Thursday, July 5, 2012

தி கான்வர்சேஷன் (1974) விமர்சனம்


   
த்ரில்லர் வகையை சார்ந்த இத்திரைப்படம் Frank Ford Coppola'வின் இயக்கத்தில் உருவானது. 1966'ஆம் ஆண்டு வெளிவந்த Blow up என்ற திரைப்படத்தின் கருவை மட்டும் வைத்து Frank Ford Coppola உருவாக்கியது தான் 'தி கான்வர்சேஷன்'.  Coppola'வின் இயக்கத்தில் வெளிவந்த 'தி காட்பாதர்' ஒன்றாம் பாகம் (1972) மற்றும் இரண்டாம் பாகம் (1974) இடையில் 1974'ஆம் ஆண்டு வெளிவந்த 'தி கான்வர்சேஷன்' திரைப்படம் அணைத்து தரப்பினராலும் பாராட்டுக்கள் பெற்றது. 


Rating : PG
Genre : Drama, Mystery, Thriller

Written, Directed and Produced By : Francis Ford Coppola
Music : David Shire
Cinematography : Bill Butler and Haskell Wexler
Edited By : Richard Chew
Cast : Gene Hackman, John Cazale, Allen garfield, Frederic Forrest, Cindy Williams and Harrison Ford


Gene Hackman மிகவும் நேர்த்தியான முறையில் ஒலியை பதிவு செய்யும் திறமையான சர்வைலன்ஸ் தொழில் நடத்திவரும் Hari Caul  என்ற கதாபத்திரத்தில் நடித்துள்ளார். சாதாரணமான நேரத்திலும் ரெயின் கோட் அணிந்தே வெளியில் செல்லும் பழக்கமுடையவர். யார் மேலும் அதிக நம்பிக்கை வைக்காமல், பிரம்மை பிடித்தவர் போல் எதிலும் ஒரு தனித்தன்மையோடு நடந்துக்கொள்ளும் Caul தனக்கென நிறைய விதிமுறைகளை வகுத்துக்கொண்டு அந்த வழியில் வாழ்பவர். அவருடைய விட்டில் இருக்கும் தொலைபேசியை உபயோகப்படுத்தாமல், பொது தொலைபேசியில் உபயோகப்படுத்தும் பழக்கம் உடையவர்.  


அதே போல் அவருடைய தொலைபேசி எண்ணை வாடிக்கையாளர் யாருக்கும் தராமல், இவரே அவர்களை பொது தொலைபேசியில் இருந்து அழைக்கும் பழக்கம் உடையவர். தனிமையாக வாழும் இவர், தானே தயாரித்த ஒலியை பதிவு செய்யும் கருவியை கண்டுபிடித்து அதேயே உபயோகப்படுத்துவார். படத்தின் கதை இவருடைய கோணத்தில் இருந்து சொல்லப்படுவது போல அமைத்திருப்பார்கள்.


படத்தின் ஆரம்பம் காட்சி, மதிய உணவு நேரத்தில் கூட்டம் மிகுந்த ஒரு சதுக்கத்தில் இருவர் (ஒரு ஆண் மற்றும் பெண்) பேசும்  அந்த உரையாடலை Caul அவருடைய பணியாட்களுடன் இணைந்து உரையாடலை பதிவுச் செய்கிறார். வெவ்வேறு கருவிகளில் பதிவு செய்த அந்த உரையாடலை இணைத்து, அந்த ஒலி நாடாவில் பதிந்து இருக்கும் மற்ற ஒலிகளை அகற்றி அந்த இருவரின் உரையாடலை மட்டும் மிகத் துல்லியமாக ஒரு ஒலி நாடாவில் பதிவுச் செய்கிறார் Caul. 

Caul'லிற்கு இந்த பணியை கொடுத்த உரிமையாளரின் உதவியாளர்  Martin Stett'டிடம்  ஒலி நாடாவை ஒப்படைக்க மறுத்து அதனை திரும்பி எடுத்துக் கொண்டு வந்துவிடுகிறார். அதே கட்டிடத்தில், சதுக்கத்தில் உரையாடிய அந்த இரண்டு பேரையும் பார்க்கும் Caul'லிற்கு சந்தேகம் அதிகமாகிறது. அந்த ஒலி நாடாவை திரும்ப திரும்ப கேட்கும் Caul, எதோ விபரிதம் அந்த உரையாடலில் இருப்பதாய் உணர்கிறார்.  Caul'லிற்கு இந்த உரையாடலை முழுமையாக அறிந்துக்கொள்ளும் ஆவல் அதிகமாகிறது.

அந்த இருவரின் உரையாடலின் முடிவில் வரும் இந்த ''He'd kill us if he got the chance'' என்பதின் முழுமையான அர்த்தம் Caul'னால் யூகிக்க முடியவதில்லை. அதே சமயம் உதவியாளர்  Martin Stett அந்த ஒலி நாடாவை Caul'லிடம் இருந்து திருடிக் கொண்டு சென்று, அதை தனது முதலளியாடும் கொடுத்தும் விடுகிறார். Caul'லிற்கு வந்து சேரவேண்டிய பணமும் சரியாக கொடுத்துவிடுகிறார் Martin Stett'ன் முதலாளி. Caul'லிற்கு அந்த இருவருக்கும் என்ன நடக்கப்போகிறது என்ற கவலை அதிகமாகிறது.......படத்துல ஒரே ஒரு ட்விஸ்ட் தான், அது தான் படத்தோட கிளைமாக்ஸ். 

