Rating : R
Genre : Action, Biography, Drama
Producer : Bak-Ming Wong Director : Wilson Yip Writter : Edmond Wong Music : Kenji Kawai Cinematography : Sing-Pui O Edited By : Ka-Fai Cheung Cast : Donnie Yen, Simon Yam, Siu-Wong Fan, Ka Tung Lam |
டோனி யேன் நடிச்ச இந்த ஆக்சன் படம், YIP MAN என்பவருடைய வாழ்கையில் நடைப்பெற்ற சரித்திரத்தின் ஒரு பகுதியை வைத்து திரைப்படமாகி உள்ளனர். YIP MAN தற்காப்பு கலையான WING CHUN என்ற ஸ்டைலில் மிகவும் தேர்சிப்பெற்றவர். புருஸ் லீ மற்றம் பல திறமையான மாஸ்டர்களின், கிரான்ட் மாஸ்டர் இவர் தான்.
கதை :
சீன நாட்டின், FOSHAN என்ற நகரத்தில் வாழ்ந்து வரும் IP MAN தற்காப்பு கலையான WING CHUN'னில் சிறந்து விளங்குகிறான். தன் மனைவி மற்றும் மகனுடன் சந்தோஷமாக வாழ்கிறான்.
ஜின் ஷன்ஷோ என்பவன் போஷன் நகரத்தில் இருக்கும் தற்காப்பு பள்ளிகளின் அணைத்து மாஸ்டர்களிடம் பந்தயமிட்டு சண்டையில் வெற்றிப் பெறுகிறான். IP MAN பற்றி தெரிந்துக் கொண்டு, IP MAN'னின் விட்டிற்கு சென்று சவால் விடுகிறான். IP MAN முதலில் சண்டையிடுவதற்கு மறுத்தாலும் பிறகு சண்டையிட்டு அவனை வெல்கிறான். (அதே நம்ம ஜாக்கி படமா இருந்தா அடிபட்டு, அசிங்கப்பட்டு ஓடிபோய்.....கத்துகுனு வந்து கடைசி காட்சியில எதிராளியிடம் சண்டையிட்டு ஜெயித்து இருப்பர். ஆனா இது ஒரு மனிதனுடைய வாழ்க்கை சரிதரப் படம் என்றதாலும், ஜாக்கி நடிகல என்றதாலும் இங்கயே ஹீரோ வெற்றிப் பெறுகிறார்) இதற்கு பிறகு அனைவராலும் அதிகமா மதிக்கப்படுகிறார்.
இதன் பிறகுதான் படம் கதைக்கு வருது, 1937'ஆம் ஆண்டு நடைபெறும் போரில் ஜப்பான், சீனா மிது படையெடுத்து வெற்றிபெற்று போஷன் நகரத்தை தனது தலைமையகமாக வைத்துக்கொள்கிறது. IP MAN தனது சொத்துக்களை எல்லாம் இழந்து ஜப்பானியர்களின் நிலகரி சுரங்க குடோனில் கூலியாக வேலைசெய்கிறான்.
ஜப்பானிஸ் ஜெனரல் MIURA, தற்காப்பு கலையான KARATE'வில் மாஸ்டர். ஜெனரல் MIURA ஜப்பானியர்களுக்கும், சீனர்களுக்கும் சண்டை போட்டிகள் நடத்துகிறார் அதில் வெற்றி பெரும் சீனர்களுக்கு ஒரு சிறிய பையளவு அரிசி பரிசாக வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் போட்டிகளில் கலந்துக்கொள்ளலாம். இந்த போட்டியில் கலந்துக்கொள்ளும் IP Man'னின் நண்பன் திரும்பி வராததினால் அடுத்த நாள் போட்டி நடைபெறும் இடத்திருக்கு IP Man செல்கிறார்.............. இதற்கு மேல் அதிரடி ஆக்சன் தான். (வாட்ச் & என்ஜாய்)
சமோ ஹங் பற்றி கண்டிப்பா எல்லோருக்கும் நல்ல தெரிஞ்சி இருக்கும், இவர் தான் இந்த படத்தின் பைட் கோரியோக்ராபர் (Fight/Action Master). வித்யாசமான ஸ்டைல்'லில் சிறந்த சண்டை காட்சிகளை அமைத்து இருக்கிறார் (கவலை பட தேவ இல்லை...இந்த படத்துல கயிறு கட்டி பறந்து பறந்து சண்டை போடும் காட்சிகள் எதுவும் இல்ல). டோனி யேன் பாடி ஸ்டைல் ஏற்றவாறு பக்காவா இருக்கு சண்டை காட்சிகள். முக பாவனைகளும் நல்ல பண்ணி இருக்காரு. படத்தின் டைரக்டர் வில்சன் யிப், பல நல்ல ஆக்சன் படங்களை தந்துள்ளார். அதில் Bullets Over Summer, Kill Zone, Flash Point போன்றவை சில.
சண்டை காட்சிகளுக்கு பின்னணி இசை கன கட்சிதமாக பொருந்தி உள்ளது. காமெராவும் அழகு, நல்ல ஆக்சன் படத்துக்கு ஏற்றவாறு படம் பிடித்து இருகாங்க. ஆக்சன் படம் விம்புபவர்கள் மட்டும் இன்றி அனைவரும் பார்க்கவேண்டிய ஒரு சிறந்த திரைப்படம். இந்த படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகமும் வெளிவந்தது. நீங்க ஆக்சன் படம் பார்பவர்கள் என்றால் இதன் தொடர்ச்சி பாகங்களையும் பார்க்கலாம், ஆனால் ஒன்றாம் பாகம் போல நல்ல கதை அம்சத்துடன் சேர்ந்த படம் அல்ல மற்றவை.
படத்தில் ஒரு காட்சியில் IP Man, பத்து Black Belt நபருடன் சண்டையிடுவது போல் ஒரு காட்சி, பார்க்கிற நம்மக்கு கண்டிப்பா ஹைபர் டென்ஷன் ஆகும். அதே காட்சியில் நான்கு பேரிடம் சண்டையிடுவது போல் வரும் அந்த சில நிமிடங்கள் கலக்கல்.
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க்கோ..வந்துடறேன்..
ReplyDeleteதங்களை இந்த திரை விமர்சனம் - எழுத்து நடை பாணியில் இன்னொரு பரிணாமத்துக்கு கொண்டு சென்றுவிட்டது. என்றே நினைக்கிறேன்..அவ்வளவு சிறப்பான விமர்சனம்....சிறப்பு என்பதை தாண்டி ஆவலை துண்டும் வரிகள்..சுவாரஸ்ய துளிகளை மேலோட்டமாக அள்ளி கொடுத்துள்ளீர்கள்...கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்தான் என்று நினைக்கிறேன்..இதை முன்னமே நீங்கள் என்னிடம் சொல்லிவிட்டீர்கள்..நான்தான் விமசர்னம் வரட்டும் அப்புறம் பார்க்கலாம் என்று இருந்துவிட்டேன்..இனி அடுத்த வேலையாக டவுன் லோடு போட்டு விடுகிறேன்..விரைவில். என் நன்றிகளும் பாராட்டுக்களும்..
ReplyDeleteதொடரட்டும் தங்கள் பணி..இன்னும் நல்ல படங்களை என்னை போன்ற ரசிகர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteவித்தியாசமான படமொன்றை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறீர்கள், நன்றி முரட்டுசிங்கம்!
ReplyDeleteஎனக்கு இந்த தற்காப்புகலை-டைப் படங்கள் ஒத்துவருவதில்லை. அதான் சின்ன சிக்கல்..
இருந்தாலும் Kill Zone பார்த்திருக்கிறேன். அதே டைரக்டர் படங்கறதால பார்க்க முயற்சிக்கிறேன்!
Kumaran said...@
ReplyDeleteநன்றி குமரன், முடிந்த வரை நல்ல திரைப்படங்களை அறிமுகப்படுத்த முயற்சிசெய்கிறேன்.
JZ said...@
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் என் நன்றிகள்.
Kill Zone, அதே கூட்டணியில் வந்த திரைப்படம் தான். இது ஆக்சன் படம் மட்டும் இன்றி உலக சினிமாவும் கூட (அப்படி தான் நினைக்கிறன்). கண்டிப்பாக பாருங்கள் Kill Zone விட பேட்டர இருக்கும்.
எனக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்கள் அவ்வளவாக ஒத்துக்காது. ஏன்னா நம்ம காப்டன் மாதிரி பறந்து பறந்து அடிக்கிறனால தான். இதுல அப்படி ஒன்னும் இல்லன்னு சொல்லியிருக்கீங்க. IP Man 1, IP Man 2 இரண்டும் இருக்கு. பார்க்க முயற்சிக்கிறேன்.
ReplyDeleteஹாலிவுட்ரசிகன் said...@
ReplyDeleteபடம் பாருங்க கண்டிப்பா பிடிக்கும். நல்ல கதையுடன் சேர்ந்த ஆக்சன் படம் தான்.
மிகவும் அருமையான படம்....நல்ல விமர்சனம்.... மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்களில், இது உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட மிகவும் மாறுபட்ட படம்...
ReplyDeleteஇபொழுது இந்த படத்தை குரு-2 என்று டப்பிங் செய்து தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்து இருக்கிறார்கள்......தமிழ் ரசிர்கள் இதை கண்டு களிக்க....
கடைசியில நீங்களும் தமிழ் மனதுக்கு வந்துட்டேங்க.....வாழ்த்துக்கள்.. :)
ராஜ் said...@
ReplyDeleteதகவலுக்கு நன்றி ராஜ், அப்போ படத்த தமிழ்ல பார்த்து என்ஜாய் பண்ணலாம்.
தமிழ் மனம் ஓட்டு பட்டையை முன்பே நான் ப்ளாகில் வைத்தேன், பதிவுகளை தமிழ் மனதில் இணைக்க முடியாததினால் அதை எடுத்து விட்டேன். பிறகு நீங்க எல்லோரும் பதிவை இணைக்க வழி முறைகள் கூறியதால் முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் இணைப்பதில் இன்னும் பிரச்சனைகள் உள்ளது. (தமிழ்மணம் நிர்வாகம் எனது ப்ளாகை இணைத்து கொள்ளவில்லை என்று நினைக்கிறன், இல்லை வேற எதனா பிரச்சனை இருக்கலாம்)
@ அருண்....
ReplyDeleteநான் உங்களின் இந்த பதிவை தமிழ் மனதில் இணைக்க முயற்சி செய்தேன்.... ஆனால் இது போல் வருகிறது..
//உங்களின் இந்தப் பதிவு ஏற்கனவே தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு உள்ளது//
தமிழ்மணத்தில் பதிவை இணைப்பதில் பிரச்சனை ஏற்பட்டால்.. இந்த லிங்கை முயற்சி செய்து பார்க்கவும்...
http://www.bloggernanban.com/2010/12/blog-post.html
இது நல்ல ப்ளாக்..நிறைய பயனுள்ள தகவல் உள்ளது....
அது போக தமிழ் மனம் உங்கள் ப்ளாக்கை மனதில் இணைத்து விட்டால்...ஒரு மெயில் அனுப்புவார்கள்....
இல்லை என்றால் உங்கள் ப்ளாக் pipelineயில் இருபதாக அர்த்தம..
அதை செக் செய்ய
http://www.tamilmanam.net/user_blog_status.php
இதில் உங்கள் ப்ளாக் இல்லை அதனால் அவர்கள் ஏற்று கொண்டு விட்டார்கள் என்று தான் அர்த்தம்....
இரண்டாம் பாகம் பார்த்துவிட்டீர்களா? கடந்த மாதம் சென்னையில் ரிலீஸ் ஆனது.
ReplyDeleteசாவியின் தமிழ் சினிமா உலகம்
ருத்ரபூமி 10-02-2012 Journey 2: The Mysterious Island திரை விமர்சனம்
நன்றி ராஜ்,
ReplyDeleteநானும் நிறைய முயற்சி செஞ்சி பார்த்துட்டேன், ஏதும் வேலைக்கு ஆகல.
ப்ளாகர் நண்பன், வந்தேமாதரம் மற்றும் சில பதிவர்களின் பதிவினால் தான் நிறைய தெரிந்து கொண்டேன், ஆனால் இந்த பிரச்சனைக்கு தீர்வு எதுவும் இல்லை என நினைக்கிறன்.
எதுனா வழிகள் (இணைபதற்கு) இருந்தது என்றால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கவும்.
சாவி said...@
ReplyDeleteஇரண்டாம் மற்றும் மூன்றாம் பாகம் கூட பார்த்துவிட்டேன். இரண்டும் பரவ இல்லை என்ற ரகம்.
நல்ல விமர்சனம் அருண். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteநண்பா தங்களூக்கு உலக சினிமாவில் விருப்பம் அதிகம் என் நினைக்கிறேன். எனது உற்ற தோழன் ஆங்கலத்தில் உலக சினிமா குறித்து அற்புதமாக தொடர்ந்து எழுதி வருகிறார். நீங்களும் சென்று வாசிக்கலாம், movieretrospect.blogspot.com எனும் முகவரியில். சக உலக சினிமா ஆர்வலர்களுகும் இதனைப் பகிருங்கள்.
ReplyDeleteநண்பரே சீக்கிரமே ஒரு பதிவ போடுங்க
ReplyDelete