Wednesday, November 16, 2011

M (1931) விமர்சனம்.


'M' இது ஒரு ஜெர்மனி திரைப்படம். 1931'ஆம் ஆண்டு வெளிவந்த த்ரில்லர் வகையை சார்ந்த திரைப்படம்.  பிரிட்ஸ் லேங் (Firtz Lang) இயக்கத்தில் பீட்டர் லோரி (Peter Lorre) நடிப்பில் வெளிவந்த சிரியல் கில்லர்' பற்றிய திரைப்படம்.

Genre : Thriller


Produced By : Seymour Nebenzal
Directed By : Fritz Lang
Story By : Egon Jacobson
Script : Fritz Lang, Thea Von Harbou
Cinematography : Fritz Arno Wagner
Edited By : Paul Falkenberg
Music By : Adolf Jansen
Cast : Peter Lorre, Ellen Widmann, Inge Landgut, Otto Wernicke

சிறுவர், சிறுமிகளை  குறிவைத்து எந்த ஒரு தடயமும் இல்லாமல் தொடர்ந்து நடக்கும் கொலைகள். 


தடயமே இல்லாமல் நடக்கும் இக்குற்றங்களினால் கொலைகாரனை, போலீசாரால் கண்டுப்பிடிக்க முடியாமல் போகிறது. மக்கள் இதனால் நிறைய பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்கள். ஒருவரை மாற்றி ஒருவர்  சந்தேகப்பட்டு குற்றவாளி எனக்கருதி சிறு கைகலப்பு மற்றும் மக்கள் சம்மந்தமே இல்லாத நபர்களையும் அடித்து காவல்நிலையத்தில் ஒப்படைகிறார்கள். இதே நேரத்தில் கொலைகாரன், தினமும் வெளிவரும் நாளிதழுக்கு ஒரு கடிதமும் எழுதி அனுப்புகிறான்.

கொலைகாரன், இக்கொலைகள் தொடரும் என்பதை போல் அக்கடிதத்தில் எழுதி இருப்பதினால். இன்னும் மும்முரமாக போலிஸ் அணைத்து விதங்களிலும் கொலைகாரனை தேடுகிறது. நகரத்தில் இருக்கும் பழைய மற்றும் புதிய குற்றவாளிகள், திருடர்கள், கொள்ளைக்காரர்கள் போன்றவர்களை முதன்மை குற்றவளியாக விசாரிக்கப்படுகிறார்கள். போலிஸ் அணைத்து இடங்களையும் சோதனை நடத்துகிறது.

இந்த சோதனைகளால் பாதிக்கப்படும் திருடர்கள் மற்றும் கொள்ளைக்காரர்கள் (தொழில் முடக்கத்தினால்.... ஹா ஹா), ஒரு மீட்டிங் நடத்தி அவர்களே அந்த கொலைகாரனை கண்டுப்பிடித்து அவன் கதையை முடிப்பதாக முடிவெடுக்கப்படுகிறது. இவர்களுக்கு உதவியாக பிச்சைக்காரர்களை வைத்துகொண்டு, சேர்ந்து கொலைகாரனை தேடுகிறார்கள்.

காவல்துறை அவர்களது விசாரணையை வேறுகோணத்தில் நடத்துகிறது. மன சம்மந்த பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று சமிப காலத்தில் குணமடைந்து வந்தவர்களின் கைரேகை மற்றும் அக்கடிதத்தின் கையெழுத்து போன்றவை ஒத்துப்போகிறதா என்று பார்க்கையில், குறிப்பிட்ட Hans Beckert என்பவனின் கையெழுத்து மற்றும் அவன் உபயோகித்த பென்சில் ஒத்துப்போக, Hans Beckert என்பவன்தான் கொலைக்காரன் என்று உறுதிசெய்யப்படுகிறது.

அதே நேரத்தில் வெளியே சிறுமி ஒருத்தியை கூடிக்கொண்டு, அவளை கொள்வதற்கு கொலைவெறியில் அழைந்து கொண்டிருக்கும் Hans Beckert'ஐ  சந்தேகப்படும் ஒரு குருடன் (குருடனுக்கு தான் கண் இல்லையே அவன் எப்படி Beckert மேல் சந்தேகப்படுவான்!... டைரக்டர் திறமைய இங்க கொஞ்சம் காட்டி இருப்பாரு), தனது அருகாமையில் இருப்பவனிடம் கூற, அவன் Beckert'க்கு தெரியாமல் பின்தொடர்கிறான்.


