Saturday, October 15, 2011

Donnie Darko (2001) விமர்சனம்.



Donnie Darko, இது ஒரு Psychological Thriller வகையை சேர்ந்த திரைப்படம், படம் வெளிவந்த வருடம் 2001. ஒரு சில சிறந்த நல்ல திரைப்படங்களில் இதுவும் ஒன்று.


  • Genres : Mystery, Sci-Fi & Drama.
  • Written & Directed By : Richard kelly
  • Produced By : Adam Fields, Nancy Juvonen, Sean Mckittrick & Drew Barrymore
  • Music by : Michael Andrews
  • Cinematography : Steven B. poster
  • Editing By : Sam Bauer & Eric Strand
  • Starring : Jake Gyllenhaal, Jena Malone, mary McDonnell, Holmes Osborne, Katharine Ross, James Duval, Maggie Gyllenhaal & Drew Barrymore.
       மன சம்மந்தப்பட்ட பிரச்சனை உள்ள Donnie Darko, பள்ளி மேற்ப்படிப்பு படிக்கும் மாணவன், இவன் உறங்கிக்கொண்டு இருக்கும் பொது விசித்திரமான ஒரு குரல் கேட்டு, அதை தொடர்ந்து விட்டிற்கு வெளியில் செல்கிறான் சுய உணர்ச்சி இல்லாமல். அங்கு ஒரு விசித்திரமான முயல் உருவம் கொண்ட ஒன்று, அதன் பெயர் Frank. இன்னும் 28 நாள், 6 மணிநேரம், 42 நிமிஷம், 12 வினாடிகளில் இந்த உலகம் அழிய போவதாக அது Donnie Darko'விடம் கூறுகிறது.

        அடுத்த நாள் காலை, கோல்ப் மைதானத்தில் கண் விழிக்கும் Donnie Darko, தன் விட்டுக்கு திரும்புகிறான். முன்னால் இரவு அவன் படுத்துறங்கும் கட்டில் மேல் விமாண ஜெட் என்ஜின் விழுந்து உள்ளது என்பதை அறிகிறான். யாருக்கும் தெரிவதில்லை அந்த ஜெட் என்ஜின் எங்கிருந்து வந்தது என்று, அந்த சுற்றுவட்டாரத்தில் எந்த விமானமும் பறக்கவில்லை என்று தெரியவருகிறது. எந்த விமாண கம்பனியும், என்ஜின் இழந்ததாக ரிப்போர்ட் செய்வதில்லை.

       அடுத்த நாள், Gretchen Ross என்னும் பெண் புது வரவாக வருகிறாள் Donnie'யின் வகுப்பிற்கு, இருவரும் நண்பர்கள் ஆகின்றனர், நட்பு, காதலில் போய் முடிகிறது.




       முயல் உருவம் கொண்ட Frank, Donnie Darko'வை மிக பெரிய குற்றங்கள் புரிய, தூண்டுதல் எண்ணங்களை அவனுக்கு கூறுகிறது. Donnie Darko'வும் Frank, சொன்ன அணைத்து தவறுகளையும் செய்கிறான். அது, அவனுக்கு 'Time Travel' பற்றியும் நிறைய விஷயங்கள் சொல்கிறது.

        Donnie' யின் தாயாரும், சிறிய தங்கையும் நடன போட்டிக்காக வெளி ஊர் செல்கிறார்கள். Donnie'யும், பெரிய தங்கையும் ஹல்லோவீன் (Halloween) அவர்களது வீட்டில், நண்பர்களுடன் கொண்டாடுகிறார்கள். அங்கு வரும் Gretchen Ross, தன் தாயை காணவில்லை என்றும், இதற்கு காரணம் தன்னுடைய Step Father எனவும் கூறுகிறாள்.

