Monday, December 12, 2011

The Island (2005) விமர்சனம்.


மைக்கல் பே இயக்கத்தில் தி ஐலேண்ட் 2005'ல் வெளிவந்த ஆக்சன் த்ரில்லர் திரைப்படம். Ewan McGregor மற்றும் Scarlett Johansson நடித்துள்ளனர்.

சென்ற காலகட்டத்தில் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டால் அல்லது விபத்தில் சேதமடைந்தால், இழந்த உறுப்பை பெறுவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது இதை பற்றி விழிப்புணர்வு ஓரளவு மக்கள் அடைந்துள்ளனர். அறிவியலும் ஓரளவு வளர்ச்சியடைந்துள்ளது இந்தகாலகட்டத்தில் சிலர் இறந்த பின்பு தங்களது உறுப்புகளை தானமாக கொடுக்க முன்வருகின்றனர். இதனால் சிலர் பயனடைகிறார்கள், ஆனால் சதவிதம் மிகவும் குறைவு. இந்த பற்றாக்குறையினால் உடல் உறுப்பு திருட்டுகள் மற்றும் சம்மந்தப்பட்டவரே அவரது ஏழ்மை காரணமாக விலைக்கு உறுப்புகளை விற்கின்ற சம்பவங்கள் நடைப்பெறுகின்றது. வருங்காலத்தில் இந்த விஷயத்தில் எது போன்ற மாற்றங்கள் வரும் என்பதை நம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 

குளோனிங் என்ற முறையில் ஒரு நகல் மனிதனையே உருவாக்கி அவனிடம் இருந்து உடல் உறுப்புகளை பெறுவதே இப்படத்தின் கரு. இதை ஒருமணி நேரம் முப்பத்தி ஆறு நிமிடம் ஓடக்கூடிய சைன்ஸ் பிக்சன்/ஆக்சன் த்ரில்லர் திரைப்படமாக வழங்கயுள்ளனர்.

Rating : PG-13
Genre : Action Sci-Fi, Thriller

Produced By : Michael Bay, Ian Bryce, Walter F. Parkes
Directed By : Michael Bay
Written By : Caspian Tredwell-Owen
Screenplay : Caspian Tredwell-Owen, Alex Kurtzman, Roberto Orci
Music By : Steve Jablonsky
Cinematography : Mauro Fiore
Edited By : Paul Rubell, Christian Wagner
Cast : Ewan McGregor, Scarlett Johansson, Djimon Hounsou, Sean Bean, Steve Buscemi, Michael Clarke Duncan.


கதை :
ஒரு பெரிய ஸ்டெரைல் செய்யப்பட்ட கட்டிடம், இதற்கும் வெளி உலகுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அங்கு இருக்கும் அனைவரும் வெள்ளை நிற உடையை அணிந்துள்ளனர். இந்த உலகம் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறிவிட்டதாகவும் அங்கு உயிர்கள் வாழ தகுதியற்றதாக பூமி உள்ளதாக நம்பப்படுகிறது இவர்களால் (நம்பவைக்கபடுகிறது). 

அந்த பூமியில் மனிதன் வாழ தகுந்த இடமாக தி ஐலேண்ட் என்ற ஒரே இடம் உள்ளது எனவும், அங்கு வாழ்வதற்கு இந்த வெள்ளை உடை அணிந்தவர்களை லாட்டரி மூலம் தேர்ந்து எடுக்கின்றார்கள்.


இவர்களுக்கு நிறைய கட்டுப்பாடு, எந்த அளவு மற்றும் எந்த வகை உணவை உண்ண வேண்டும், பெண்களும் ஆண்களும் பழகும் முறை, உடல்பயற்சி போன்றவை. 

படத்தின் நாயகன் லின்கோல்ன் ஸிக்ஸ் எக்கோ'விற்கு சிறு சிறு சந்தேகங்களும் கேள்விகளும் தோன்றுகிறது. லின்கோல்ன் ஸிக்ஸ்'ன் நாயகி  ஜோர்டான் டூ டெல்டா சில விஷயங்களில் நாயகனுக்கு உதவிப்புரிகிறாள். ஒரு முறை ஒரு காரியமாக பவர் பிளான்ட் இருக்கும் இடத்திற்கு செல்கிறான், அங்கு ஒரு பட்டம் பூச்சியை காண்கிறான். இன்னும் அவனுடைய சந்தேகங்கள் அதிகமாகிறது. 

