'ஷட்டர்' 2004'ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தாய்லாந்து நாட்டு திகில் திரைப்படம். ஹாரர் வகையை சார்ந்த இத்திரைப்படத்தை 'Banjong Pisanthanakun' மற்றும் 'Parkpoom Wongpoom' இணைந்து இயக்கியது.
Genres : Horror, Mystery, Thriller
Produced By : Yodhpet Sudsawad
Directed By : Banjong Pisanthanakun, Parkpoom Wongpoom
Written By : Sopon Sukdapisit, Banjong Pisanthanakun, Parkpoom Wongpoom
Cinematography : Niramon Rose
Music By : Chatchai Pongprapaphan
Cast : Ananda Everingham, Natthaweeranuch Thongmee, Unnop Chanpaibool

துன் ஒரு போடோக்ராபர், அவன் காதலி ஜென் இருவரும் நண்பர்களுடன் பார்ட்டி'யை முடித்துக்கொண்டு காரில் வரும்போது ஆட்கள் யாரும் இல்லாத சாலை ஒன்றில் ஒரு பெண்ணை மோதிவிடுகிறார்கள் (ஜென் தான் காரை ஒடிகொண்டுவருவது). விபத்துக்குள்ளான பெண் சாலையில் விழுந்து கிடக்க, ஜென் அந்த பெண் உயுரோடு இருந்தால் உதவி செய்ய நினைக்கிறாள், ஆனால் துன் அசைவில்லாமல் இருக்கும் அந்த உடலை பார்த்து பயந்து அவன் காதலி ஜென்'னை வண்டியை விட்டு கிழே இறங்கவிடாமல், வண்டியை எடுக்க சொல்கிறான். இருவரும் அந்த இடத்தை விட்டு காரில் மிக வேகமாக மறைகிறார்கள்.
துன் மற்றும் ஜென்'னிற்கு ஒரு ஆவியின் உருவம் தென்படுகிறது, சில விபரிதமான விஷயங்களும் நடைபெற ஆரம்பிக்கிறது. துன் எடுக்கும் படங்கள் அனைத்திலும் ஒரு ஒளி போன்றதொரு பிம்பம் தெரிய, ஜென் அது தான் மோதிய பெண்ணின் ஆவி தான் என சந்தேகிக்கிறாள்.
துன் கடுமையான கழுத்து வலியால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு போகிறான், அங்கு இவனை பரிசோதிக்கும் மருத்துவர் துன்'னிற்கு எந்த பிராக்செர் அல்லது பிரச்னை இல்ல என கூறுகிறார்.
ஜென், இந்த ஆவிகளை பற்றி விசாரிக்க, ஆவிகள் இருப்பது உண்மைதான் என தெரிய வருகிறது, இதற்கு உதாரணமாக சில படங்களின் பிம்பமும் பார்க்கிறாள். துன் படம் பிடித்த அந்த பிம்பங்கள் விழுந்த, குறிப்பிட்ட இடத்திருக்கு செல்கிறாள், (அது துன் படித்த கல்லூரியின், உயிரியல் லேப்). அங்கு தான் காரில் மோதிய பெண்ணின் படங்களை காணுகிறாள்.
ஜென், துன்'னிடம் இதை பற்றி கேட்க, அந்த பெண்ணின் பெயர் நற்றே' எனவும், இருவருக்கும் கல்லூரியில் படிக்கும் பொது நல்ல பழக்கம் இருந்தது எனவும், திடீர் என வேரிபிடிதவள் போல் நடந்துகொண்டால் என்றும், இதனால் அவன் அவளிடம் இருந்து விலக ஆரம்பிக்க மற்றும் துன்'னின் நண்பர்களும் அவளை மிரட்ட, திடிரென ஒரு நாள் அவள் யாரிடமும் எதுவும் கூறாமல், எங்கோ சென்று விட்டாள் என கூறுகிறான்.
துன்'னின் நண்பன், இவன் கண் முன்பே பெரிய கட்டிடத்தின் மேல் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்கிறான். பிறகு தான் இவனுக்கு தெரிய வருகிறது, இதற்கு முன்பே இன்னும் இரு நண்பர்களும் இதே போல் பெரிய கட்டிடத்தின் மேல் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள் என.
இதற்கெல்லாம் நற்றேவின் ஆவி தான் காரணம் என, அடுத்தது அந்த ஆவி தன்னை தான் கொள்ள போகிறது என நினைத்து புலம்புகிறான்.
இதற்கெல்லாம் நற்றேவின் ஆவி தான் காரணம் என, அடுத்தது அந்த ஆவி தன்னை தான் கொள்ள போகிறது என நினைத்து புலம்புகிறான்.
இதை தடுத்து நிறுத்த, துன் மற்றும் ஜென், இருவரும் வெகுதொலைவில் இருக்கும் நற்றேவின் விட்டை தேடி செல்கிறார்கள்...........
நற்றேவின் ஆவி துன்'னை கொன்றதா, எதற்காக துன்'னின் நண்பர்களை கொன்றது, காரை ஏற்றி கொன்ற ஜென்'னை என் கொள்ளவில்லை.... இது அனைத்துக்கும் பதில்களை படத்தை பார்த்து தெரிஞ்சிகோங்க.
