Thursday, October 27, 2011

Triangle (2009) விமர்சனம்.



'Triangle' திரைப்படம் பிரிட்டன் இயக்குனர் 'கிறிஸ்டோபர் ஸ்மித்' இயக்கத்தில் 2009 ஆம் வெளியானது. இது ஒரு 'Psychological Horror' வகையை சார்ந்த திரைப்படம். 'The Amityville Horror', 'Derailed' மற்றும் '30 Days of Night' போன்ற திரைப்படங்களில் நடித்த 'Melissa George' இத்திரைப்படத்தில் 'Jess' என்னும் கதாபதரத்தில் நடித்துள்ளார்.

இந்த ஹாரர் திரைப்படம் 'Mind Twister' அல்லது 'Mind Bending' எனப்படும் கதைக்களத்தில் அமைந்த மிகவும் அற்புதமான திரைக்கதையை கொண்டது. சில கொடூர கட்சிகள் உள்ள இத்திரைப்படம், த்ரில்லர், சஸ்பன்ஸ் விரும்புபவர்களுக்கு, நல்ல ஒரு ஹாரர் (Favourite) திரைப்படமாக  அமையும்.


Genre : Mystery, Thriller, Drama
Written & Directed By : Christopher Smith
Produced By : jason Newmark, julie Baines, Chris Brown
Cinematography : Robert Humphreys
Music By : Christian  Henson
Edited By : Stuart Gazzard
Cast : melissa George, Joshua Mclvor, Jack Taylor, Michael Dorman, Henry Nixon, Rachael Carpani, Liam Hemsworth, Bryan Probets

கதை : 

Jess, என்பவள் சில நபர்களுடன் சேர்ந்து, ஒரு சிறு படகில் ஒரு நாள் கடல் பயணம் (Trip) செய்கிறாள். அப்பொழுது ஏற்படும் காந்த புயலால், கடல் கொந்தளிப்பில் படகு சிக்கிகொள்கிறது. ஒருவரை தவிர மற்றவர்கள் எல்லாம் பிழைத்து கொண்டு, அந்த இடத்திற்கு அருகில் வரும் கப்பலுக்குள் செல்கிறார்கள். முகமூடி அணிந்த ஒரு உருவத்தால், கப்பலில் ஒவ் ஒருவராக கொல்லப்படுகிறார்கள்.....
சில காட்சிகளுக்கு பிறகு,
ஒரு சிறிய படகு மறுபடியும் கப்பலை நோக்கி வருகிறது.....



அந்த முகமூடி அணிந்த உருவம் யார், எதற்காக இவர்களை கொலை செய்கிறது, அந்த சிறு படகில் வந்தவர்கள் யார். வந்தவர்களுக்கு என்ன ஆனது, Jess பிழைத்து கொண்டாலா, இது போன்ற நிறைய கேள்விகளுக்கு படத்தை பார்த்து விடை தெரிந்து கொள்ளவும்.

படத்தோட முடிவு தான், படத்தோட ஆரம்பம். 

ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பிக்கும் திரைக்கதை, காட்சிகள் செல்ல செல்ல மிகவும் வேகம் பிடித்துவிடும். படத்தில் நிறைய 'Clues' உள்ளது, டயலாக்'கை கவனிக்கவும். இந்த படத்திற்கு கதை விமர்சனமே படிக்க வேண்டியது இல்லை. ஏன் என்றால் அதுவே நிறைய சஸ்பன்ஸ்'ஐ உடைத்துவிடும். ட்ரைலர் கூட பார்க்கதேவை இல்லை, அதிலும் சில சஸ்பன்ஸ் உடைத்துவிடுகிறார்கள். அதனால் தான் நான் எவ்வளவு சிறிதாக முடியுமோ அவ்வளவு சிறிதாக எழுதி உள்ளேன்.

Melissa George உடைய நடிப்பு மிகவும் அருமை. 

Creep, Severance போன்ற ஹாரர் திரைபடங்களி இயக்கிய கிறிஸ்டோபர் ஸ்மித், தான் இந்த கதையையும் எழுதி இயக்கியது.


6 comments:

  1. அருமையான கச்சிதமான விமர்சனம் நன்பரே..சொல்ல வந்ததை அழகாக சொல்லிருக்கிறீர்கள்..படம் இன்னும் பார்க்கவில்லை..பார்க்க ஆவலை தூண்டும் எழுத்துக்கள்..தந்ததற்க்கு மிக்க நன்றி..வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அருண், தியேட்டர்ல போய் இந்த படத்த பாத்து தலை சுத்தி கீழ விழாத குறையா வெளிய வந்தேன்..
    என்னடா இது, முத ரீல திரும்பவும் போடா ஆரம்பிசுட்டாங்களான்னு எனக்கு டவுட் வேற... :-)
    சத்தியமா எனக்கு இந்த படம் இன்ன வரைக்கும் புரியல..
    இது ஒரு வித்தியாசமான படம் தான்.. ஆனா புரிஞ்சுக்குற அளவுக்கு எனக்கு பொறுமையோ அறிவோ இல்லேன்னு நெனைக்கிறேன்.. :-)

    ReplyDelete
  3. kumaran @
    நன்றி குமரன்.

    ReplyDelete
  4. பிரசன்னா கண்ணன் @
    ''என்னடா இது, முத ரீல திரும்பவும் போடா ஆரம்பிசுட்டாங்களான்னு எனக்கு டவுட் வேற... :-)
    சத்தியமா எனக்கு இந்த படம் இன்ன வரைக்கும் புரியல..''
    நானும், முதல் ரீல் கடைசி காட்சில காடப்படும் பொது, சொதப்ப போராங்களோ நினைத்தேன்! ஆனால் நல்லாத்தான் இருந்தது. (தமிழ் படத்துல சம்மந்தமே இல்லாமல் கடைசில ஹீரோ இறந்துடுவரே, காதல் திரை படங்களில்...... அதே போல் தான் இருந்தது இதுவும்).

    ''இது ஒரு வித்தியாசமான படம் தான்''
    வித்தியாசமான படம்தான். ஆனால் சிலருக்கு பிடிக்காமல் போகலாம்.

    ReplyDelete
  5. ஏன் சார் இப்டி பண்றீங்க.. தியேட்டரில் போய் படம் பார்த்து மீதியைத் தெரிந்து கொள்ளுங்கள்ங்கிற மாதிரி சொல்றீங்களே.. அந்த டிவிடிக்கு நாங்க எங்க போறது.

    இந்த பத்திரிக்கைக்காரங்க தான் வாங்குன காசுக்கு கரெக்டா தியேட்டருக்கு அனுப்ப எழுதுறாங்கனா? நீங்க என்னடான்னா.. டிவிடிக்கு விற்பனை பிரதிநிதி ஆயிடுறீங்களே.. தயவு செஞ்சு கிளைமேக்ஸயும் எழுதுங்க.. படிச்ச பீலே இல்லாமப் போயிடுது.

    ReplyDelete