சில திரைப்படங்கள் பார்த்த பின்பு அதனுடைய பாதிப்பு பல நாள் வரை நம் மனதில் ஒரு வலி போன்று காயத்தை ஏற்படுத்தும். அந்த வகை திரைப்படம் தான் இந்த AMERICAN HISTORY X . இந்த திரைப்படம் நிறவெறி/இனவெறி ஐ மையமாக வைத்து எடுக்கபட்டது, இந்த பாதையில் செல்லும் ஒருவனால்,அவன் குடும்பத்திலும், நாட்டிலும் ஏற்படும் விளைவுகளையும்,பாதிப்புகளையும் சொல்கிறது இந்த திரைப்படம்.
Rating R
Director & Cinematography : Tony Kaye
Writer : David McKenna
Music : Anne Dudley
Cast : Edward Norton, Edward Furlong, Avery Brooks, Beverly D'Angelo
Writer : David McKenna
Music : Anne Dudley
Cast : Edward Norton, Edward Furlong, Avery Brooks, Beverly D'Angelo
Non Linear Narrative விதத்தில் இந்த திரைபடத்தின் கதை சொல்லபடுகிறது.
எட்வர்ட் பர்லாங் கதை கூறுவதாக திரைப்படம் அமைக்கப்பட்டுள்ளது.
டிரேக் வின்யார்ட் (Edward Norton) சிறையில் இருந்து வெளி வந்து நடக்கும் சம்பவங்கள் வர்ணத்திலும், நடந்த சம்பவங்கள் (Flash Back) கறுப்பு & வெள்ளையிலும் காட்டப்படுகிறது.
டிரேக் வின்யார்ட் (Edward Norton) மற்றும் டேனி வின்யார்ட் (Edward Furlong) இருவரும் சகோதரர்கள், இவர்கள் குடும்பத்துடன் கலிபோர்னியா- லாஸ் ஏஞ்செல்ஸ், வெனிஸ் பீச் அருகில் வாழுகின்றனர். இவர்களது தந்தை தீ அணைப்பு பணியாளராக பணிபுரிகிறார். ஒரு நாள் பணியில் இருக்கும் பொழுது, அவர் ஒரு போதை வியாபாரி கறுப்பரினால் சுட்டு கொல்லபடுகிறார். இதனால் டிரேக் வின்யார்ட் (Neo-Nazi) புதிய நாசி என்னும் இயக்கத்தில் இணைகிறார். இது ஒரு (Skinhead) மொட்டை அடித்து கொள்ளும் அமைப்பு, இதில் உள்ளவர்கள் (White Supremacy) வெள்ளையனே உயர்ந்தவன் மற்ற இனத்தவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள் என்னும் கொள்கை உடையவர்கள்.
டிரேக் வின்யார்ட் புதிய நாசியின் இரண்டாம் தலைவன் ஆகிறார். இவர்களது அமைப்பு மற்ற நாட்டு காரர்களின் கடைகளை நாசம்/சேதம் செய்கிறது. உள்ளூர் கறுபர்களிடம் கூடை பந்து போட்டியில் வெற்றி பெற்று, அந்த இடத்தை அவர்களது இடமாக வைத்துகொண்டு, கறுபர்களை வெளியற்றிவிடுகிறர்கள். இந்த விஷயங்கள் எதுவும் அவனது குடும்பத்திற்கு தெரிவதில்லை.
ஒரு நாள் வின்யார்ட் குடும்பத்தில் அனைவரும் உணவு அருந்தி கொண்டு இருக்கும் பொழுது சாதரணமாக அமெரிக்க பிரச்சனைகளையும், மற்ற நாட்டு காரர்களினால் நடக்கும் பிரச்சனைகளையும் பேச ஆரம்பித்து, டிரேக் வின்யார்ட் அதிக படியான கோபம் உண்டாகி தன் கருத்திற்கு உடன்படாத அனைவரையும் தகாத முறையில் பேசி, காதலியை தவிர, தன் தங்கையை அடிக்க போய்விடுவர், மற்றும் தன் அம்மாவின் புதிய காதலன் (Jewish இனத்தவர்) வீட்டை விட்டு வெளியே துரத்தி விடுவர்.
இதனால் டிரேக் வின்யார்டின் அம்மா அவனை வீட்டை விட்டு வெளியில் போகுமாறு சொல்லிவிடுகிறாள், அவனும் தான் நாளை போகிறேன் என்று சொல்கிறான். அவன் தம்பியும் அவனுடன் செல்வதாக முடிவு செய்யபடுகிறது.
அன்று இரவு டிரேக் வின்யார்ட் தன் காதலியுடன் உடலுறவு கொண்டிருக்கும் பொது, முன்று கறுப்பர்கள் டிரேக் வின்யார்டின் கார் கண்ணாடியை உடைத்து திருட பார்கிறார்கள், இதை பார்க்கும் டேனி வின்யார்ட் தன் அண்ணனிடம் கூறுகிறான். டிரேக் வின்யார்ட் துப்பாகியால் அவர்களை கொன்றுவிடுகிறான்.
மேலே சொன்னது அனைத்தும் கறுப்பு & வெள்ளையில் காட்டப்படும் திரையில். ஏன் என்றாள் அனைத்தும் நினைத்து பார்ப்பவை (Flash Back).