----------*****----------
ஹாரர் படங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்றால், இந்த திரைப்படத்தை நீங்கள் நம்பி பார்க்கலாம். கொஞ்சம் பயம் அதிக த்ரில்லர் மற்றும் சஸ்பன்ஸ். அடுத்த காட்சிகள் சிலதை கணிக்க முடிந்தாலும் கூட, படத்தோட திரைக்கதையும், அந்த கிளைமாக்ஸ் காட்சியும் படத்தை துக்கி நிறுத்தி இருக்கும்.
படிக்கட்டில் துன் இறங்கும் காட்சி மிக அருமையான ஒரு ஹாரர் திரைப்படத்தில் ரசிக்கும் படியான காட்சி. (இதை நிறைய திரைப்படங்களில் பார்த்திருப்போம்)
ஜென், அவர்கள் வீட்டில் பிடித்த போடோஸ் அனைத்தையும் வைத்துகொண்டு நற்றேவின் ஆவி கூற விரும்புவதை அறியும் காட்சி டைரக்டரின் திறமையை காட்டுகிறது.
கிளைமாக்ஸ் மிக அருமை, அப்போது தான் நமக்கு விடுபட்ட சில காட்சிகள் தெரியவரும். முக்கியமாக மருத்துவமனையில் என்ன நடந்தது என்று.
இத்திரைப்படம் தமிழில் சுடப்பட்டு சிவி என்ற பெயரில் 2007'ஆம் ஆண்டு வெளிவந்தது. ஹிந்தியில் ''கிளிக்'' என்ற பெயரில் 2010'ஆம் ஆண்டு வெளிவந்தது. ஆங்கிலத்தில் ''Shutter'' என்ற பெயரிலேயே 2008'ஆம் ஆண்டு வெளிவந்தது.
இந்த படத்தை மற்ற மொழியில் பார்ப்பதை விட அதுனுடைய உண்மையான உருவாக்கம் 'Thai' மொழியில் பார்பதே சிறந்தது. தமிழிலும் சுமாராக எடுத்து இருப்பார்கள்.
Award Won :
Gerardmer Film Festival - 2006 Won Audience Award - Banjong Pisanthanakun, Parkpoom Wongpoom

நல்ல விமர்சனம்,
ReplyDeleteபடத்தின் கதையையும் காட்சிகளையும் மிக அழகாகவும் தெளிவாகவும் புரியும்படி (முறை) ரொம்ப நன்றாக எழுதுகிறீர்கள்.இதைவிட என்ன வேண்டும் நீங்கள் சிறந்த பதிவர்களில் ஒருவர்.என்பதை நிரூபிக்க..வாழ்த்துக்கள்.
சில நாட்களுக்கு முன்னமே படத்தை கேள்விபட்டிருந்தாலும் நான் பார்த்தது ஆங்கில வெர்ஷந்தான் நண்பரே (தமிழும் பார்த்துள்ளேன்)..விரைவில் பார்க்கவேண்டும்.
நல்ல விமர்சனம்..
ReplyDeleteஇந்த படத்தை தமிழ்லில் பார்த்து உள்ளேன். இந்த இடுக்கை முலமாக அது ஒரு தாய்மொழி திரைப்படம் என்று அறிந்து கொண்டேன்.
நண்பரே, இப்போது தான் தங்களின் வலைதளத்தைப் பார்த்தேன். அனைத்து இடுகைகளையும் படித்தேன். நிறைய புதிய படங்களை அறிமுகம் செய்கிறீர்கள். மிகச்சிறந்த முயற்சி. தங்களின் உழைப்புக்கும், ஆர்வத்துக்கும் மனமார்ந்த பாராட்டுகள். சின்ன சின்ன எழுத்துப்பிழைகள் கூட அழகாகத் தான் இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். தமிழில் உலகதிரைப்படங்களுக்கான ஆவணங்களை கொண்டுவாருங்கள்.
ReplyDeleteஜென், துன்'ன்னு நல்லா எழுதியிருக்கீங்க... எனக்கும் ஹாரர் படங்கள் பிடிக்கும்தான்... பார்க்க முயல்கிறேன்...
ReplyDeleteஎழுத்துப்பிழைகளை குறைக்கலாமே...
ReplyDeletekumaran @
ReplyDeleteஉங்கள் வாழ்த்துகளுக்கு என் நன்றிகள் குமரன்.
Raj.K @
ReplyDeleteநன்றி ராஜ்.
ஜானகிராமன் @
ReplyDelete''சின்ன சின்ன எழுத்துப்பிழைகள் கூட அழகாகத் தான் இருக்கிறது''.....
Philosophy Prabhakaran @
''எழுத்துப்பிழைகளை குறைக்கலாமே...''
கண்டிப்பாக திருத்திகொள்கிறேன்.
அடுத்து வரும் பதிவுகளில் முழுமையாக எழுத்துப்பிழைகளை தவிர்க்கபார்கிறேன்.
தவறுகளை சுட்டி காட்டியதற்கு மற்றும் உங்களது பாராட்டுதலுக்கும் என் நன்றிகள்.
it is nice story and the way you narrate really nice and understanding. thanks for your info & creative.
ReplyDeleteJeyapal B @
ReplyDeleteThank You Very Much Jeyapal B.
தொடர்ந்து நல்ல ஹாரர் படங்களை அறிமுகபடுத்துங்கள் நண்பரே நிறைய எதிர்பார்க்கிறேன்.நன்றி.
ReplyDeleteஇந்த படம் தானே தமிழில் சிவி என்ற பெயரில் வந்தது?
ReplyDelete