Monday, November 21, 2011

Orphan (2009) விமர்சனம்.

ஒர்ப்ஹன் Jaume Collet Serra இயக்கத்தில் 2009'ஆம் ஆண்டு வெளிவந்த Psychological Thriller வகையை சார்ந்த திரைப்படம். 

எதிர்பார்ப்பே இல்லாமல் பார்த்த சில படங்கள் இதுவும் ஒன்று. ஹாரர் படம் தான் என்று நினைத்தேன், முதலில் பல காட்சிகளும் அப்படித்தான் நகர்ந்தது. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் தான் தெரிந்தது, இது ஒரு அழகான சஸ்பன்ஸ் திரைப்படம் என்று.

Rating : R
Genre : Mystery, Thriller

Produced By : Leonardo DiCaprio, Susan Downey, Jannifer Davisson Killoran, Joel Silver
Directed By : Jaume Collet Serra
Story : Alex Mace
Screenplay : David Johnson
Cinematography : Jeff Cutter
Music By : John Ottman
Editted By : Timothy Alverson

ஜான்'னுடைய மனைவி கேட், இவர்களுக்கு இரு குழந்தைகள் சிறுவன் டேனியல் மற்றும் சிறுமி மேக்ஸ். இவர்களுடைய மூன்றாம் குழந்தை இறந்து பிறக்கிறது. இந்த இழப்பினால் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகும் இருவரும் பேசி ஒரு குழந்தையை தத்து எடுப்பதாக முடிவு செய்கிறார்கள். தத்து எடுப்பதினால் இவர்களது கவலைகள் திரும் என்று நம்புகிறார்கள்.

இருவரும் ஒரு அனாதை இல்லத்தில், எஸ்தர் என்ற 9 வயது சிறுமியை தத்து எடுக்கிறார்கள்.

எஸ்தர்'ன் வரவு சிறுவன் டேனியல்'லுக்கு பிடிப்பதில்லை. சிறுமி மேக்ஸ்'ற்கு எஸ்தர்'ரை மிகவும் பிடித்து போகிறது. மேக்ஸ் எஸ்தர் சொல்லுவதை எல்லாம் கேட்டு அதன்படியே நடந்துக்கொள்கிறாள்.

சில பல விஷயங்களில் வித்தியாசமாக நடந்துக்கொள்ளும் எஸ்தர்'ஐ, கேட் சந்தேகிக்கிறாள்(அது என்ன சில பல விஷயமின்னு கேட்டா....அத நீங்க படத்துல பார்க்கும்போது உங்களுக்கு புரியும்). ஒரு நாள் சிறுமி ஒருவளை தாக்கிவிடுகிறாள் எஸ்தர், அனைவரையும் இது விபத்துதான் என நம்பவைக்கிறாள். இதனை எஸ்தர் தான் செய்திருப்பாள் என சந்தேகிக்கும் கேட், எஸ்தர் இருந்த அந்த அனாதை இல்லத்தின் தலைமை அதிகாரி Sister Abigail'லிடம் இதை பற்றி கூறுகிறாள்.

ஜான்'னையும் கேட்'ஐயும் அவர்கள் வீட்டில் சந்திக்கும் Sister Abigail, எஸ்தர் இருக்கும் இடங்களில் இது போன்ற (விபத்து) சம்பவங்கள் பல முறை நடந்திருப்பதாக கூறுகிறார். இவர்கள் பேசுவதை எஸ்தர் ஒட்டு கேட்டுவிடுகிறாள்.

அனாதை இல்லத்திற்கு திரும்பிச் சென்றுகொண்டிருக்கும் Sister Abigail'ன் கார் முன்னே மேக்ஸ்'ஐ தள்ளிவிடுகிறாள் எஸ்தர், விபத்தை தவிர்த்து மேக்ஸ்'ற்கு காயம் பட்டதா என அறிய காரிலிருந்து வெளியே வரும் Sister Abigail'ஐ எஸ்தர் சுத்தியலினால் அடித்தே கொள்கிறாள். மேக்ஸ்'ன் உதவியோடு பிணத்தை ஒரு இடத்தில புதைத்துவிட்டு, சுத்தியலை ஒரு மரவீட்டின் மேல் வைக்கிறாள் எஸ்தர். மேக்ஸ்'ஐ இதை யாரிடமும் கூற வேண்டாம் என்றும் அப்படி கூறினால் போலிஸ் அவளையும் கைது செய்வார்கள் என மிரட்டிவைகிறாள். 

