Thursday, January 5, 2012

Mystic River (2003) விமர்சனம்.



கிளின்ட் ஈஸ்ட் வூட் இயக்கத்தில் மிஸ்டிக் ரிவர் திரைப்படம் 2003'ஆம் ஆண்டு வெளிவந்தது. டென்னிஸ் லேஹன் எழுதிய மிஸ்டிக் ரிவர் என்ற நாவலை அதன் பெயரிலேயே திரைப்படமாக்கியுள்ளனர் .  ஸீன் பென், டிம் ராப்பின்ஸ் மற்றும் கெவின் பேகன் நடித்துள்ளனர். 


சிறு வயதில் நடக்கும் சில தவறான விஷயங்களினால் பெரியவர்கள் ஆன பிறகு நிறைய பேர் பாதிப்பு அடைகின்றனர், அந்த ஒரு விஷயத்தை பற்றிய படம். க்ளின்ட் ஈஸ்ட்வூட் பற்றி சொல்லவே தேவையில்லை சம கலக்கல் ஆன ஒரு நடிகர். பல நல்ல திரைப்படங்களையும் தயாரித்து இயக்கியும் இருக்கிறார்,  இசை அமைப்பாளரும் கூட. இந்த திரைப்படத்திற்கும் இவரே இசை அமைத்துள்ளார் . 

Rating : R
Genre : Crime, Drama, Mystery

Produced By : Clint Eastwood, Judie Hoyt, Robert Lorenz
Directed By : Clint Eastwood
Written By : Dennis Lehane (Novel), Brian Helgeland (Screenplay)
Cinematography : Tom Stern
Original Music : Clint Eastwood
Cast : Sean Penn, Tim Robbins, Kevin Bacon, Laurence Fishburne, Marcia Gay Harden

ஜிம்மி, டேவ் மற்றும் ஸீன் மூவரும் சிறுவயது நண்பர்கள்.  ஒரு நாள் இவர்கள் மூவரும் தெருவினில் விளையாடிக்கொண்டிருகும்  பொது காரினில் வரும் இருவர், தங்களை போலீஸ் என்று கூறி டேவ்'வை மட்டும் அவர்களின் காரினில் ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள்.  சிறுவன் டேவ்'வை இவர்கள் தொடர்ந்து நான்கு நாட்கள்  பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். சிறுவன் டேவ் அங்கிருந்து தப்பித்துவிடுகிறான்.  இந்த காட்சியில் ஆரம்பமாகும் திரைப்படம் இருவத்தி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு என தொடர்கிறது.

இப்போ அந்த மூன்று பெரும் அதே நகரத்தில் வெவ்வேறு வாழ்கை திசையின் பாதையில், ஜிம்மி முன்னால் தாதா இன்று அங்காடிக் கடை நடத்தி வருகிறான்.  ஜிம்மி மற்றும் இவனுடைய மனைவிக்கு ஒரு பத்தொன்பது வயது மகள், பெயர் ''கேத்தி''. டேவ் சாதாரண ஒரு வேலை செய்து  தனது குடும்பத்துடன் வசித்து வருகிறான் ஆனால் அந்த பழைய நிகழ்வுகளின் பாதிப்புகளில் இருந்து மீளாமல். ஸீன் காவல் துறையில் துப்பறியும் இலாகாவில் பணிபுரிகிறான்.


ஜிம்மியின் மகள் கேத்தி, ப்ரெண்டன் என்பவனை காதலிக்கிறாள். ஜிம்மிக்கு பயந்து இருவரும் வேறு நகரத்திற்கு ஓடிப்போவதாக முடிவு செய்கிறார்கள். கேத்தி அவள் தோழியுடன் அதே இரவு ஒரு பாரில் மது அருந்திக்கொண்டிருக்கும் பொது அங்கு டேவ்'வை சந்திக்கிறாள். இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு அந்த இடத்தை விட்டு இருவேறு திசையில் செல்கிறார்கள்......

வீடு திரும்பும் டேவ்'வின் கையினில் காயம் பட்டுப் இருப்பதை கண்டு அவன் மனைவி அவனிடம் விசாரிக்க, டேவ் ஒரு வழிப்பறி திருடனுடன் நடந்த சண்டையில் அவனை பலமாக தாக்கியதில் உண்டான காயம் என கூறுகிறான். அது மட்டும் இன்றி அவன் இறந்து இருக்ககூடும் எனவும் கூறுகிறான். மறுநாள் செய்தியில் இது போல எந்த நிகழ்வும் நடந்தாக செய்தி வராததினால் அவன் மனைவி டேவ்'வின் மேல் சிறிது சந்தேகிக்கிறாள்.