டிரேக் வின்யார்டுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைகிறது. சிறையில் வெள்ளை அமெரிக்கர்கள் அவரை பலாத்காரம் செய்கிறார்கள். ஒரு கறுப்பரின் நல்ல நட்பும் அவருக்கு கிடைக்கிறது. மூன்று ஆண்டுகள் கழித்து சிறையில் இருந்து விடுதலை ஆகிறார்.
டேனி வின்யார்ட், ஆசிரியர் அவனை வரலாறு பற்றி எழுத சொல்ல, அவன் ஹிட்லரின் ' mein kampf ' பற்றி எழுதி இருப்பதை பார்க்கும் ஆசிரியர் அவனை தலைமை ஆசிரியரிடம் Dr. Bob Sweeney (Avery Brooks) ரிபோர்ட் பண்ணிவிடுகிறார். (இவர் முன்பு டிரேக் வின்யார்ட் ஆசிரியர், சிறையில் இருக்கும் பொழுது இவர் தான் டிரேக் வின்யார்ட்ஐ சந்தித்து, paroleலில் வெளியில் கொண்டு வருகிறார்)
தலைமை ஆசிரியர் Dr. Bob Sweeney, டேனி வின்யார்ட்'ஐ அவன் அண்ணன் பற்றி எழுதி கொண்டுவருமாறு கேட்கிறார், டானி வின்யார்டும் சம்மதிக்கிறான்.
சிறையில் இருந்து விடுதலையாகும் டிரேக் வின்யார்ட் தன் குடும்பத்தார் அனைவரிடமும் அன்பாக பழகுகிறான், அந்த வசதி குறைவான வீட்டில் இருந்து வேற நல்ல வீட்டிற்கு மாற வேண்டும் என்று கூறுகிறான், தன் தம்பியும் தான் செய்த அதே தப்பான வழியில் பயணிக்கிறான் என்று தெரிந்து, அவனை மாற்ற முயற்சிக்கிறான், அன்று இரவு நடக்கும் புதிய நாசி (Neo-nazi) கேளிகைக்கு போக வேண்டாம் என கூறுகிறான்.
டிரேக் வின்யார்ட் தன் பழய நண்பனுடன் நியோ-நாசி பார்ட்டிக்கு செல்கிறார், டிரேக் வின்யார்டை பார்த்து அனைவரும் (Neo-Nazi Skinhead Gang)பெருமை படுகிறார்கள், அவர் நியோ-நாசி அமைப்பின் தலைவன் கமேரோன் அலேக்ஸாண்டரை சந்தித்து, தனக்கும் இந்த அமைப்புக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும், தன் தம்பியையும் இதில் சேர்க்க வேண்டாம் என்று கேட்க, இதை மறுக்கிறார் கமேரோன் அலெக்ஸாண்டர், இந்த விவாதத்தில் டிரேக் வின்யார்ட், கமேரோன் அலெக்ஸாண்டரை அடித்து விடுகிறார். இது மாற்ற அனைவருக்கும் தெரிந்து அவரை துரத்த, அங்கு இருந்து டிரேக் வின்யார்ட் தப்பி ஓடுகிறான். இது அனைத்தையும் பார்க்கும் டேனி வின்யார்ட் அவன் அண்ணனை பின்தொடரிந்து பொய் அவன் அண்ணனிடம் கோவப்படுகிறான்.
டிரேக் வின்யார்ட் தன் தம்பிக்கு சிறையில் நடந்தவற்றை கூறி, தான் திறிந்தி விட்டதாகவும் கூறுகிறான்.
அடுத்த நாள் டிரேக், அவன் தம்பி டேனி வின்யார்டை பள்ளியில் விட்டு விட்டு வரும் பொழுது, அவன் இருக்கும் திசையை நோக்கி அதிவேகமாக ஒரு கார் வருகிறது.............
இது தான் படத்தோட கடைசி காட்சி, முடிவ படத்துல பார்த்துகோங்க.
இந்த படத்தோட முடிவே, எதற்கோ ஒரு ஆரம்பம் போல் முடித்திருப்பார்கள்.
டிரேக் வின்யார்ட் தவறான வழியில் போனதற்கு ( மற்ற இனத்தை வேறுபதற்கு காரணம் ), அவன் தந்தையின் மரணம் மட்டும் காரணமின்றி, அவனது தந்தை முதலில் இருந்தே இன வெறுப்பை கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு நெஞ்சில் பதியுமாறு பேசும் வார்த்தைகளும் காரணம் என்று படத்தை முடிதிருப்பர்கள்.
உதிரிகள் :
எட்வர்ட் பார்லாங் தான் Terminator-2 வில் ஜான் கார்னர் ஹ நடிச்சி இருப்பர்.
டோனி கே இந்த படம் பண்ணிட்டு, திரைல அவரோட பெயர போடா வேண்டாம்னு சொன்னார். (Stunt பண்ணி இருக்கலாம்)
Nice Review.
ReplyDeleteWhen someone writes an piece of writing he/she maintains the image of a user in
ReplyDeletehis/her mind that how a user can know it. So that's why this article is great. Thanks!
My webpage - slipperchairs.net
Here is my blog post ; mens summer fashion tips
Hey there! Someone in my Facebook group shared this site with
ReplyDeleteus so I came to look it over. I'm definitely loving the information. I'm bookmarking and will be tweeting this to my followers!
Excellent blog and superb design and style.
Feel free to surf to my page :: fasthomecooking.com
Feel free to surf my web page :: Fast Home Cooking