Coppola'வின் சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று. கதை நிதானமாக நகர்ந்தாலும் மிக சிறந்த 'மிஸ்ட்ரி' திரைப்படங்களின் மாஸ்டர்பிசாக இன்றளவிலும் உள்ளது. படத்தோட பின்னணி இசை படத்திற்கு மிகப் பெரிய பலம். Gene Hackman நடித்ததில் அவருக்கு பிடித்தது இந்த படம் தான். இந்த படத்துக்காக Gene Hackman உண்மையிலேயே saxophone வாசிக்க கற்றுக்கொண்டார். 1966'ஆம் ஆண்டே Coppola இந்த கதைய ரெடி பண்ணிட்டாரு, The Godfather வெற்றிக்கு பிறகுதான் இந்த படத்தை எடுத்தாரு. IMDB'யில் 8 மதிப்பெண்ணும் ரோட்டேன் டோமொட்டோ'வில் 98 சதவித  மதிப்பெண்ணும்  இந்த படத்துக்கு கிடைச்சி இருக்கு. 



13 comments:

  1. ரொம்ப நாளா சிஸ்டத்துல தூங்கிட்டு இருக்குற படம்.., சீக்கிறம் பாக்கணும் ... :)

    ReplyDelete
    Replies
    1. Nice Article Bro Also You can see This
      Top 25 Tamil Movies Download Website

      Super Article Bro இதுவும் உங்களுக்கு உதவியாக இறுக்கும் நீங்கள் வளர வாழ்த்துக்க்கள் தமிழ் படங்களை பார்க்க 25 website Tamil Movies Website

      Delete
  2. முதல ரொம்ப நாளைக்கு அப்புறம் நீங்க பதிவு எழுதியாதற்கு என் வாழ்த்துக்கள் நண்பரே...
    The Conversation படத்தை பத்தி ரொம்பவே அழகா சொல்லி இருக்கேங்க...படத்தோட ப்ளாட் எனக்கு ரொம்பவே பிடிச்சு இருக்கு......
    Coppola ரொம்பவே நல்ல டைரக்டர்.. கண்டிப்பாய் பார்கிறேன்....
    பாஸ்...படம் ப்ளக் & வைட் படமா ...????

    ReplyDelete
  3. விமர்சனம் அருமை அருண். ஆனாலும் இந்த படத்தோட விமர்சனம் எழுதுறத்துக்கா அஞ்சு மாசம் இடைவெளி? அவ்வளவு கேப் விடாம மாசத்துக்கு அஞ்சு பதிவாவது எழுதுங்க. Because, 'மறதி' நம்ம தேசிய வியாதி. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. மிஸ்டரி படங்கள் என்னோட பேவரிட். இந்தப் படத்தோட கதையும் ரொம்ப இன்டிரஸ்டாகவே இருக்கு! கண்டிப்பா செக் பண்ணிக்கறேன்..

    ReplyDelete
  5. ரொம்ப நாள் கழிச்சு கொடுத்த ரீ-என்ட்ரீக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள். சீக்கிரம் இன்னும் நிறைய நல்ல படங்களை அறிமுகப்படுத்துங்க.

    மிஸ்ட்ரி த்ரில்லர்ல நிறைய இன்ட்ரஸ்ட் இருக்கு. இப்பத் தான் ஃபார்கோ பார்க்க ஆரம்பிச்சேன். ஞாயிற்றுக்கிழமை போல இதை டவுன்லோட் செய்து வைக்கிறேன். ரொம்ப கேப் விடாம அடிக்கடி எழுதுங்க தல. :)

    ReplyDelete
  6. பிளோ அப் --- அந்தோனியோனி பண்ண படங்களில் நான் பார்த்து மிரண்ட படம்..ஒரு நிஜமான "மாஸ்டர்பீஸ்"..பல சினிமா லீலைகளை புகுத்தி மூளைக்கு வேலை கொடுத்த படம்..
    அந்த படத்தின் அம்சத்தை எடுத்துக்கொண்டு உருவான படமாக இதை சொல்றீங்க.படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை முன்னாடியே தோன்றியது,,இருந்தும் பார்க்காமல் விட்டுப்போன மூவிஸில் இதுவும் ஒன்று..கட்டாயம் தரிசிக்கிறேன்.
    விமர்சனம் ரொம்பவும் புதுமையா இருக்குது..நீங்க ரிஎண்டிரி கொடுத்ததும் ரொம்ப ஃப்ரெஷா இருக்கு..மேலும் எழுதுங்க.நன்றி.

    ReplyDelete
  7. விமர்சனம் அருமை.
    கண்டிப்பாக படம் பார்கிறேன்.
    சமயம் கிடைக்கும் போது நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க.
    http://dohatalkies.blogspot.com/2012/07/12-angry-men.html

    ReplyDelete
  8. விமர்சனம் சுவாரசியமா இருக்கும் போதே, படம் நல்ல இருக்கும் என்று நினைகிறேன்.
    இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிடுகிறேன்.
    தொடர வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  9. உங்கள் பதிவை இப்போதுதான் படிக்கிறேன்.
    இனி தொடர்ந்து வருகிறேன்.நிறைய எழுதுங்கள்.
    நன்றி.

    ReplyDelete
  10. விமர்சனம் அருமை அருண்

    Nattu Marunthu Kadai

    ReplyDelete