Wednesday, November 2, 2011

ஹாலிவுட் திரைப்படங்களின் சிறந்த பைக் சேஸ் காட்சிகள் சில.


ஹாலிவுட் திரைப்படங்களின் வரும் இந்த பைக் காட்சிகள் அனைவரும் நிறைய முறை பார்த்தும் இருப்பிர்கள். 

அதிகம் பேருக்கு பைக் இன்னா ரொம்ப பிடிக்கும், இப்ப இருக்கற ஸ்கூல் பசங்க, கல்லூரி பசங்க சாதாரணமா பைக் வைத்துக்கொண்டு இருகிறாங்க, ஆன ஒரு பத்து பன்னண்டு வருசத்துக்கு முன்பு யாருனா ஒருத்தர் இல்ல, ரெண்டு பேரு தான் வெச்சினு இருபாங்க. அப்போ எல்லாருக்கும் ஆசை இருக்கும் பைக் வாங்கணும் என்று, அப்போ அது சாத்தியம் இல்லாமல் இருக்கலாம், அதன் பிறகு சம்பாதிக்கும் பொது வங்கியும் இருக்கலாம். ஆன ஒரு உறுத்தல் இருக்கும், இருந்து இருந்த நம்முடை கிளாஸ் பிகருங்க முன்னாடி சீன் காட்டி இருக்கலாம் என்று.

என் நம்ம ஆளுங்க ஒரு படமே எடுத்து இருக்காங்க பொல்லாதவன். முழுக்க முழுக்க பைக் பதியே ஒரு படம். அந்த பைக் வந்ததால எப்படி பிகரு பிக்கப் ஆச்சு, வேலை கிடைச்சது என்று... இது போல சொந்தமா பைக் இல்ல இன்னாலும், பிரெண்ட் கிட்ட கேட்டு வாங்கினு போயி சீன் காட்டி இருப்போம் சிலபேரு.(நான் பள்ளியில் படிக்கும் பொது என் பிரெண்ட் ஒருத்தன் பைக் கடன் வங்கி வந்து அவன் ஆளு முன்னாடி வேகமா ஓட்டி Boys படத்துல வர மாதிரி ஸ்கிட் ஆயி விழுந்தான், பிறகு ஒரு வாரத்துக்கு மேல் ஹாஸ்பத்திரியில இருந்தான், இன்னொரு பிரெண்ட், முன்னாடி நம்ம ஊருல கரண்ட் கம்பம் ரோட்டுலயே இருக்குமே, அதுல மோதி 'Headlight' ஒடச்சி கொண்டுவந்து குடுத்து, கடன் குடுத்த நண்பனிடம் சம பல்பு வாங்கனான்).         


1. Mission: Impossible II(2000)டாம் குருஸ், நடிப்பில் ஜான் வூ இயக்கத்தில் வந்த ''மிஷன் இம்பாசிபிள் இரண்டாம்'' பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சி இது.(ஜான் வூ, ஆக்சன் படங்கள் எடுப்பதில் இவரை மிஞ்ச வேறு ஒருவரும் இல்லை எனலாம், இதை அனைவரும் அறிந்து இருபீர்) டாம் குருஸ் சம ஸ்டைலிஷ் பட்டய கிழப்பி இருபாரு. ஹான்ஸ் சிம்மர் இசை கன கட்சிதமாக இந்த காட்சிக்கு பொருந்தி இருக்கும். Bike : Triumph Speed Triple, Triumph Daytona.2. The Matrix Reloaded (2003)


ஆண்டி மற்றும் லான வாகொவ்ஸ்கி சகோதரர்களின் இயக்கத்தில் The Matrix Reloaded'ல் வரும் ஒரு காட்சி. Bike : Ducati 996/998


3. Terminator 2: Judgment Day (1991)


ஜெம்ஸ் கமேரோன் இயக்கத்தில் அர்னால்ட் நடித்த திரைப்படம். இந்த காட்சியில் அர்னால்டின் ஸ்டைல் மிக அற்புதமா இருக்கும், அதும் இந்த காட்சி முடிஞ்ச பிறகு அந்த துப்பாக்கிய சுழற்றுவார் பாருங்க....
சம த்ரில்லர்'ர இருக்கும். Bike : harley davidson FLSTF
ஆனா இந்த காட்சில ரெண்டு தவறு இருக்கு, முடிஞ்ச கண்டு பிடிச்சு கமெண்ட்'ல சொல்லுங்க பார்க்கலாம்.


4. Tomorrow Never Dies(1997)


இது ஜெம்ஸ் பாண்டு படம், பாண்டா நம்ம பியர்ஸ் பிராஸ்னன் பண்ணி இருபாரு, இயக்கம் Roger Spottiwoode. (பாண்டு இன்னலே என்னக்கு டக்கு ஞாபத்துக்கு வர முதல் ஆளு பியர்ஸ் பிராஸ்னன் தான், இவரோட இந்த ஸ்டைல் வேற எந்த பாண்டு கிட்டையும் பார்த்தது இல்ல, என் தனி பட்ட கருத்து) இந்த காட்சியில இவரோட Michelle Yeoh'வும் பட்டய கலப்பி இருப்பார். Bike : BMW Cruiser R1200C 
    

5. Torque (2004)


மார்டின் ஹென்டர்சன் மற்றும் ஐஸ் கியூப் நடித்த திரைபடத்தை ஜோசப் கான் இயக்கியுள்ளார். (சமையான மொக்க படம் தப்பி தவறி கூட பாத்துடாதிங்க) ரொம்ப ஓவரா இருக்கும், இருந்தாலும் இந்த காட்சி பிடித்திருந்தது. Bike : Aprilia RSV Mille and Honda CBR 954 RR 

இதும் இல்லாம இன்னும் சில காட்சிகள் உள்ளன. Knight & Day படத்தில் வரும் மற்றும் The Bourne Ultimatum ஒரு சிறு காட்சி.


4 comments:

 1. அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.


  //// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////


  .

  ReplyDelete
 2. அருமையான முயற்சி + பதிவு.இது போல நிறைய காட்சிகளை அறிமுகபடுத்துங்கள்.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. உங்கள் தளத்திற்கு நிறைய வாசகர்கள் வர வேண்டுமா ? உடனே உங்கள் பதிவுகளை http://talinks.webpics.co.in இணைத்து வாசகர்களை பெற்றிடுங்கள். இது இலவசம் .

  ReplyDelete
 4. உங்கள் தளத்திற்கு நிறைய வாசகர்கள் வர வேண்டுமா ? உடனே உங்கள் பதிவுகளை http://talinks.webpics.co.in இணைத்து வாசகர்களை பெற்றிடுங்கள். இது இலவசம் .

  ReplyDelete