முன்னால் இரவு கேத்தி கொலை செய்யப்பட்ட விவரம் அடுத்த நாள் அனைவருக்கும் தெரியவருகிறது. கேத்தியின் கொலை வழக்கை விசாரிக்க ஜிம்மியின் பழைய நண்பனான ஸீன் வருகிறார். இவர் ஒரு கோணத்தில் விசாரணை நடத்த, ஜிம்மி அவனுடைய பழைய கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு கேத்தியை கொலை செய்தவனை தேடுகிறான் பழிவாங்க.

ஒரு கட்டத்தில் ஸீன், டேவ்'வை விசாரிக்க முற்றும் மாறுபட்ட பதில்களை சொல்லவே சந்தேகம் எல்லாம் டேவ்'வின் மேல் திரும்புகிறது. டேவ்'விடம் அந்த இரவு நடந்த சம்பவத்திற்கு பிறகு நிறைய மாறுதல்களை காணும் அவன் மனைவியும், கேத்தி'யை ஒரு வேளை டேவ் கொன்றிருக்ககூடும் என சந்தேகிக்கிறாள் இதை ஜிம்மியிடமும் கூறுகிறாள். முன்பே இந்த சந்தேககங்களை இவனது கூட்டாளிகளும் கூறி இருக்க ஜிம்மியும் இதை நம்பிவிடுகிறான்.......

(மேலே இருபது கிளைமாக்ஸ் கட்சியோட ஸ்டில், இந்த இடத்தில்தான்..... )

யார் கேத்தியை கொலை செய்தது.......
டேவ் தான் உண்மையில் கேத்தியை கொலைச் செய்தானா, ஜிம்மி டேவ்'வை என்ன செய்தான், போன்ற கேள்விகளுக்கு விடையை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

படத்தின் கதைக்கு ஏற்றார் போல் மிக சிறப்பாக அமைத்திருக்கும் திரைக்கதை. இந்த திரைப்படத்தில் அனைவரும் அவர்களது கதாபத்திரத்தை உணர்ந்து மிக சிறப்பாக நடித்துள்ளனர். முக்கியமாக மிக சிறப்பாகவும், இயல்பாகவும் நடித்துள்ளனர் ஸீன் பென் மற்றும் டிம் ராப்பின்ஸ்.

படம் பார்க்கும் பொது அந்த முதல் காட்சி சம்மந்தமே இல்லாமல் இருக்கிறதே என நினைத்தேன், ஆனால் படம் நிறைவடையும் பொது இயக்குனர் அந்த  காட்சியை முதலில் காட்டியது எதற்கு என புரிந்தது. படத்தோட கடைசி டைலாக் மன நிறைவுனு சொல்லலாம். மிக சிறந்த நல்ல திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