கேட்'னுடை சந்தேகம் எஸ்தர்'ரின் மேல் இன்னும் அதிகமாகிறது. எஸ்தர்'ரிடம் எதோ மர்மங்கள்/பிரச்சணைகள் உள்ளது என நம்புகிறாள். இந்த சந்தேகங்கள் பற்றி ஜான்'னிடம் கூற, ஜான் இதை அனைத்தையும் நம்ப மறுக்கிறான்.


கேட், எஸ்தர் மறைத்து வைத்திருக்கும் பைபிள் ஒன்றில் இருக்கும் சில குறிப்புக்கள் வைத்து எஸ்டோனியா நாட்டில் இருக்கும் மன நல காப்பகம் Saarne Institute'ற்கு எஸ்தர் என்பவளை பற்றிய விபரங்கள் வேண்டும் என ஈமெயில் மூலம் அவள் படத்தையும் சேர்த்து அனுப்பிவைக்கிறாள்.

மேக்ஸ் மூலம் டேனியல்'லிற்கு எஸ்தர் செய்த கொலை தெரியவர, எஸ்தர் தான் கொலையாளி என நிருபிப்பதற்கு அந்த சுத்தியலை எடுத்துக்கொண்டு வர போகிறான் டேனியல். அதே நேரத்தில் அங்கு வரும் எஸ்தர், டேனியல்'ஐ மரவீட்டின் உள்ளே பூட்டி அதை கொளுத்திவிடுகிறாள்.

சிறுவன் டேனியல் தப்பித்தானா, யார் இந்த எஸ்தர், அவளின் மர்மங்கள் என்ன, இவை அனைத்திற்கும் விடையை படத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

----------**********----------மேக்ஸ்'ஆக நடித்த சிறுமி நன்றாக நடித்திருப்பாள்.

கிளைமாக்ஸ் ட்விஸ்ட் ஒன்று இருக்கும். அது தான் படத்தையே தூக்கி நிறுத்தும்.

நல்ல ஒரு த்ரில்லர் திரைப்படம், சிலருக்கு பிடிக்காமலும் போகலாம். எதற்கும் கிழே உள்ள லிங்கை கிளிக் செய்து ட்ரைலர் பார்க்கவும்.

Award Won
Brussels International Festival of Fantasy Film 2010
Category : International Feature length Competition
Won : Golden Raven 


9 comments:

 1. அருண்,
  நான் இந்த படத்தை "HBO" வில் பார்த்துள்ளேன்....ஏனோ இந்த படம் என்னை கவரவில்லை....சரியாக சொல்ல வேண்டும் என்றால் சிறுமி "Easthar" கதாபாத்திரத்தை ஏனோ என்னால் ஏற்க முடிய வில்லை...
  மற்றபடி நல்ல விமர்சனம்..

  ReplyDelete
 2. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 3. சில வேலை காரணமாக சரியாக
  இணையத்தில் உலாவர நேரம் கிட்டவில்லை.இப்பொழுதுதான் நேரம் கிடைத்து
  இந்த பதிவை படித்தேன்.அருமையான விமர்சனம் நண்பரே.நீண்ட நாட்களுக்கு முன்பு பார்த்த படம்.நள்ளிரவில் பார்த்த பிறகு சிறிது நேரம் தூக்கத்தை பறித்த படமிது..நல்ல ஹாரர் உணர்வுகளை கொடுத்த படம்.

  இதில் ஆச்சரியம் என்னவெனில் இதே படத்தை கடந்த 10 நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வருகிறேன்..இப்ப தங்கள் விமர்சனம் படித்த பிறகு வெளியிட பயமாக இருக்கிறது.அவ்வளவு நன்றாக இருக்கிறது உங்கள் பதிவு.நன்றி.

  ReplyDelete
 4. நல்ல விமர்சனம் ... என் ரஷ்ய சினிமா விமர்சனத்திற்கு ரெட் டஸ்ட்- உலக சினிமா இங்கே சொடுக்கவும் ...http://pesalamblogalam.blogspot.com/2011/07/blog-post_10.html

  ReplyDelete
 5. ராஜ் said @

  வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 6. kumaran said @

  நன்றி குமரன்.

  உங்களது விமர்சனம் படித்தேன். என்னுடையதை விட சிறந்ததாகவே உள்ளது உங்கள் விமர்சனம். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 7. N.H.பிரசாத் @

  Thanks Prasad.

  ReplyDelete
 8. ananthu said @

  வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி.
  கண்டிப்பாக படித்து கருத்தும் போடுகிறேன்.

  ReplyDelete