அடுத்த நாளுக்கான பயணியாக நமது நாயகி ஜோர்டான் டூ டெல்டா தேர்வாகிறாள். அன்று இரவு லின்கோல்ன் ஸிக்ஸ் அவனது தேடலை தொடங்குகிறான், அப்போது அன்று லாட்டரி விழுந்த பெண்ணின் குழந்தையை (அப்பொழுது தான் பிறந்த குழந்தையை) யாரிடமோ ஒப்படைத்து விட்டு, அந்த பெண்ணை கொன்று விடுகிறார்கள். முன்பே லாட்டரி விழுந்து சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருப்பவனாக திரையில் காட்டப்படும் இன்னொருவனுக்கு அறுவை சிகிச்சை செய்வதையும் லின்கோல்ன் ஸிக்ஸ் பார்த்து விடுகிறான்.


லின்கோல்ன் ஸிக்ஸ் நாயகி ஜோர்டான் டூ டெல்டாவை கூடிக்கொன்று அந்த இடத்தை விட்டு தப்பிக்கப்பார்க்கிறான். இதை தெரிந்து கொள்ளும் வில்லன் தனது ஆட்களை அனுப்பி பயனில்லாமல் போக, ப்ரோபாசனால் கில்லர் டீமை அனுப்பி வைக்கிறான்.

லின்கோல்ன் ஸிக்ஸ் நாயகி ஜோர்டான் டூ டெல்டா இருவரும் எஸ்கேப் ஆகும் இந்த காட்சியில் தொடங்கும் ஆக்சன், பார்பவரின் கண் இமை கூட மூட முடியாத அளவு அதிரடி காட்சிகள் நிறைந்தாக செல்லும் படம் முடியும் வரை.

படத்தில் பிடித்தது:

Lincoln Six-Echo: Who is God ?
McCord: You know when you really want something, you close your eyes and wish for it really hard? God is the guy that ignores you.

McCord: ...but there's one universal truth, never trust a women with your credit card..

படத்தோட இயக்குனர் மைக்கல் பே அனைவரும் நன்கு அறிந்து இருபிங்க Bad Boys, The Rock, Armageddon, Pearl Harbor போன்ற ஆக்சன் திரைப்படங்களை இயக்கியவர். இந்த படங்களின் வரிசையில் தி ஐலேண்ட் ஒப்பிட முடியவில்லை என்றாலும், ஒரு முறை பார்த்து என்ஜாய் செய்யகூடிய பக்கா ஆக்சன் திரைப்படம்.  

ஸ்டீவ் ஜப்லோன்ச்கி பின்னணி இசை மற்றும் மாரோ பியோர் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பக்க பலம்.


9 comments:

 1. ஏற்கனவே ரசித்த திரைப்படம் என்றாலும் விமர்சனம் நன்று

  ReplyDelete
 2. படத்தை பார்த்து அழகான சிறப்பான விமர்சனமாக வழங்கியதோடு ஒரு செம்மையான வசனத்தையும் சேர்த்து தந்துட்டீங்க நண்பரே..இனிமேலும் பார்க்காம இருக்க முடியாது.டைம் கிடைச்சா கண்டிப்பா பார்க்குறேன்.
  நீங்க சொன்ன மாதிரி, Bad Boys, Armageddon போன்ற படங்களின் வழி அறிந்துக்கொண்ட ஓர் ஆக்சன் முகமாக இயக்குனர் மைக்கல் பேவை சொல்லலாம்.அதிரடி காட்சிகளின் வழி அனைவரையும் ரசிக்க வைக்க கூடியவர்.
  மீண்டும் ஒருமுறை விமர்சனம் அருமை..வாழ்த்துக்கள்..மேலும் பல படங்களை அறிமுகம் செய்யுங்கள்.

  ReplyDelete
 3. "Transformer" படம் எடுத்தவரு தானே மைகேல் பே ???
  நல்ல டைரக்டர்...."The Island" வித்யாசமான படம் மாதிரி இருக்கும் போல...
  கண்டிப்பா பார்கிறேன்... நல்ல அறிமுகம்...அருண்..இன்னும் நல்ல நல்ல சினிமாவை அறிமுகபடுதுங்கள்

  ReplyDelete
 4. கோவை நேரம் said @

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 5. Kumaran said @

  உங்களுடைய பாராட்டுதலுக்கும் வாழ்த்துகளுக்கும் என் நன்றிகள்.

  படம் வெளிவந்த பொது விமர்சகர்களால் கிழி கிழி என்று கிழிக்கப்பட்ட திரைப்படம். இன்று ஆக்சன் விரும்பிகளால் ஓரளவு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

  ReplyDelete
 6. ராஜ் said @

  கருத்துக்கு நன்றி.

  ///"Transformer" படம் எடுத்தவரு தானே மைகேல் பே ???////
  அவரே தாங்க.

  ReplyDelete
 7. N.H.பிரசாத் said @

  Thanks Prasad.

  ReplyDelete
 8. படம் எங்கேயோ பார்த்த நினைவு சகோ நினைவுக்கு மட்டும் வரமாட்டென்கிறது...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு

  ReplyDelete