'தி ஸ்பானிஷ் ப்ரிசனர்' டேவிட் மமெட் எழுதி இயக்கிய இத்திரைப்படம் 1997'ஆம் ஆண்டு வெளியானது. காம்ப்பெல் ஸ்காட் மற்றும் ஸ்டீவ் மார்டின் நடித்த, நல்ல ஒரு அருமையான கிளாச்சிக் சஸ்பன்ஸ் திரைப்படம்.
இத்திரைப்படதிற்கும் ஸ்பெயின் நாட்டிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை,இது ஒரு அமெரிக்க திரைப்படம். எந்த கைதியையும் திரைப்படத்தில் காட்டுவதும் இல்லை, கைதியை பற்றிய படமும் இல்லை. (ஸ்பானிஷ் ப்ரிசனர் என்பது பழைய Con Game, இதன் அர்த்தம் நம்ப வைத்து கழுத்தை அறுபது அல்லது fraud தனம் செய்வது)
Rating : PG
Genre : Drama, Mystery, Thriller
Genre : Drama, Mystery, Thriller
Produced By : Jean Doumanian
Written & Directed By : David Mamet
Cinematography : Gabriel Beristain
Edited By : Barbara Tulliver
Music By : Carter Burwell
Music By : Carter Burwell
Cast : Campbell Scott, Steve Martin, Rebecca Pidgeon, Ben Gazzara, Ricky Jay
ஜோ ஒரு நல்ல மனிதன், திறமைசாலி (அவன் துறையில் மட்டும்), அனைவரையும் எளிதில் நம்புபவன் (இதெல்லாம் இருந்தால் கண்டிப்பா அவன் பேக்க தான் இருப்பான், படத்திலும் அப்படிதான்). ஜோ ஒரு ஸ்டாக் மார்கட்டிற்கான 'process' ஒன்றை உருவாக்குகிறான் வேலை செய்து கொண்டு இருக்கும் கம்பெனிகாக. ஜோ'வின் முதலாளி, அவனை ஒரு பிசினஸ் மீட்டிங்'கிற்கு ஒரு தீவிற்கு அழைத்து செல்கிறார், ஜோ கம்பெனி லாயரும் உடன் வருகிறார், இருவருக்கும் நல்ல நட்பும் உண்டு. அந்த மீடிங்கில் அவன் இந்த 'process' பற்றி குறிப்பிட்டு இதன் லாபத்தை அவர்களுக்கு காட்டுகிறான். (அது ஒரு பெரும் தொகை, ஆனால் நமக்கு அதை காட்டுவதில்லை).
அந்த தீவிற்கு புதிதாக வரும் ஜிம்மி என்பவனுக்கும் ஜோவிற்கும் நட்பு ஏற்படுகிறது. ஜோவிடம் புத்தகத்தை காகிதத்தில் மடித்து அதை குடுத்து நியூயார்க்கில் உள்ள தாம் தங்கையிடம் குடுத்துவிடுமாறும், பிறகு தன் நியூயார்க் வரும் பொது, ஒன்றாக டின்னெர் சாப்பிடலாம் என்று கூறுகிறான் ஜிம்மி.
ஜோவின் பாஸ், புதிய செகரெட்டரி சுசன் ரிசி என்பவளையும், ஜோ உடன் நியூயார்க்கிற்கு அனுப்புகிறார்.
சுசன் விமானநிலையத்தில் ஒரு பெண்மணியை சந்திக்க, அவள் தன்னை FBI Agent என்று கூறி, சுசனிடம் அவளது பிசினஸ் கார்டையும் கூடுகிறாள்.
சுசன், விமான பயணத்தின் பொது ஜோவிடம், யாரையும் உலகத்தில் நம்ப முடிவதில்லை என்றும் நன்கு பழக்கமில்லாதவர் குடுத்து அனுப்பும் பொருளை விமானத்தில் கொண்டு செல்லகூடாது என்றும் ஒரு வேலை அதில் போதை பொருள் இருக்கலாம் என்று கூற, ஜிம்மி குடுக்க சொன்ன பொட்டலத்தை பிரித்து பார்க்கிறான், உள்ளே புத்தகம் தான் இருக்கிறது.
ஜோ, அந்த புத்தகத்தை ஜிம்மியின் தங்கையிடம் கொடுத்துவிடுமாறு, அந்த கட்டிடத்தின் பணிபுரிபவரிடம் கொடுக்கிறான்.
ஜிம்மி, ஜோவிற்கு ஒரே நிமிடத்தில் 'Swiss bank Account' ஓபன் செய்து தருகிறான். பெரிய உணவகத்துக்கும் கூட்டி செல்கிறான், அன்று சனி கிழமை என்பதால் மெம்பெர்ஸ் மட்டும். அதன் உள்ள விட மறுக்கபடுவதினால், ஜிம்மி உடனே அதன் மெம்பெர் கார்டில் கையெழுத்திட்டு மெம்பெர் ஆகிறார், இதனால் கவுருவமாக உள்ளே விடப்படுகிறார்கள். இதை போல் சிறு சிறு செயல்களால் ஜோவிற்கு, ஜிம்மியின் மேல் நம்பிக்கை உண்டாகிறது. சில நேரங்களில் 'Process' பற்றியும் இருவரும் பேசிக்கொள்கிறார்கள். ஜிம்மி, 'Process' சம்மந்த பட்ட எதற்கும் தன் உதவுவதாக ஜோவிடம் கூறுகிறான்.
இதற்கிடையிலே ஜிம்மி, ஜோவிடம் உன்னுடைய முதலாளி உன்னக்கு எந்த நன்மையும் செய்ய போவதில்லை, உன்னை எமற்றிவிடுவர் பார் என்றே கூறிக்கொண்டே இருக்கிறார். சுசனும் ஜோவிடம் யாரையும் நம்பாதே என்பதையே கூறிக்கொண்டு இருக்கிறாள்.