Awards Won :
  • Academy Awards, USA 2004 - Oscar Award - Best Actor Sean Penn / Best Supporting Actor Tim Robbins
  • Art Directors Guild, 2004 - Excellence in Production Design Award - Production Designer Henry Bumstead /Art Director Jack G. Taylor Jr.
  • Blue Ribbon Awards, 2005 - Blue Ribbon Award - Best Foreign Language Film
  • Boston Society of Film Critics Awards, 2003 - BSFC Award - Best Ensemble Cast  / Best Picture
  • Broadcast Film Critics Association Awards, 2004 - Critics Choice Award - Best Actor Sean Penn / Best Supporting Actor Tim Robbins
  • Cannes Film Festival, 2003 - Golden Coach Award / Palme d'Or Award - Clint Eastwood
  • Casting Society of America, USA 2004 - Artios Award - Best Casting Phyllis Huffman / Best Location Casting Carolyn Pickman
  • Central Ohio Film Critics Association, 2004 - COFCA Award - Best Actor Sean Penn / Best Supporting Actor Tim Robbins / Best Supporting Actress Marcia Gay Harden.
  • Chicago Film Critics Association Awards, 2004 - CFCA Award - Best Supporting Actor Tim Robbins
  • Cesar Awards, France 2004 - Cesar Award - Best Foreign Film
  • Dallas-Fort Worth Film Critics Association Awards, 2004 - DFWFCA Award - Best Actor Sean Penn
  • Florida Film Critics Circle Awards, 2004 - FFCA Award - Best Actor Sean Penn / Best Supporting Actor Tim Robbins 
  • Fotogramas de Plata, 2004 - Fotogramas de Plata Award - Best Foreign Film
  • Golden Globes, USA 2004 - Golden Globe Award - Best Actor Sean Penn / Best Supporting Actor Tim Robbins
  • Kanas City Film Critics Awards, 2004 - KCFCC Award - Best Actor Sean Penn
  • Kinema Junpo Awards, 2005 - Kinema Junpo Award / Readers Choice Award - Best Foreign Film
  • Las Vegas Film Critics Society Awards, 2004 - Sierra Award - Best Actor Sean Penn
  • London Critics Circle Film Awards, 2004 - ALFS Award - Actor of the Year Sean Penn / Director of the Year Clint Eastwood
  • Mainichi Film Concours, 2005 - Mainichi Film Concours Award - Best Foreign Language Film
  • National Board of Review, USA 2003 - NBR Award - Best Actor Sean Penn / Best Film
  • National Society of Film Critics Awards, USA 2004 - NSFC Award - Best Director Clint Eastwood
  • PEN Center USA West Literary Awards, 2004 Literary Award - Best Screenpaly Brian Helgeland
  • Sant Jordi Awards, 2004 - Santa Jordi Award - Best Foreign Language Film
  • Satellite Awards,2004 - Golden Satellite Award - Best Actor Sean Penn / Best Screenpaly Brian Helgeland
  • Screen Actors Guild Awards, 2004 - Actor Award - Best Supporting Actor Tim Robbins
  • Seattle Film Critics Awards, 2003 - Seattle Film Critics Award - Best Supporting Actress Marcia Gay Harden
  • Southeastern Film Critics Association Awards, 2003 SEFCA Award - Best Supporting Actor Tim Robbins / Best Screenpaly Brian Helgeland
  • USC Scripter Award, 2004 - USC Scripter Award - Best Screenpaly Brian Helgeland / Author Dennis Lehane
  • URUGUAYAN Film Critics Association, 2003 - UFCA Award - Best Film
  • Vancouver Film Critics Circle,2004 - VFCC Award - Sean Penn
  • Washington DC Area Film Critics Association Awards, 2003 - WAFCA Award - Best Screenpaly Brian Helgeland

5 comments:

  1. படத்தின் கதையே நன்றாக இருக்கிறது,,அதை சிறப்பான முறையில் நல்ல எழுத்து நடையில் பதிவு செய்து இருக்கிறீகள்..
    படம் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்..பார்த்துவிட்டு விரைவில் சொல்கிறேன்..
    மற்றப்படி வழக்கம் போல சிறப்பான பதிவு நண்பரே..நான் தங்களது பெரிய ரசிகர்களில் ஒருவனாகி கொண்டிருக்கிறேன் என்பதே உண்மை..தொடரட்டும் தங்கள் பணி..நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. நச்சுன்னு நல்லா சொல்லியிருக்கீங்க. பதிவுக்கு நன்றி.

    இன்னும் எழுதுங்கள்.

    ReplyDelete
  3. Great movie from Clint Eastwood and a well written post.

    ReplyDelete
  4. அருண்,
    நல்ல அறிமுகம். இந்த படத்தை பத்தி கேள்விப்பட்டு இருகிறேன்..ஆனால் பார்த்து இல்லை...டவுன்லோட் பண்ணி இருகிறேன்..கண்டிப்பாக பார்த்து விட்டு என் கருத்தை சொல்கிறேன்..

    வழக்கம் போல் சஸ்பென்ஸ் உடைக்காமல் மிகவும் நன்றாக கதையை விளக்கி உள்ளேர்கள்......நல்ல விமர்சனம்...

    ReplyDelete
  5. அப்புறம் ஏற்கனேவே உங்களுக்கு சொன்னேனா என்று தெரியாது... மறுபடியும் சொல்கிறேன்... தவறாக நினைக்க வேண்டாம்..

    நீங்க என் உங்கள் பதிவை தமிழ்மணம் திரட்டியில் இணைக்க கூடாது... நிறைய பேரை நாம் பதிவு சென்று அடையும்...

    தமிழ்மனம் பதிவுப்பட்டையை பெற: http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html

    ReplyDelete