     இன்றுடன் 28 நாட்கள் முடிவடைந்து, மிதம் இருப்பது 6 மணி நேரம் தான், என்று நினைவுக்கு வரும் Donnie, தன் காதலியையும், இரண்டு நண்பர்களையும் கூட்டிக்கொண்டு 'Grandma Death' என்னும் வயதான ஒரு பாட்டியிடம் செல்கிறான்.
பள்ளியில் இவர்களுடன் படிக்கும் இரண்டு மாணவர்களால் தாக்கபடுகிறார்கள். Gretchen Ross, இதில் மயக்கம் முற்று விழுகிறாள். அப்போது அங்கே அதி வேகமாக வரும் ஒரு கார், தவறுதலாக Gretchen Ross மேல் ஏறி விடுகிறது, காரில் வந்த ஒருவனை, Donnie தன் தந்தையிடம் இருந்து எடுத்து கொண்டு வந்த துப்பாகியால் கொன்றுவிடுகிறான். அவன் பெயரும் Frank தான், இவன் Donnie'யின் தங்கை எலிசபெத்தின் காதலன்.




    தன் காதலி Gretchen Ross'இன் உயிரற்ற உடலை எடுத்துக்கொண்டு, சுறாவளி புயல் வரும் திசையை நோக்கி செல்கிறான். அதை அடைந்தவுடன், தன் இறந்து போன காதலியுடன் அதை பார்த்தவாறு சிரிகின்றான். அதே நேரத்தில் Donnie'யின் தாயும், அவன் சிறிய தங்கையும் வரும் விமானத்தின் ஜெட் என்ஜின் உடைந்து சுறாவளி புயலால் இழுக்ப்படுகிறது..........
இதற்கு மேல் வருவது தான் படத்தின் முடிவு காட்சி, இங்கயே நான் நிறுத்தி கொள்கிறேன்.

    படத்தின் கதையை மேலோட்டமாக தான் சொல்லிருக்கிறேன். திரைபடத்தின் சுவாரசியத்தை என் விமர்சனம் குறைக்க வேண்டாம் என்று. படத்தில் நிறைய புதிர்களை (Puzzles) வைத்து கட்சிகளை அமைத்து இருப்பார்கள். முதல் தடவை பார்க்கும் பொழுதே இத்திரைப்படம் அனைவருக்கும் பிடித்து போகும். ஆனால் பல விஷயங்கள் விட்டு அல்லது புரியாமல் இருக்கும். அடுத்த திரும்பியும் இப்படத்தை பார்க்கும் பொது சிலது தெரியவரும். படத்தோட டைரக்டர்'s கட், கிடைத்தால் வங்கி பாருங்க அதுல இன்னும் நிறைய விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கு.

http://www.donniedarko.org.uk/introduction/ இந்த லிங்க் அணைத்து புதிர்களுக்கும்/புரியாத விசயங்களுக்கும் விளக்கம் தருகிறது.

     இத்திரைப்படம் 28 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்டது, இதன் மொத்த செலவு $ 4.5 மில்லியன். படம் தியேட்டரில் வெளிவந்து $ 4.1 மில்லியன் தான் வசூலானது. பின்பு DVD வெளியாகி $ 10 மில்லியன் மேல் வசூலானது.

Awards Won :
  1. 2001 San Diego Film Critics Awards SDFCS Award Best Screenplay (Original) Richard Kelly
  2. 2001 Sweden Fantastic Film Festival Audience Award Richard Kelly
  3. 2001 Sitges-Catalonian international Film Festival Best ScreenPlay Richard Kelly
  4. 2001 Toronto Film Critics Association Awards Special Citation(For the best film not to receive a proper theatrical release in Canada.)
  5. 2002 Academy of Science Fiction, Fantasy & Horror Films, USA Special Award Young Filmmaker's Showcase Richard Kelly
  6. 2002 Amsterdam Fantastic Film festival Silver Scream Award Richard Kelly
  7. 2002 Cinenygma - luxembourg International Film Festival Audience Award Richard Kelly
  8. 2002 Gerardmer Film Festival premier Award Richard Kelly
  9. 2003 Chotrudis Awards Won Chotrudis Awards Best Actor Jake Gyllenhaal Best Screenplay (original) Richard Kelly
  10. 2003 Film Critics Circle of Australia Awards FCCA Award Best Foreign Film (English Language)

1 comment: