வால்ட் டிஸ்னியும், பிக்ஸார் அனிமேஷன் இணைந்து தயாரித்த இந்த திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஒரு நல்ல அனிமேஷன் படத்துக்கு அடையாளம், படம் பார்த்து கொண்டு இருக்கும்போது நம் பொம்மை படம் தான் பார்த்து கொண்டு இருக்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல்/மறந்து இருப்பது. அனிமேஷன்'ல இந்த மாதிரி நல்ல படங்கள் வழங்குவதில் பிக்ஸார் நிறுவனம் தான் முதன்மையா இருக்கு. (2006 இல் வால்ட் டிஸ்னி, பிக்ஸார் அனிமேஷன் ஸ்டுடியோஸ்'ணை $ 7.4 பில்லியன் விலைக்கு வாங்கிவிட்டது)
இந்த படத்தோட அனிமேஷன் நன்றாக இருக்கிறது, இதனுடன் நல்ல Creative'வான கதையும், நகைச்சுவையும் இணைந்து இந்த திரைபடத்தை, ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைபடமாக வழங்கி இருக்கிறது பிக்ஸார்.
இது ஒரு முழு நிழ நகைச்சுவை, அனிமேஷன் திரைப்படம். படம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரையிலும் சிரிப்பு வெடி தான். இது குழந்தைங்க படம் மட்டும் இன்றி, பெரியவங்களும் பார்த்து Enjoy பண்ணலாம்.
Directed By : Pete Docter.
மான்ஸ்டர்ஸ் ( பூதங்கள் ) வாழும் நகரத்தின் பெயர் Monstropolis. இந் நகரத்தில் மின் தட்டுப்பாடு காரணத்தால், மனித குழந்தைகளை பயப்படவைத்து, அதில் இருந்து பெறப்படும் Energy'ஐ பயன்படுத்தி, மின்சாரமாக மாற்றி உபயோகபடுத்துகிறார்கள், இதை செய்வது Monstropolis நகரத்தில் இருக்கும் ஒரே ஒரு நிறுவனம் மட்டும், அதன் பெயர் Monster, Inc.
Monster, Inc. தொழிற்சாலையில் மனித குழந்தைகளை பயமுறுத்துவதற்காக பயமுறுத்துபவர் (Scarer) என்னும்
மான்ஸ்டர்ஸ் பணியாட்கள் இருப்பார்கள். இவர்களது வேலை மனித குழந்தைகள் உறங்கும் அறைகளுக்குள் சென்று அவர்களை பயமுறுத்த வேண்டும், அவ்வளவுதான் மற்ற படி அங்கு இருக்கும் பொருட்கள் அல்லது குழந்தைகள் இவர்களின் மேல் பட கூடாது/தொட கூடாது. ஏன் என்றால், இவர்கள் மனித குழந்தைகளை நச்சு/விஷ (Contamination) தன்மை வாய்ந்தவர்களாக கருதுகிறார்கள்.
Monsters குழந்தைகளின் அறைகளுக்கு செல்வதற்காக Monster, Inc. தொழிற்சாலை, ஒவ் ஒரு குழந்தையின் அரை கதவையும் வடிவமைதிருப்பர்கள். அந்த கதவுக்குள் நுழைந்தால், எங்கோ இருக்கும் மனித குழந்தைகளின் அறைக்குள் இவர்கள் இருப்பார்கள்.
Voice By :
John Goodman - James P. Sulley Sullivan
Marry Gibbs - Boo
Steve Buscemi - Randall Boggs
James P. Sulley Sullivan என்னும் மான்ஸ்டர் தான் பயமுறுத்தும் பட்டியலில் (Top Sceamers) முதல் இடத்தில இருக்கிறது. இது நல்ல எண்ணம் கொண்ட மான்ஸ்டர், இதற்கு உதவியாளராக அதனுடைய நண்பன் Mike Wazowski உள்ளது. Randall Boggs என்னும் மான்ஸ்டர், பட்டியலில் இரண்டாம் இடத்தில உள்ளது, இது தீய எண்ணம் கொண்டது, பட்டியலில் முதல் இடத்திற்கு வருவதற்கு, சில தவறான விஷயங்கள் செய்கிறது.
Randall Boggs செய்யும் தவறினால் இரண்டு வயது மனித குழந்தை ஒன்று மான்ஸ்டர்ஸ் வாழும் Monstropolis நகரத்திற்கு தவறி வந்துவிடுகிறது, அந்த குழந்தையின் பெயர் BOO. இந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் மறுபடியும் திரும்பி கொண்டு போய் அதனுடைய அறையில் விட்டு விட முயற்சி செய்கிறது James P. Sulley Sullivan மற்றும் Mike Wazowski. இதை தடுக்கிறது கெட்ட எண்ணம் கொண்ட Randall Boggs.
Boo வை அதனுடைய அறையில் கொண்டு சென்று விட்டார்களா, என்பதை படத்தில் பாருங்க.
படத்தோட கடைசி காட்சி Door Chasing சூப்பரா இருக்கும். Sulley அந்த குழந்தைய Boo Boo அழைப்பது அவ்வளவு அழகா இருக்கும். Voice நல்ல பொருந்தி இருக்கு.
விமர்சனம் நன்று. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteநல்ல விமர்சன்ம்..வாழ்த்துக்கள்..
ReplyDelete