'Them' திரைப்படம் David Morea மற்றும் Xavier Palud இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு வெளிவந்த பிரெஞ்சு திரைப்படம். ஹாரர் வகையை சார்ந்த இத்திரைப்டத்தில் Olivia Bonamy மற்றும் Michael Cohen முறையே க்ளமன்டைன் மற்றும் லூகஸ் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .
ரோமானியா நாட்டில், ஒரு ஆஸ்திரேலியா தம்பதியருக்கு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுத்த சஸ்பன்ஸ் ஹாரர் திரைப்படம்.
Rating : R
Genre : Horror, Thriller
Written and Directed By : David Morea, Xavier Palud
Produced By : Richard Grandpierre
Cinematography : Axel Cosnefroy
Music By : Rene-Marc Bini
Edited By : Nicolas Sarkissian
Cast : Olivia Bonamy, Michael Cohen
படத்தின் முதல் காட்சியிலேயே பார்வையாளர்களை பயம்கொல்லச் செய்து எதிர்பார்ப்பை அதிகப்படுத்திவிடுகின்றனர். இந்த முதல் காட்சியை பின் வரும் இரண்டு பத்தியில் எழுதி இருக்கிறேன். காட்சியின் சுவாரசியம் குறையாமல் படம் பார்க்க வேண்டும் என்றால், அடுத்து வரும் இந்த இரண்டு பத்தியை படிக்காமல், அதற்கு அடுத்து வரும் பத்தியில் இருந்து தொடருங்கள்.
ஒரு பெண்ணும் அவளுடைய தாயும், மரங்கள் அடர்ந் த சாலையில் காரினில் பயணித்து கொண்டு இருக்கும் பொது ஏதொ ஒரு உருவம் நாடு சாலையில் எதிரில் திடீர் என்று வர, அந்த விபத்தை தவிர்க்க அந்த பெண்ணின் தாய் முற்பட அந்த கார் சாலையின் ஓரத்தில் இருக்கும் மரக்கம்பத்தில் மோதி நிற்கிறது.
அப்பெண்ணின் தாய் வெளியே சென்று சோதிக்கிறாள், அங்கு யாரும் இருப்பதில்லை. மீண்டும் காருக்கு திரும்பும் அவள் வண்டியின் என்ஜின் ஸ்டார்ட் செய்ய, அது இயங்க மறுக்கிறது. வெளியே சென்று Bonnet'ஐ திறந்து என்ஜின்'ஐ சரி செய்துக்கொண்டு இருக்க, உள்ளே இருக்கும் மகள் குரல் கொடுக்கிறாள் எந்தவித மறுகுரலும் வராததினால் காரை விட்டு வெளியே சென்று பார்க்கிறாள் அங்கு அவள் தாய் இருப்பதில்லை. தேடி பார்க்கிறாள் அங்கு எங்கும் அவள் தாய் இருப்பதில்லை. திடீர் என்று அடர்த்தியான மரங்களுக்கு நடுவில் இருந்து ஒரு வித்தியாசமான ஒலி அதிகமாகிக்கொண்டே வருகிறது. பயந்து காரினுள் ஏறி கதவை மூடிக்கொள்கிறாள். கைபேசி மூலம் போலிஸ்'க்கு தொடர்புக்கொள்கிறாள் ஆனால் அதற்குள் காரினுள் இருக்கும் ஒரு உருவத்தால் கழுத்து நெரித்து கொலைசெய்யப்படுகிறாள்.
இந்த காட்சி முடிந்து டைட்டில் கார்டில் படம் தொடங்குகிறது.
க்ளமன்டைன் ஒரு பள்ளியின் ஆசிரியை, வகுப்பை முடித்து விட்டு காரினில் வீடு திரும்புகிறாள். வரும் வழியில் முன்னால் இரவு நடந்த ஒரு கார் விபத்தை கடக்கிறாள். அதை பற்றிய விபரம் ஏதும் அவளுக்கு தெரிவதில்லை.
க்ளமண்டைனுடைய காதலன் லூகஸ் இருவரும் அந்த பொழுதினை மிகவும் சந்தோசமாக கழிக்கிறார்கள், தங்களுடைய தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில். இரவு உணவை முடித்துவிட்டு, சிறிது நேரம் தொலைக்காட்சியை பார்த்துவிட்டு இருவரும் தங்களது படுக்கைக்கு செல்கிறார்கள்.
சிறிது நேரத்தில் ஏதோ சதம் கேட்க க்ளமன்டைன், தூங்கிக்கொண்டு இருக்கும் லூகஸ் இடம் இதை கூறுகிறாள். இருவரும் கிழே சென்று பார்கிறார்கள். க்ளமண்டைனின் கார் நிறுத்தி இருந்த இடத்தில் இல்லாமல் சற்று தொலைவினில் நிறுத்தி இருப்பதாய் கண்டு வியப்படைகிறார்கள். லூகஸ், க்ளமண்டினை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு கார் இருக்கும் இடத்திற்கு செல்கிறான், ஆனால் அந்த காரை மர்ம உருவம் ஒன்று ஒட்டி சென்றுவிடுகிறது.
