கே செல்லும் ஜாக். அந்த ஆவி பெண்ணை சந்திக்கிறான்.

ஜாக் தன் மனைவியிடம் அங்கு யாரும் இல்லை என கூறுகிறான். ஆனால் அவள் இங்கு இருப்பது டானிக்கு நல்லது இல்லை, உடனே புறப்படவேண்டும் என்கிறாள்.

Chef டிக் ஹல்லோரண், ஏதோ தவறு நடக்க இருக்கிறது ஓட்டலில் என்று அறிந்து (Telephathy). ஓட்டல் செல்ல முற்படுகிறான்.


ஜாக் திரும்பியும் கோல்ட் ரூம் செல்கிறான், அங்கு முன்னால் கேர் டேகர் Delbert Grady ஆவியை சந்திக்கிறான். இந்த Delbert Grady தான், முன்பு தன் சொந்த இரட்டையர் பெண் குழந்தையை கோடலியால் வெட்டி கொன்றான், மற்றும் மனைவியையும் துப்பகியினால் சுட்டு கொன்றவன். 
Delbert Grady, ஜாக்கிடம் உன் மனைவி மற்றும் குழந்தையை நீ தான் திருத்த வேண்டும் என்கிறான்.

வென்டி, ஜாக்கை தேடி செல்கிறாள், அங்கு எதர்ச்சியாக ஜாக் Type செய்ததை பார்க்க, அதில் அனைத்தும் இவ்வாறே ''all work and no play makes jack a dull boy'' Type செய்யப்பட்டு இருப்பதாய் பார்த்து, பயம் கொள்கிறாள். அங்கு வரும் ஜாக், வென்டியை மிரட்டி பயமுறுத்துகிறான். வென்டி, baseball bat'னால் தாக்க ஜாக் சுயநினைவை இழக்கிறான். சுயநினைவு இல்லாத ஜாக்கை, சமையல் அறையில் வைத்து, அறையை மூடி, தாழ்பாள் இடுகிறாள்.

ரேடியோ, தொடர்புகளும் துண்டித்து இருப்பதை பார்க்கிறாள் வென்டி.

ஜாக் அறையை விட்டு வெளியே வருவதற்கு உதவுகிறது Grady யின் ஆவி. அதே நேரத்தில் Tony (டானியின் கற்பனை கதாபத்திரம், ESP யின் வெளிப்பாடு) 'REDRUM' என கதவில் எழுதி வைத்துவிட்டு, 'REDRUM''REDRUM' என கத்திகொண்டே இருக்கிறான்.
வென்டி படுகையில் இருந்து எழ, ஒரு கோடாலி கதவை உடைகிறது.........

வென்டியும், டானியும் தப்பிதர்களா, Chef டிக் ஹல்லோரண், அவர்களை கபாற்றினார, ஜாக்கிற்கு என்ன ஆனது....... திரையுல பாருங்க.

கடைசி காட்சியில் காடப்படும், அந்த Photo'விற்கு எந்த விளக்கமும் கிடையாது. குப்ரிக் அதை நம்ம கிட்டவே விட்டுடறாரு. so நமக்கு என்ன தோணுதோ அது தான் அந்த Photo'வின் அர்த்தம். 

-----*****-----

முதல் கட்சியே அவ்வளவு அழகாக படம் பிடித்திருப்பார்கள்.

Lift Blood சீன், அருவறுப்பு இல்லாமல் அழகாய் இருக்கும்.

மூன்று சக்கர Cycle'ல் ஷாட்டில், ஜாக் பந்து விளையாடும் காட்சியில், மற்றும் 'TYPEWRITTER' Type செய்யும் கட்சிகளில் இசை மற்றும் ஒளிபதிவு அருமை. 

படத்த பார்த்த பின்பு தான் தெரியும், குப்ரிக் படத்தை திரையில ஒட்ல, நம்ம Brain'ல தான் என்று.

ஸ்டான்லி குப்ரிக்கின் அற்புதமான படைப்பு இது, (குப்ரிக் படங்களிலே மற்றும் ஹரார் வகையிலே என்னக்கு மிகவும் பிடித்தது தி ஷைனிங்)




Saturday, October 15, 2011

Donnie Darko (2001) விமர்சனம்.