ஜோவிற்கு நாயமாக தரவேண்டிய லாபங்களை, அவருடைய முதலாளி தர மறுக்க. இதை ஜிம்மியிடம் கூறுகிறார் . ஜிம்மி தனது பர்சனல் லாயர்'ரிடம் நாளை இதை பற்றி பேசலாம், வரும் பொழுது 'Process copy'யையும் எடுத்து கொண்டு வரச்சொல்கிறார்.
முன்பு நிறைய முறை ஜிம்மியின் தங்கையை சந்திக்கலாம் போகவே, இந்த முறை சந்திபதற்கு ஒரு சிறிய பரிசு ஒன்றை வங்கி கொன்று செல்கிறான். அந்த கட்டிடத்தில் அது போன்ற ஒரு பெண்ணே இல்லையென தெரியவர,
முன்பு சுசன் பிசினஸ் கார்டு வாங்கிய, அந்த FBI Agent Pat McCune'ற்கு போன் செய்து பிறகு சந்தித்து, இந்த விஷயங்களை அனைத்தையும் கூற, நாளை அவனை கையும், காலுமாக பிடிக்க பிளான் செய்யபடுகிறது.
அடுத்த நாள், ஒரு இடத்தில் ஜிம்மியை சந்திபதற்கு முன்பு 'Process Copy'யுடன் FBI Agent'sயை சந்திக்கிறான். அவர்கள் ஜோவின் சட்டையில் 'Mic' வைக்கிறார்கள், சாட்சியத்துடன் பிடிபதற்காக.
ஜோவும், ஜிம்மிக்காக காத்திருக்க, நிண்ட நேரம் கடந்தும் ஜிம்மி வராததினால். FBI Agent கைபேசிக்கு கால் செய்ய, அதுபோல் ஒரு என்னே இல்லை என்று தெரியவருகிறது. FBI Office'க்கு போன் செய்ய அங்கும் இது போல் எவரும் இல்லை என தெரியவருகிறது. 'Process Copy'யை பார்க்க அதனுள்ளும் எழுத்துகள் இல்லாமல் அனைத்தும் வெற்றாக இருக்கிறது.
இதை காவல் துறையில் புகார் செய்ய, ஜோ சொன்ன விஷயங்களுக்கு, அனைத்தும் மாறுபட்டு இருக்க, காவல் துறை ஜோவையே கைதி செய்கிறது.
ஜிம்மி யாரு, FBI Agents யாரு, Process Copy என்ன ஆனது, என்ன நடந்தது என்று ஜோவிற்கு சுத்தமாக புரிவதில்லை...... படம் பார்க்கும் நமக்கும் தான். So படத்த பார்த்து முடிவ தெரிஞ்சிகோங்க.
----------*****----------
மிக அருமையான, மற்றும் ஆமை வேகத்தில் நகரும் திரைக்கதை கொண்ட இத்திரைப்படம், கணிக்க முடியாத பல விஷயங்களை காட்சிகளில் மறைக்கப்பட்டு இருக்கும்.
இந்த படம் 'அல்பிரேட் ஹிட்ச்காக்' ஸ்டைல் என பலரால் பாராட்டுகளை பெற்றது.
டேவிட் மமெட் எழுதி இயக்கிய இத்திரைப்படத்தில், அவருடைய மனைவி 'Rebecca Pidgeon' தான் சுசன் என்னும் கதாபத்திரத்தில் நடித்தது.
ஸ்டீவ் மார்டின், சிரிப்பு நடிகரான இவர், வில்லன் கதாபத்திரத்தை செய்திருப்பர்.
படத்தில் மேலே பார்த்த சஸ்பன்ஸ் குறைவுதான், இன்னும் ஏகப்பட்ட வினாக்கள், இவை அனைத்துக்கும் படத்தின் முடிவில் ஒரே வரியில் விடை அறியப்படும். (சம காண்டு ஐடேன்)
படத்தின் ஆரம்ப காட்சியில் இருந்து முடிவு வரையிலும், ஹீரோ'வை வைத்தே கட்சிகள் நகூர்தப்படுகிறது. (ஹீரோ இல்லாத சினே இல்ல, அவரையே மையமாக வைத்தே கட்சிகள் அனைத்தும் உள்ளது)
இந்த மாதிரி த்ரில்லர் படங்களில், ஹீரோ தான் எல்லாமே, ஆன இந்த படத்துல இவர், படம் முழுவதும் ஜீரோ. எல்லா பிரச்சனைகளும் நடந்துட்டே இருக்கு. ''எதோ நடக்குது'' என்ற கதாபத்திரம் இவருக்கு.
இன்னும் முழுமையாக படிக்கவில்லை..பொறுமையாக வாசித்துவிட்டு கமெண்ட் போடுகிறேன்..வாழ்த்துக்கள்..
ReplyDeleteஇப்பொழுதான் படத்தை டவுன்லோடு போட லிங்குகளை தேடிக்கொண்டிருகிறேன்..உங்கள் எழுத்துக்களை படித்தவுடனே படம் விரைவில் பார்க்க வேண்டும் என்று ஏற்பட்ட ஆர்வமே இதற்கு ஒரு காரணம்.உண்மையை சொல்லவேண்டுமெனில் இப்பொழுதுதான் படம் பெயரையே அறிகிறேன்.அதற்கு முதலில் மிக்க நன்றி..மிக அருமையாக விமர்சனம்.தொடரட்டும் உங்கள் கைவண்ணம்..நிறையட்டும் பாராட்டுகள்..வாழ்த்துக்கள் நண்பரே.
ReplyDelete