பிறகு இருவரும் விட்டினுள் செல்கின்றனர், தொலைபேசி மூலம் போலீஸில் புகார் தெரிவிக்கின்றனர். படுக்கைக்கு செல்லும் இவர்களுக்கு சிறிது நேரத்தில் மறுபடியும் கிழே இருந்து ஒலி கேட்கிறது. க்ளமண்டினை அந்த அறையிலே இருக்க சொல்லிவிட்டு லூகஸ் கிழே செல்கிறான்.
கிழே அணைத்து வைக்கப்பட்டு இருந்த தொலைக்காட்சி ஓடிக்கிண்டிருப்பதை கண்டு அதை நிறுத்துகிறான்....
அடுத்த காட்சியில், லூகஸ்'ஐ அந்த மர்ம உருவம் கண்ணாடி கதவினால் தாக்க, அந்த கண்ணாடி அவன் தொடை பகுதியில் ஏறி பலத்த காயம் அடைகிறான். லூகஸ் ஓட முடியாமல் ஓட அந்த மர்ம உருவம் இன்னும் பலமாக அவனை துரத்துகிறது....
அந்த மர்ம உருவம் யார்,
இவர்களை எதற்கு வேட்டையாடுகிறது,
க்ளமன்டைன், லூகஸ் இருவருக்கும் என்ன ஆனது,
போன்ற விடைகளுக்கு படத்தை பார்த்து பதில் தெரிந்துக்கொள்ளவும்.
இத்திரைப்படத்தின் ட்ரைலர் கிழே உள்ளது. கிளிக் செய்து பார்க்கவும்.
நல்ல ஒரு ஹரார் திரைப்படம் பார்க்கவேண்டும் என்றால் கண்டிப்பாக இந்த திரைப்படத்தை பார்த்து என்ஜாய் செய்யலாம். க்ளமன்டைன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் Olivia Bonamy அற்புதமாக நடித்திருக்கிறார். நல்ல ஒரு ஹரார் திரைப்படத்தின் வெற்றியின் முக்கிய பங்கே இசை தான், இத்திரைப்படத்தில் இயல்பான இசை கனகட்சிதமாக காட்சிகளுக்கு ஏற்றவாறு பொருந்தி இருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவும் மிக அருமை.
அதிகப்படியான நல்ல விமர்சனங்களை பெற்ற இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தெரியவரும் விஷயம் ஏற்றுகொள்ள முடியாத ஒன்று. ஆனால் அது தான் உண்மை, நிஜத்தில் நடந்த சம்பவம் கூட.
இதே போல் ஹாலிவுட் திரைப்படம் ஒன்று உள்ளது The Strangers. 2008'ல் வெளியானது, கதைக்களம் ஒன்றாக இருந்தாலும் படம் முற்றிலும் மாறுபட்டது.
Nice. I Think this is the best Review Which i seen from u'r blog. keep it up.
ReplyDeleteவழக்கம் போல அழகான சிறப்பான படத்தை பார்க்க ஆவலை ஏற்படுத்த கூடிய விமர்சனம் நண்பரே.நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்,
ReplyDeleteஎங்கிருந்து நண்பா இது போன்ற படங்களை கண்டுபிடிக்கிறீங்க..நான் கேள்விபடாத படம் இது.அதை அறிமுகபடுத்தியதற்கு முதலில் எனது நன்றி.நீங்கள் சொன்னதுப் போல் அந்த ரெண்டு பத்திகளை விட்டுவிட்டுத்தான் படித்திருக்கிறேன்.சீக்கிரம் படம் பார்த்து படத்தை பற்றி மேற்க்கொண்டு சொல்கிறேன்.
தொடரட்டும் உங்கள் எழுத்து வண்ணங்கள்.. வாழ்த்துக்கள்.
good thriller.....and a great review
ReplyDeleteநல்ல ஹர்ரர் பட அறிமுகத்திற்கு நன்றி ...!
ReplyDeleteN.H.பிரசாத் said @
ReplyDeleteThanks, N. H. Prasad.
Kumaran said @
ReplyDeleteவருகைக்கும் உங்கள் வாழ்த்துகளுக்கும் என் நன்றி குமரன்.
படத்தின் அந்த ஆரம்ப காட்சி மிகவும் சிறியது தான், இருந்தாலும் இந்த விமர்சனத்தை படித்து விட்டு, படம் பார்பவரின் சுவாரசியம் குறையும் என்பதற்கு தான் அப்படி எழுதினேன்.
Arun said @
ReplyDeleteThank You, Arun.
ananthu said @
ReplyDeleteஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஆனந்து.
மேலேயே குறிப்பிட வேண்டுமென்று நினைத்து மறந்துவிட்டேன்.
ReplyDeleteThe Strangers. 2008 - நான் பார்த்திருக்கிறேன்..பரவாவில்லை என்ற ரகம்தான்.
Gambling 101: How to Stop Gambling - Missouri
ReplyDeleteWhile there are 포천 출장마사지 some casinos and gambling houses 창원 출장샵 in Missouri, there 동두천 출장샵 are no illegal 천안 출장안마 gambling sites on the Internet. The What does 김포 출장안마 gambling mean?Can you play online gambling in Missouri?