இந்த செய்தியை திருடர்களின் தலைவர்களுக்கு தொலைபேசியில் தெரியப்படுத்த, M'என்ற எழுத்தை அடயாளமாக தனது கையில் எழுதி அதை Beckert அணிந்திருக்கும் கோட் சட்டையின் பின்புறத்தில்  பதியவைத்து செல்கிறான்......
Hans Beckert'ஐ முதலில் போலிஸ் பிடித்தார்களா அல்லது கொள்ளையர் கூட்டம் பிடித்தார்களா, Hans Beckert'க்கு கடைசியில் என்ன ஆனது, இது போன்ற கேள்விகளுக்கு விடைகளை திரைப்படத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

----------**********----------மிகவும் பழைய திரைப்படம். மிக சில காட்சிகளில் ஒலி இல்லாமல் இருக்கும். திரைக்கதை மிகவும் மெல்லமாக நகரும். ஆனால் காட்சிகள் எல்லாம் மிக அருமையாக இருக்கும். ஆரம்பத்தில் திரையில் ஈர்ப்பு இல்லாமல் ஆரம்பமாகும்  இத்திரைப்படம் சற்று நேரத்திலே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடும். கண்டிப்பாக பார்க்கலாம், இது நல்ல திரைப்படம்.

இந்த ஜெர்மனிய மொழி திரைப்படத்தின் ட்ரைலர் கிழே உள்ளது. கிளிக் செய்து பார்க்கவும்.இந்த M' திரைப்படம் அணைத்து வகை கில்லர் திரைப்படங்களின் முன்னோடி எனலாம்.

Fritz Lang இதற்கு முன்பே நிறைய திரைப்படங்களை இயக்கி இருந்தாலும், இத்திரைப்படம் தான் ஒலியுடன் கலந்து வெளிவந்த அவருடைய முதல் திரைப்படம். 

Petter Lorre நிறைவாக, கதாபாத்திரத்திற்கு தேவையான இயல்பான நடிப்பில் கலக்கியுள்ளார்.

1920'இல் வாழ்ந்த பீட்டர் குர்டேன் (The Vampire of Dusseldorf) சீரியல் கொலைகாரனுடைய வாழ்கையின் இன்ஸ்பிரேஷன் தான் இத்திரைப்படம் என அனைவரும் கூறுகிறார்கள். ஆனால் Fritz Lang இதனை மறுத்துள்ளார்.


1931'ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தை, 1934'ஆம் ஆண்டு நாசி இயக்கம் திரையிட தடைசெய்தது. முப்பத்தி இரண்டு ஆண்டுகள் கழித்து 1966'ஆம் ஆண்டு DVD'யாக வெளியானது.


இத்திரைப்படத்தை, யு டுப்பில் online'ல் காண இங்கே M 1931 ஜெர்மனி கிளிக் செய்யவும். (பிரிண்ட் நன்றாகவே உள்ளது)
   
       

8 comments:

 1. அடேங்கப்பா ரொம்ப பழைய படம் போல... ஆனாலும் கதை நல்லாத்தான் இருக்கு...

  ReplyDelete
 2. "M" is really a good Thriller movie.. I watched it recently in YouTube.. Ye, The whole movie is available..

  ReplyDelete
 3. "M" படத்தை பற்றி கேள்விப்பட்டு இருகிறேன்.....இன்னும் பார்க்க வில்லை....படம் பார்க்க வேண்டும் உள்ளது..

  ReplyDelete
 4. N.H.பிரசாத் @
  Philosophy Prabhakaran @
  பிரசன்னா கண்ணன் @
  ராஜ் @

  வருகை தந்த அனைவருக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 5. Wonderful review...........First serial killer movie told from his perspective.

  ReplyDelete
 6. அழகான கச்சிதமான சிறப்பான விமர்சனம் நண்பரே.வாழ்த்துக்கள்.மிக எளிதான சொற்களை பயன்படுத்தி அனைவரும் புரிந்துக்கொள்ளும் படி ஒவ்வொரு விமர்சனத்தையும் நன்றாக எழுதுகிறீர்கள்.அதற்கு முதலில் பல நன்றிகள்..

  M - சில நாட்களுக்கு முன்பே கேள்பட்டிருக்கிறேன் நண்பரே..ஒரு திரில்லர் அதுவும் ரொம்ப பழைய படம் ஆதலால் கொஞ்சம் பார்க்க தடையாக இருந்தது.உங்கள் விமர்சனம்,மிக முக்கியமாக நீங்கள் கொடுத்த படத் தகவல்கள் படத்தை பார்க்க தூண்டுகின்றது.பார்த்துவிட்டு படத்தை பற்றி பிறகு சொல்கிறேன்..
  மேலும், பல நல்ல பழைய படங்களை பற்றி அறிமுகம் செய்தால் கொஞ்சம் தெரிந்துக்கொள்ள உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.(இது எனது வேண்டுக்கோள்..தவறாக நினைக்க வேண்டாம்).

  ReplyDelete