Donnie Darko, இது ஒரு Psychological Thriller வகையை சேர்ந்த திரைப்படம், படம் வெளிவந்த வருடம் 2001. ஒரு சில சிறந்த நல்ல திரைப்படங்களில் இதுவும் ஒன்று.


  • Genres : Mystery, Sci-Fi & Drama.
  • Written & Directed By : Richard kelly
  • Produced By : Adam Fields, Nancy Juvonen, Sean Mckittrick & Drew Barrymore
  • Music by : Michael Andrews
  • Cinematography : Steven B. poster
  • Editing By : Sam Bauer & Eric Strand
  • Starring : Jake Gyllenhaal, Jena Malone, mary McDonnell, Holmes Osborne, Katharine Ross, James Duval, Maggie Gyllenhaal & Drew Barrymore.
       மன சம்மந்தப்பட்ட பிரச்சனை உள்ள Donnie Darko, பள்ளி மேற்ப்படிப்பு படிக்கும் மாணவன், இவன் உறங்கிக்கொண்டு இருக்கும் பொது விசித்திரமான ஒரு குரல் கேட்டு, அதை தொடர்ந்து விட்டிற்கு வெளியில் செல்கிறான் சுய உணர்ச்சி இல்லாமல். அங்கு ஒரு விசித்திரமான முயல் உருவம் கொண்ட ஒன்று, அதன் பெயர் Frank. இன்னும் 28 நாள், 6 மணிநேரம், 42 நிமிஷம், 12 வினாடிகளில் இந்த உலகம் அழிய போவதாக அது Donnie Darko'விடம் கூறுகிறது.

        அடுத்த நாள் காலை, கோல்ப் மைதானத்தில் கண் விழிக்கும் Donnie Darko, தன் விட்டுக்கு திரும்புகிறான். முன்னால் இரவு அவன் படுத்துறங்கும் கட்டில் மேல் விமாண ஜெட் என்ஜின் விழுந்து உள்ளது என்பதை அறிகிறான். யாருக்கும் தெரிவதில்லை அந்த ஜெட் என்ஜின் எங்கிருந்து வந்தது என்று, அந்த சுற்றுவட்டாரத்தில் எந்த விமானமும் பறக்கவில்லை என்று தெரியவருகிறது. எந்த விமாண கம்பனியும், என்ஜின் இழந்ததாக ரிப்போர்ட் செய்வதில்லை.

       அடுத்த நாள், Gretchen Ross என்னும் பெண் புது வரவாக வருகிறாள் Donnie'யின் வகுப்பிற்கு, இருவரும் நண்பர்கள் ஆகின்றனர், நட்பு, காதலில் போய் முடிகிறது.




       முயல் உருவம் கொண்ட Frank, Donnie Darko'வை மிக பெரிய குற்றங்கள் புரிய, தூண்டுதல் எண்ணங்களை அவனுக்கு கூறுகிறது. Donnie Darko'வும் Frank, சொன்ன அணைத்து தவறுகளையும் செய்கிறான். அது, அவனுக்கு 'Time Travel' பற்றியும் நிறைய விஷயங்கள் சொல்கிறது.

        Donnie' யின் தாயாரும், சிறிய தங்கையும் நடன போட்டிக்காக வெளி ஊர் செல்கிறார்கள். Donnie'யும், பெரிய தங்கையும் ஹல்லோவீன் (Halloween) அவர்களது வீட்டில், நண்பர்களுடன் கொண்டாடுகிறார்கள். அங்கு வரும் Gretchen Ross, தன் தாயை காணவில்லை என்றும், இதற்கு காரணம் தன்னுடைய Step Father எனவும் கூறுகிறாள்.

     இன்றுடன் 28 நாட்கள் முடிவடைந்து, மிதம் இருப்பது 6 மணி நேரம் தான், என்று நினைவுக்கு வரும் Donnie, தன் காதலியையும், இரண்டு நண்பர்களையும் கூட்டிக்கொண்டு 'Grandma Death' என்னும் வயதான ஒரு பாட்டியிடம் செல்கிறான்.
பள்ளியில் இவர்களுடன் படிக்கும் இரண்டு மாணவர்களால் தாக்கபடுகிறார்கள். Gretchen Ross, இதில் மயக்கம் முற்று விழுகிறாள். அப்போது அங்கே அதி வேகமாக வரும் ஒரு கார், தவறுதலாக Gretchen Ross மேல் ஏறி விடுகிறது, காரில் வந்த ஒருவனை, Donnie தன் தந்தையிடம் இருந்து எடுத்து கொண்டு வந்த துப்பாகியால் கொன்றுவிடுகிறான். அவன் பெயரும் Frank தான், இவன் Donnie'யின் தங்கை எலிசபெத்தின் காதலன்.




    தன் காதலி Gretchen Ross'இன் உயிரற்ற உடலை எடுத்துக்கொண்டு, சுறாவளி புயல் வரும் திசையை நோக்கி செல்கிறான். அதை அடைந்தவுடன், தன் இறந்து போன காதலியுடன் அதை பார்த்தவாறு சிரிகின்றான். அதே நேரத்தில் Donnie'யின் தாயும், அவன் சிறிய தங்கையும் வரும் விமானத்தின் ஜெட் என்ஜின் உடைந்து சுறாவளி புயலால் இழுக்ப்படுகிறது..........
இதற்கு மேல் வருவது தான் படத்தின் முடிவு காட்சி, இங்கயே நான் நிறுத்தி கொள்கிறேன்.

    படத்தின் கதையை மேலோட்டமாக தான் சொல்லிருக்கிறேன். திரைபடத்தின் சுவாரசியத்தை என் விமர்சனம் குறைக்க வேண்டாம் என்று. படத்தில் நிறைய புதிர்களை (Puzzles) வைத்து கட்சிகளை அமைத்து இருப்பார்கள். முதல் தடவை பார்க்கும் பொழுதே இத்திரைப்படம் அனைவருக்கும் பிடித்து போகும். ஆனால் பல விஷயங்கள் விட்டு அல்லது புரியாமல் இருக்கும். அடுத்த திரும்பியும் இப்படத்தை பார்க்கும் பொது சிலது தெரியவரும். படத்தோட டைரக்டர்'s கட், கிடைத்தால் வங்கி பாருங்க அதுல இன்னும் நிறைய விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கு.

http://www.donniedarko.org.uk/introduction/ இந்த லிங்க் அணைத்து புதிர்களுக்கும்/புரியாத விசயங்களுக்கும் விளக்கம் தருகிறது.

     இத்திரைப்படம் 28 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்டது, இதன் மொத்த செலவு $ 4.5 மில்லியன். படம் தியேட்டரில் வெளிவந்து $ 4.1 மில்லியன் தான் வசூலானது. பின்பு DVD வெளியாகி $ 10 மில்லியன் மேல் வசூலானது.

Awards Won :
  1. 2001 San Diego Film Critics Awards SDFCS Award Best Screenplay (Original) Richard Kelly
  2. 2001 Sweden Fantastic Film Festival Audience Award Richard Kelly
  3. 2001 Sitges-Catalonian international Film Festival Best ScreenPlay Richard Kelly
  4. 2001 Toronto Film Critics Association Awards Special Citation(For the best film not to receive a proper theatrical release in Canada.)
  5. 2002 Academy of Science Fiction, Fantasy & Horror Films, USA Special Award Young Filmmaker's Showcase Richard Kelly
  6. 2002 Amsterdam Fantastic Film festival Silver Scream Award Richard Kelly
  7. 2002 Cinenygma - luxembourg International Film Festival Audience Award Richard Kelly
  8. 2002 Gerardmer Film Festival premier Award Richard Kelly
  9. 2003 Chotrudis Awards Won Chotrudis Awards Best Actor Jake Gyllenhaal Best Screenplay (original) Richard Kelly
  10. 2003 Film Critics Circle of Australia Awards FCCA Award Best Foreign Film (English Language)